Wednesday, August 2, 2023

 



 

 


ஸுப்ரமண்ய புஜங்கம்

சிவதாஸன் ஜகன்நாதன்

 ஐந்தாவது ஸ்லோகம் 

ஸுப்ரமண்ய புஜங்கதுல நாலு ஸ்லோகம் பார்த்து இருக்கோம். அஞ்சாவது ஸ்லோகம்

यथाब्धेस्तरङ्गा लयं यान्ति तुङ्गास्तथैवापदः सन्निधौ सेविनां मे ।

इतीवोर्मिपङ्क्तीर्नृणां दर्शयन्तं सदा भावये हृत्सरोजे गुहं तम् ॥ ५॥

யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா:

ததைவாபத: ஸந்நிதெள ஸேவினாம் மே |

இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்

ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் ||

என்று  ஒரு ஸ்லோகம், ‘அப்தி’-ன்னா கடல்,                                தரங்கங்கள்-ன்னா அலைகள், ‘யதா(2)’ எப்படி, ‘அப்தேஸ்தரங்காகடலின் அலைகள்,                                       துங்காஹாபெரிய அலைகள், பெரிய அலைகள் திருச்செந்தூர்-ல கடற்கரைக்கு வந்த உடனே,                                        லயம் யாந்திஅலைகள் எல்லாம் அடங்கி, கரையில ஒதுங்கிடறது இல்லையா?                                                                                       அந்த மாதிரி அலைகள் லயம்                                                                                 அடைகிறதோ                                                                                            ததை(2)அப்படியே,                                                                               என்னுடைய தரிசனத்தை                                                                                  செய்யும் ஜனங்களுக்கு,                                                                   ‘                        ஆபாதஹஎல்லா விதமான ஆபத்துகளும்,                             ‘                   ஸந்நிதெளஎன்னுடைய சன்னிதியில்                                                          லயம் யாந்திலயத்தை அடைந்து விடும்                                            இதிஎன்று ஊர்மிபங்திஹிஅலைகளை,

கடற்கரையிலே வரிசையா அலைகள்                                                          வந்து மோதி கொண்டே இருக்கிறது. அந்த அலைகளை                    தர்சயந்தம்காண்பித்துக்கொண்டு இந்த                               ஸுப்ரமண்ய ஸ்வாமி கடற்கரையில இருக்கார்.                                        ஏன் கடற்கரையில இருக்கார்                                    அப்படீங்கிறதுக்கு நேற் று ஒரு                                                       காரணத்தை சொன்னார் ஆதி ஆசார்யாள்.                          இன்னிக்கு ஒரு காரணம் சொல்றார்,

நேத்து சொன்னது பவாம் போதிசம்சார கடலையே நான் தாண்ட வைத்து விடுவேன், முக்தி அளிப்பேன், என்று கடற்கரையிலே இருந்ததுகொண்டு சூசகமா சொல்லிக்கொண்டு இருக்கார், அப்படீன்னு சொன்ன மாதிரி, இன்றைக்கு கடல் அலைகளை  காண்பிச்சு, எவ்வளோ பெரிய அலையா இருந்தாலும், இந்த கரையில வந்த உடனே லயம் யாந்திஇல்லாம போய்விடுகிறது.

அப்படி என்னுடைய பக்தர்கள், என்னை வந்து சேவிப்பவர்களுடைய, ஆபத்துகள் எல்லாமே லயம் அடைந்துவிடும் என்பதை காண்பித்துக் கொண்டு ப்ரஸித்தமாக விளங்கும்  குஹனை                                                                ஸதாஇப்பொழுதும்,                                                                  ஹருத்ஸரோஜேஎன் ஹ்ருதய தாமரையில்,                                          பாவயேத்யானம் செய்கிறேன்”,                                                        என்கிறது இந்த ஸ்லோகம்.

போன ஸ்லோகத்துல முருகனுடைய                                        தர்சனத்துனால முக்தி கிடைக்கும்னு சொன்னார்.                                                                                                                                                                            இந்த ஸ்லோகத்துல முருகனுடைய தர்சனத்துனால உடல், மனோ வ்யாதிகள் எல்லாமே போயிடும்ன்னு சொல்றார்.

இந்த ஸ்லோகத்தை சொல்லும் போது, பகவானை தர்சனம் பண்ணி, ஜீவன் முக்தனாக ஆன பின்னர், என்ன கஷ்டம்? அப்படீன்னு தோணும்.                                                                                       அப்படி ஜீவன்முக்தி அடைந்த பின்னையும் மஹான்கள் கொஞ்ச காலம் பாக்கி பூமியில இருக்கிறார்கள்  இல்லையா, அதை ப்ராரப்த கர்மான்னு சொல்லுகிறார்கள்.                                                                         அந்த ப்ராரப்த காலத்தை, கர்மாவை அனுபவிச்சு தீர்க்கக்கூடிய அந்த காலத்தில், அவா ஞானத்துனால அவர், அவர் பூர்வ கர்மாவை எல்லாத்தையும் அழித்துவிட்டால், மிஞ்சி இருக்கிற ஒரு சொட்டு, அதை இந்த ஜென்மாவுல அனுபவிக்கிறார்கள். ஆகாமி, சஞ்சிதம் எல்லாத்தையும் தீர்த்துவிட்டால், ப்ராரப்தம் அப்படீன்னு பலன் கொடுக்க ஆரம்பித்து விட்ட  அந்த கர்மா மட்டும் பாக்கி இருக்கு, அதை அனுபவிக்கிற. அந்த நேரத்தில அவர்களுக்கு கர்ம பந்தம் ஒண்ணும் கிடையாது, அவர்கள் பண்ண கூடிய பாப புண்யங்கள் அவர்களை ஒட்டாது. அவர்களை போய் நமஸ்காரம் அவர்களுக்கு என்ன கஷ்டம், என்ன ஆபத்து?

 போன ஸ்லோகத்துல முருக தரிசனத்தால் முக்தி கிடைச்சதுன்னு சொன்னவர், அடுத்த ஸ்லோகத்துல மனோ வியாதிகளும் உடம்பு வியாதிகளும் போகும்னு சொல்றாரே ன்னா, மகான்கள், தெய்வத்தோட அனுக்ரஹத்தால ஞானம் அடைஞ்ச பின்ன அவர்களே தெய்வமாக ஆகிறார்கள். தெய்வத்தோட ஒரு அபாரமான, ஆச்சர்யமான குணம் கருணை. அந்த கருணையினால் மகான்கள் தங்களுடைய சிஷ்யர்களுக்கு, பக்தர்களுக்கு வரக்கூடிய உடல் வியாதி மனோ வியாதிகளை போக்குகிறார்கள்.

நாளைக்கு கிரௌ மந்நிவாசேனு ஆரம்பிக்கற ஆறாவது ஸ்லோகத்தை பார்ப்போம்.

நம: பார்வதீ பதயேஹர ஹர மகாதேவா

சிவதாஸன் ஜகன்நாதன்

 

No comments:

Post a Comment