ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
வியாழன்
28 நவம்பர் 2024
ஆன்மீக
அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை
இருபத்து ஏழு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் இருபத்து எட்டாவது பாடலைப் பார்ப்போம்.
இந்த
பாடலில் அம்பாளின் கருனையினால் இவ்வுலக இன்பங்களும் ராஜபோக வாழ்வும் கிடைப் பதையும்
பரலோக ப்ராப்தியும் கிடைப்பதை விளக்குகிறார்
28.
இம்மை மறுமை இன்பங்கள் அடைய
சொல்லும் பொருளும் என,
நட
மாடும் துணைவருடன்
புல்லும்
பரிமளப் பூங்கொடியே,
நின்
புதுமலர்த்தாள்
அல்லும்
பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும்
தவநெறியும்,
சிவலோகமும்
சித்திக்குமே.
சொல்லும்
பொருளும் என |
ஒவ்வொரு
சொல்லிலும் அந்தச் சொல்லின் பொருள் எப்படி இயைந்து இணைந்து கூடி இருக்கிறதோ அது
போல் |
நடம்
ஆடும் துணைவருடன் |
ஆனந்த
நடனமாடும் உன் துணைவராம் சிவபெருமானுடன் |
புல்லும்
பரிமள |
இணைந்து
ஓருடலாய் நிற்கும், மணம்
வீசும் |
பூங்கொடியே |
அழகிய
பூங்கொடி போன்றவளே! |
நின்
புதுமலர்த்தாள் |
அன்றலர்ந்த
தாமரை போன்ற உனது இரு திருவடிகளை |
அல்லும்
பகலும் தொழும் |
இரவும்
பகலும் எப்போதும் தொழும் |
அவர்க்கே |
அடியார்களான
அவர்களுக்கே |
அழியா
அரசும் |
என்றும்
அழியாத அரச போகமும் |
செல்லும் |
உன்
திருவடிகளை அடைந்து |
தவநெறியும் |
முக்தி
பெறும் வழியான தவநெறியும் |
சிவலோகமும் |
அந்தத்
தவத்தின் பயனான சிவலோக முக்தியும் |
சித்திக்குமே |
கிடைக்கும். |
உரை
ஆனந்தத் தாண்டவம் செய்தருளும் நாயகராகிய நடராஜ மூர்த்தியுடன் சொல்லும் பொருளும்போல இணைந்து நிற்கும் மணமலர்க் கொடிபோன்றாய், நின் நாள் மலர்போன்ற திருவடிகளை இரவும் பகலும் தொழுகின்ற தொண்டர்களுக்கே அழியாத அரச பதவியும், என்றும் நடைபெறும் தவ வாழ்க்கையும், சிவலோக பதவியும் கிடைக்கும்.
விளக்கம்:
தூய்மையான சொல்லோடு இணைந்த பொருள் போல ஆனந்தக் கூத்தாடும் துணைவருடன் இணைந்து நிற்கும் மணம் வீசுகின்ற அழகிய பூங்கொடி போன்றவளே! அன்றலர்ந்த பரிமள மலரைப் போல உள்ள உன் திருவடிகளை இரவென்றும், பகலென்றும் பாரமால் தொழுகின்ற அடியார் கூட்டத்திற்கே என்றும் அழியாத அரச போகமும், நல்ல மோட்சத்திற்கான தவநெறியும், சிவபதமும் வாய்க்கும்.
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும்
அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு
மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
வியாழன்
28 நவம்பர் 2024
No comments:
Post a Comment