ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.நமது
அபிராமி அந்தாதி தொடரில்  தொடர்ந்து நூறு அந்தாதி
பாடல்களியும் பார்த்து வருகின்றோம்
நேற்றை ஐந்தாவது பாடலில் எல்லாவிதமான மூன்று
நிலைகளிலும் நிலைத்து நிற்பவளும் கொடியிடையை உடையவளுமானவளும், நீலகண்டரான பரமன் ஆலகாலத்தை  உண்டபோது அதைத் தொண்டைக் குழியிலே நிறுத்தியவளுமான
அன்னையின் திருவடிகளை தனது தலையிலே தாங்குவதாக கூறுகின்றார் என்பதையும்  பார்த்தோம்
சிவதாஸன்
ஜகன்நாதன்
வியாழன்,
செப்டம்பர் 12
,2024
ஓம் நமசிவாய:
சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம், சிந்துர வண்ணப்பெண்ணே,
முன்னிய நின்அடியாருடன்
கூடி, முறைமுறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.
| சென்னியது | எனது தலையின்மேலே எப்பொழுதும் | 
| உன் பொன் திருவடித்
  தாமரை | உன் தாமரை மலர்போன்ற அழகிய திருவடிகளே | 
| சிந்தையுள்ளே மன்னியது | என்றென்றும் என் சிந்தையுள் நிலைத்து நிற்பது | 
| உந்திருமந்திரம் | உன்னுடைய திருநாம் என்னும் பெரும் மந்திரமே | 
| சிந்தூர வண்ணப் பெண்ணே | செந்தூரம் போன்று சிவந்த அழகிய தேவியே | 
| முன்னிய நின் அடியாருடன்
  கூடி | நான் எப்போதும்
  கூடியிருப்பது உன் அடியார்களையே. என் எல்லா செயல்களையும்
  அவர்களை முன்னிட்டு செய்கிறேன். | 
| முறை முறையே | தினம் தோறும் நான் முறையுடன் | 
| பன்னியது | பாராயணம் செய்தது | 
| உந்தன் பரம | உன்னுடைய உயர்ந்த  | 
| ஆகம பத்ததியே | ஆகம வழியிலான நெறி முறைகளையே | 
சிந்துரத்தின் சென்னிறம் வாய்ந்த
திருமேனியையுடைய தேவி, என்
சிரத்தின்மேல் முடிபோலத் திகழ்வது நின் பொலிவு பெற்ற திருவடியாகிய தாமரை மலர்; நெஞ்சத்துள் நிலைபெற்று இருப்பது உன்
அழகிய மந்திரம்; நின்னையே
தியானிக்கும் நின் அடியார்களுடன் கலந்து முறைப்படி அடுத்தடுத்து நான் பாராயணம்
செய்வது உன்னுடைய மேலான ஆகம பத்ததியே யாகும்.
விளக்கம்: செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் இருக்கக்கூடியது, நின் அழகிய திருவடியே! என்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று
இருக்கக் கூடியது, நின்
திருமந்திரமே! செந்தூர
நிறமுடைய அழகிய தேவி, நான் இனி
என்றும் கலந்திருப்பது நின்னையே மறவாது தொழும் அடியார்களையே! நான் தினந்தோறும் பாராயணம் செய்வது, உன்னுடைய மேலான ஆகம நெறியையே!
இந்த பாடலுக்கான விரிவான விளக்கத்தை என்னுடைய குரல் பதிவில் தந்துள்ளேன்
.கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
 
No comments:
Post a Comment