அபிராமி அந்தாதி 1
ஆன்மீக அன்பர்கள்
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.நமது அபிராமி அந்தாதி தொடரில் இன்று முதல் டொடர்ந்து
நூறு அந்தாதி பாடல்களியும் பார்க்கப் போகின்றோம்.
இன்றைய முதல்
பாடலில் அம்பாளின் எழில் உதயத்தையும் நல்ல விழுத்துணை பெறுவதற்கு அம்பாளின் அருள் உதவுவதை
விவரிக்கும் முகமாக பட்டர் வர்ணனையைத் தொடங்குகிறார்,
அம்பாளின்
கேசாதி பாத வர்ணனையை நாம் இதில் பார்க்கின்றோம்
சிவதாஸன் ஜகன்நாதன்
சனி, செப்டம்பர் 06
,2024
ஓம் நமசிவாய
1. எழில்
உதயம்
உதிக்கின்ற
செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற
மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற
மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற
மேனி, அபிராமி என்றன் விழுத்துணையே.
பொருள்:
உதிக்கின்ற
செங்கதிர் உச்சிதிலகம் –
உதய
சூரியனின் சிவந்த கதிரைப் போன்று உள்ளது அம்மை தன் நெற்றியின் உச்சியில்
அணிந்திருக்கும் திலகம்
உணர்வுடையோர் –
பக்தியிலும், அன்பிலும், அறிவிலும், ஞானத்திலும் சிறந்தவர்
மதிக்கின்ற
மாணிக்கம் மாதுளம் போது –
மாதுளம்பூ
மொட்டு
மலர்க்கமலை –
தாமரையில்
வீற்றிருக்கும் மலர் மகளாம் திருமகள் (மஹாலக்ஷ்மி)
துதிக்கின்ற
மின் கொடி –
துதிக்கின்ற
மின்னல் கொடி
மென்
கடிக் குங்குமத் தோயம் –
மென்மையான
வாசனை வீசும் குங்குமம் கரைத்த நீர்
என்ன –
போன்ற
விதிக்கின்ற
மேனி –
விளங்குகின்ற
திருவுடலைக் கொண்ட
அபிராமி
எந்தன் விழுத்துணையே –
அபிராமி
எனக்கு சிறந்த துணையாவாள்.
.
விளக்கம்:
உதய சூரியனின் செம்மையான கதிரைப்
போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப்
போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப்
போலவும், மாதுளை மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில்
வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு
போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த
துணையாவாள்.
இந்த
பாடலுக்கான விரிவான விளக்கத்தை என்னுடைய குரல் பதிவில் தந்துள்ளேன் .கேட்டு மகிழ்ந்து
அம்பாளின் பேருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்
நாளை
மீண்டும் சந்திப்போம்
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
No comments:
Post a Comment