அபிராமி அந்தாதி 7
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.நமது
அபிராமி அந்தாதி தொடரில் தொடர்ந்து நூறு அந்தாதி
பாடல்களியும் பார்த்து வருகின்றோம
சென்ற ஆறாவது பதிவில் அபிராமிப் பட்டர் அபிராமி
அம்பாளை எப்படி தனது மானம்,வாக்கு மற்றும் காயம் ஆகிய மூன்று கரணங்களாலும் துதிக்கின்றேன்
என்று கூறுவதைக் கண்டோம்
சிவதாஸன்
ஜகன்நாதன்
வெள்ளி,
செப்டம்பர் 20
,2024
ஓம் நமசிவாய:
7. மலையென வரும்
துன்பம் பனியென நீங்க
ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர்
கதியுறு வண்ணம்
கருதுகண்டாய் கமலாலயனும்,
மதியுறு வேணி
மகிழ்நனும், மாலும் வணங்கி, என்றும்
துதியுறு
சேவடியாய், சிந்து ரானன
சுந்தரியே.
ததியுறு மத்தின் |
தயிரைக் கடையும் மத்தினைப் போல |
சுழலும் என் ஆவி |
அங்கும் இங்கும் பிறப்பிலும் இறப்பிலும் சுழலும் என் உயிர் |
தளர்விலது ஓர் |
அச்சுழர்ச்சியில்மயங்கித்தளறா |
கதியுறு வண்ணம் |
நற்கதியை அடையுமாறு |
கருது கண்டாய் |
எனக்கு அருள் புரிவாய் |
கமலாலயனும் |
தாமரையான் ப்ரம்மனும் |
மதியுறு வேணி
மகிழ்நனும் |
பிறையணிந்தவரும் உன்னுடன் மகிழ்ந்திருக்கும் சிவபெருமானும் |
மாலும் |
திருமாலும் |
வணங்கி என்றும் |
என்றென்றும் வணங்கும் |
துதியுறு சேவடியாய் |
சிவந்த திருவடிகளையும் |
சிந்துரானன |
செஞ்சிந்தூரம் அணிந்த |
சுந்தரியே |
பேரெழிலாளே |
படைத்தல் தொழில் புரியும்
தாமரை மலரில் உறையும் பிரமனும்,வளர் பிறையணிந்து உன்னுடன் மகிழ்ந்திருக்கும் உன் நாயகன்
சிவபெருமானும், காத்தல் தொழில் புரியும் திருமாலும் என்றென்றும் வணங்கி மகிழும் சிவந்த
திருவடிகளையும் சிவந்த செந்தூரம் அணிந்த முகத்தையும் கொண்ட பேரெழில் சுந்தரியே
கடையப்படும் தயிரானது மத்தின் சுழற்சியில் அகப்பட்டு அங்கும் இங்கும் சுழல்வதுபோல் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் நான் அகப்பட்டு சுழலும் என் ஜீவன் அதிலிருந்து விடுபட்டு நான் மயங்காவண்ணம் எனக்கு அருள்புரிவாயே
இந்த பாடலுக்கான விரிவான விளக்கத்தை என்னுடைய குரல் பதிவில் தந்துள்ளேன்
.கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment