ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
புதன், நவம்பர்
6, 2024
ஆன்மீக
அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை
இருபது பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று
நாம் இருபத்தொன்றாவது பாடலைப் பார்ப்போம்.
முந்தைய
இருபத்தொன்றாவது பாடலில் அம்பாளின் அங்க அழகையும்
வண்ணங்களையும் விவரிக்கின்றார் என்பதைப் பார்த்தோம்.
இன்று
இருபத்தி இரண்டாவது பாடலில் அம்பாள் கொடி போன்று இருந்து தன்னை ஆட்கொண்தையும்,தனக்கு
இனி பிறவா வரம் வேண்டும் என வேண்டுகின்றார்.
கொடியே, இளவஞ்சிக் கொம்பே, என க்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே,பனி மால் இமயப் பிடியே,
பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே, அடியேன்
இறந்திங் கினிப்பிற வாமல்வந் தாண்டுகொள்ளே.
பொருள்:
கொடியே – கொடி போன்றவளே!
இளவஞ்சிக் கொம்பே –
இளமையான வஞ்சிக் கொம்பே!
எனக்கு வம்பே பழுத்த படியே – தகுதியில்லாத எனக்குத் தானே காலமில்லாத காலத்தில் பழுத்த பழம் போல் அருள் செய்தவளே!
மறையின் பரிமளமே – வேதங்களின் மணமே!
பனி மால் இமயப் பிடியே – பனி உருகும் இமயத்தில் இருக்கும் பெண் யானையே!
பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே – பிரமன் முதலிய தேவர்களைப் பெற்ற அன்னையே!
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் அடியேன் இப்பிறவி முடிந்து இறந்த பின் மீண்டும் இங்கே வந்து பிறக்காத படி
வந்து ஆண்டு கொள்ளே – உன் அடி நிழலைத் தந்து ஆட்கொள்ள வேண்டும்.
உரை
கொடி போன்றாய், இளைய வஞ்சிப்
பூங்கொம்பை ஒத்தவளே, எனக்குக் காலமல்லாத
காலத்திலே பழுத்த திருவுருவே, வேதமாகிய மலரின் மணம்
போன்றாய், குளிர்ச்சியையுடைய
பெரிய இமாசலத்தில் விளையாடும் பெண் யானையே, பிரமன் முதலிய
தேவர்களைப் பெற்ற தாயே, அட்யேனை இவ்வுலகத்தில்
இறந்தபின்னர் மீண்டும் பிறவாமல் இருக்கும்படி அட்யேன்பால் எழுந்தருளி வந்து
அட்யேனை ஆண்டு கொண்டருள் செய்வாயாக.
விளக்கம்:
கொடியானவளே! இளமையான வஞ்சிப் பொற் கொம்பே! தகுதியற்ற எனக்குத் தானே முன் வந்து அருளளித்த கனியே! மணம் பரப்பும் வேத முதற் பொருளே! பனி உருகும் இமயத்தில் தோன்றிய பெண் யானை போன்றவளே! பிரம்மன் முதலாகிய
தேவர்களைப் பெற்றெடுத்த தாயே! அடியேன் இப்பிறவியில்
இறந்தபின், மீண்டும் பிறவாமல்
தடுத்தாட் கொள்ள வேண்டும்.
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும்
அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு
மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
புதன், நவம்பர்
6, 2024
No comments:
Post a Comment