Friday, September 6, 2024

அபிராமி அந்தாதி   01

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் சிவதாஸன் ஜகன்நாதனின் இனிய வணக்கங்கள்.

நம்முடைய ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பதிவு நிறைவுற்ற நிலையில் அடுத்த தொடராக அபிராமி அந்தாதியை என் சிற்றரிவுக்கு எட்டியவரை அடியேன் அறிந்தவைகளை சிவநேசச் செல்வர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி இந்த பதிவினைத் துவக்குகிறேன்.

 

இந்த பதிவினையும் விளக்கமாகவும்,குரல் வழிமூலமாகவும் தர எண்ணியுள்ளேன்.இந்த பதிவு நீண்தானதாக இருக்கும்.அபிராமி அந்தாதி நூற்று ஒரு பாடல்களைக் கொண்டதாகும்.

 

நேற்றே நான் இந்த பதிவின் முன்னுறையை குரல் வழி விளக்கமாக கொடுத்துள்ளேன்.அதையும் கேளுங்கள்

இந்த் பாடலின் விளக்கத்தினை குரல் ஒலிமூலமும் தந்துள்ளேன் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேர ளுக்கும் கருணைக்கும் பாத்திரமாகுங்கள்,

 

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வெள்ளி,செப்டம்பர் 5, 2024

 

இன்றைய முதல் பதிவில் கணபதி காப்பு பாடலைப் பார்க்க போகிரோம்.

 

கணபதி காப்பு

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமிஅந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
கார் அமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே.

பொருள்: 

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் மாலையில் அமைந்துள்ள கொன்றைப் பூ கொன்றைப் பூ மாலையும் சண்பக மாலையும்
சாத்தும் – அணியும்A
தில்லை ஊரர் – தில்லையில் சிதம்பரத்தில் வாழும் நடராஜன்
தம் பாகத்து – அவர் உடலில் ஒரு பாதியாய் நிற்கும்
உமை – சிவகாமி பார்வதி
மைந்தனே மகனே
உலகு ஏழும் பெற்ற – ஏழுலகையும் பெற்ற
சீர் அபிராமி – சீர் பொருந்திய அபிராமி அன்னையின் அருளையும் அழகையும் எடுத்துக் கூறும்
அந்தாதி அந்தாதி தொடையில் அமைந்த இந்த நூல்
எப்போதும் என் சிந்தையுள்ளே – எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க
கார் அமர் மேனி கணபதியே மேகம் போல கருநிற மேனியை உடைய பேரழகு கணபதியே
நிற்கக் கட்டுரையே – அருள் புரிவாய்.


 

(உரை): மாலையாகப் பொருந்திய கொன்றையையும் சண்பக மாலையையும் முறையே அணிந்தருளுகின்ற தில்லயெம்பெருமானுக்கும், உமாதேவியாருக்கும் திருக்குமரனே, கரிய நிறம் பொருந்திய திருமேனியையுடைய கணபதியே, ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புடைய அபிராமியம்மையைப் பற்றிய அந்தாதியென்னும் இப்பிரபந்தமானது எப்போதும் என் உள்ளத்துக்குள்ளே நிலைபெறும்படி திருவாய்மொழிந்தருளுவாயாக..

விளக்கம்: கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.

நாளை முதல் பாடலுடன் சந்திப்போம்

சிவதாஸன் ஜகன்நாதன்

ஓம் நமசிவாய


 

 


No comments:

Post a Comment