ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.நமது
அபிராமி அந்தாதி தொடரில்  தொடர்ந்து நூறு அந்தாதி
பாடல்களியும் பார்த்து வருகின்றோம்
நேற்றைய மூன்றாவது பாடலில் அம்பாளின் திருவருளினால்
யாவருக்கும் கிட்டாத பேறு தனக்குக் கிட்டியதையும் அம்பாளின் திருவடியில் தாம் நீங்காது
செறிந்து பற்றியும் அதனால் தீயோர் உற்வு முரிந்தது பற்றியும் கூறுகின்றார் பாடலில்
என்பதையும்  பார்த்தோம்
சிவதாஸன்
ஜகன்நாதன்
செவ்வாய்,
செப்டம்பர் 10
,2024
ஓம் நமசிவாய:
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும்
சேவடிக் கோமளமே, கொன்றை வார்சடைமேல்
பனிதரும்
திங்களும் பாம்பும், பகீரதியும்
படைத்த
புனிதரும் நீயும்
என் புந்திஎந் நாளும் பொருந்துகவே.
| மனிதரும் தேவரும் | மாந்தர்களும்,தேவர்களும் | 
| மாயா முனிவரும் | என்றும் அழிவிலா முனிவரும் | 
| வந்து | உனை நாடி வந்து | 
| சென்னி | தம் தலை திருவடி வைத்து | 
| குனிதரும் | வணங்கும் | 
| சேவடி கோமளமே | சிவந்த மென்மையான பாதங்களையுடைய கோமளவல்லியே | 
| கொன்றைவார் | கொன்றை மலரணிந்த | 
| சடைமேல் | ஜடாமுடியில் | 
| பனிதரும் திங்களும் | குளிர்ந்த பிறையையும் | 
| பாம்பும் | நாகங்களும் | 
| பாகீரதியும் படைத்த | கங்கையையும் அணிந்த | 
| புனிதரும் நீயும் | ப்ரமனும் நீயும் | 
| என்புந்தி எந்நாளும் | என் உள்ளத்தில் எப்பொழுதும் | 
| பொருந்துகவே | நிலைபெற்று உறையவே | 
 பூவுலக வாசிகளாகிய மனிதர்களும் பொன்னுலக
வாணராகிய தேவர்களும் மரணம் இல்லாத பெருமையையுடைய முனிவர்களும் வந்து தலை வணங்கும்
செம்மையாகிய திருவடிகளும் மெல்லியல்பும் உடைய தேவியே. கொன்றைக் கண்ணியை அணிந்த நீண்ட
சடாபாரத்தின் மேல் பனியை உண்டாக்குகின்ற சந்திரனையும் பாம்பையும் கங்கையையும்
கொண்ட தூயவராகிய சிவபிரானும் நீயும் என் அறிவினிடத்தே எக்காலத்திலும் இணைந்து
எழுந்தருள்வீர்காளாக!
மனிதர்,
தேவர்,
பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய
சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே!
தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும், அரவையும்,
கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும்
நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்.
இந்த பாடலுக்கான விரிவான விளக்கத்தை என்னுடைய குரல் பதிவில் தந்துள்ளேன்
.கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
 
No comments:
Post a Comment