அபிராமி அந்தாதி 2
ஆன்மீக அன்பர்கள்
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.நமது அபிராமி அந்தாதி தொடரில் தொடர்ந்து நூறு அந்தாதி பாடல்களியும் பார்த்து வருகின்றோம்
நேற்றைய முதல்
பாடலில் அம்பாளின் எழில் உதயத்தையும் நல்ல விழுத்துணை பெறுவதற்கு அம்பாளின் அருள் உதவுவதை
விவரிக்கும் முகமாக பட்டர் வர்ணனையைத் தொடங்கியதைப் பார்த்தோம்
இன்று இரண்டாவது
பாடலில் அம்பாள் எப்படி உயிர்களின் துணையாகவும் தாயாகவும் விளங்குகிறாள் என்பதனையும்,
வேதங்களின் ஸ்வரூபமாக விளங்குகிறால் என்பதையும் இன்று காண்போம்
சிவதாஸன் ஜகன்நாதன்
ஞாயிறு, செப்டம்பர் 08
,2024
ஓம் நமசிவாய
துணையும், தொழும் தெய்வமும்
பெற்றதாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனிமலர்ப்பூங்
கணையும், கருப்புச்
சிலையும், மென் பாசாங்
குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.
பொருள்:
பனி மலர்ப்
பூங் கணையும் – குளிர்ந்த மலர்
அம்பும்
கருப்புச் சிலையும் – கரும்பு
வில்லும்
மென் பாசாங்குசமும் – மென்மையான
பாசமும், அங்குசமும்
கையில் அணையும் – கையில் கொண்டு
விளங்கும்
திரிபுர சுந்தரி – மூவுலகிலும்
மிகச் சிறந்த அழகியான அன்னை திரிபுர சுந்தரி
என் துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும்
சுருதிகளின் பணையும், கொழுந்தும், பதிகொண்ட
வேரும் – வேதத்தின்
கிளைகளும், இலைகளும், நிலத்தில் ஊன்றி
நிற்கும் வேராகவும்
ஆவது அறிந்தனமே – அவள் இருப்பது அறிந்தேனே!
(உரை): எமக்கு
உயிர்த்துணையும், யாம் தொழும்
தெய்வமும், எம்மைப் பெற்ற
அன்னையும், வேதமென்னும்
மரத்தின் கிளையும், முடிவில் உள்ள
கொழுந்தும், கீழே பதிந்த
வேரும், குளிர்ச்சியையுடைய
மலரம்புகளையும் கரும்பு வில்லையும் மெல்லிய பாசாங்குசத்தையும் திருக் கரத்தில்
ஏந்திய திரிபுரசுந்தரியே ஆகும் உண்மையை யாம் அறிந்தோம்.
விளக்கம்: அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும், அவற்றின் கிளைகளாகவும், வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே எனக்குத் துணை.
இந்த
பாடலுக்கான விரிவான விளக்கத்தை என்னுடைய குரல் பதிவில் தந்துள்ளேன் .கேட்டு மகிழ்ந்து
அம்பாளின் பேருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்
நாளை
மீண்டும் சந்திப்போம்
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
No comments:
Post a Comment