ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.நமது
அபிராமி அந்தாதி தொடரில் தொடர்ந்து நூறு அந்தாதி
பாடல்களியும் பார்த்து வருகின்றோம்
நேற்றைய நாலாவது பாடலில் பேறு பெற்ற மனிதர்களும் தேவர்களும்
முனிவர்களும் தொழும் அன்னையையும் அவரோடு இணைந்துறையும் சிவபெருமானையும் தன்னுடைய சிந்தையில்
புகுந்து உள்ளத்தில் குடிபெற வேண்டும் என வேண்டி விழைகிறார் என்பதையும் பார்த்தோம்
சிவதாஸன்
ஜகன்நாதன்
புதன்,
செப்டம்பர் 11
,2024
ஓம் நமசிவாய:
பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால்,
வருந்திய வஞ்சி
மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்
அருந்திய நஞ்சமு
தாக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய
சுந்தரி அந்தரி, பாதம் என்
சென்னியதே.
பொருந்திய முப்புரை |
உயிர்களிடத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று நிலைகளிலும், இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்ற மூன்று நிலைகளிலும், விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்னும் மூன்று நிலைகளிலும், பூலோகம், புவர்லோகம், சுவர்க்க லோகம் என்னும் மூன்று நிலைகளிலும் பொருந்தி இருப்பவளே |
செப்புரை செய்யும் |
புகழ்ந்து பேசுவதற்கேற்ப |
புனர்முலையால் |
மிக்க அழகுடனும் கட்டுடனும் பெருத்தும் மிக்க அழகுடன் விளங்கும் கூடி நிற்கும் ஸ்தனங்கனகளால், அவற்றின் பாரத்தால் |
வருந்திய |
வருந்துகின்ற |
வஞ்சி மருங்குல் |
வஞ்சிக்கொடிபோன்ற இடையை உடைய |
மனோன்மணியே |
அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்லும்
மனோன்மணியே |
வார்சடையோன் அருந்திய |
நீண்ட ஜடாமுடியை உடைய பரமன் உண்ட ஆலகால
நஞ்சை |
நஞ்சமுதாக்கிய |
அந்த நஞ்சை தடுத்து கீழிறங்காமல் நிறுத்தி
அதை அமுதமாக்கிய |
அம்பிகையே |
அபிராமி அம்பிகையானதாயே |
அம்புயமேல் |
அழகிய தாமரை மலர் மேல் |
திருந்திய சுந்தரி |
எழிலுற வீற்றிருக்கும் எழில் தாயே |
அந்தரி பாதம் |
உலகுக்கெல்லாம் ஆதியும் அந்தமுமான தாயே
உன் திருப்பாதம் |
என் சென்னியதே |
எனது தலையில் பொருத்திக்கொண்டேனே |
விளக்கம்:
அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல்,
அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி
போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய
விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி!
நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின்
திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.
இந்த பாடலுக்கான விரிவான விளக்கத்தை என்னுடைய குரல் பதிவில் தந்துள்ளேன்
.கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment