அபிராமி
அந்தாதி -12
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
வெள்ளி அக்டோபர் 11, 2024
ஆன்மீக
அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை
பதினொறு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் பன்னிரெண்டாவது பாடலைப் பார்ப்போம்.
நேற்றைய
பாடலில் அம்பாளின் பெருமைகள சொல்லிய பட்டர் இறுதியாக அம்பாளின் திருவடிகள் பரமேஸ்வர்
ரின் முடிமீது மாலையாக இருப்பதைச் சொன்னார்
இன்றைய
பன்னிரெண்டாம் பாடலில் அம்பாளை மனம் ,மொழி, மெய்யால் வழிபட்டு நிற்பதற்கு நான் என்ன
புண்ணியம் செய்தேனோ என்று விளம்புகிறர்
கண்ணியது உன்புகழ், கற்பது உன் நாமம்,கசிந்து பத்தி பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்,பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த புண்ணியம் ஏது? என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.
கண்ணியது உன்புகழ் |
நான் எப்போதும் பாடல்கள் கொண்டு பாடுவது உன் புகழ் |
கற்பது உன் நாமம் |
நான் எப்போதும் கற்பது உன் நாமம் |
கசிந்து பத்தி பண்ணியது |
என் மனம் கசிந்து பக்தி பண்ணுவதோ |
உன் இருபாதாம் புயத்தில் |
பண்ணுவதோ உன் இரு திருவடித் தாமரைகளில் |
பகல் இரவா நண்ணியது |
நான் பகலும் இரவும் விரும்பிச் சேர்ந்திருப்பது |
உன்னை நயந்தோர்
அவையத்துநான் |
உன்னை விரும்பும் அடியார் கூட்டத்துடன். |
நான் முன்செய்த புண்ணியம் ஏது? |
இப்படி செய்ய வேண்டியவைகளையே உன் அருளால் செய்கிறேனே. நான் என்ன புண்ணியம் செய்தேன்? |
என் அம்மே |
– என் தாயே |
புவி ஏழையும் பூத்தவளே. |
ஏழு உலகையும் பெற்றவளே. |
(உரை): என் தாயே, ஏழுலங்களையும் பெற்ற தேவியே, அடியேன் கருதுவது உன் புகழ்; கற்பது உன்னுடைய நாமம்; மனமுருகிப் பக்தி செய்வது, உன் இரண்டு திருவடித்தாமரை
மலர்களிலேதான்: பகலும்
இரவுமாகப் பொருந்தியது, உன்னை விரும்பிய
மெய்யடியார்களது கூட்டத்தில்; இவ்வளவுக்கும் காரணமாக அடியேன் முன்
பிறவிகளில் செய்த புண்ணியச் செயல் யாது?
விளக்கம்: என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித்
தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன்
அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன்
.நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன்
அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும்
பாத்திரமாகுங்கள்
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
வெள்ளி,அக்டோபர் 11, 2024
No comments:
Post a Comment