Friday, October 3, 2025

தினம் ஒரு லலிதா நாமம்----41 & 42

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வெள்ளி க் கிழமைஅக்டோபர், 2 ,2025

அனைவருக்கும் வணக்கம்.                                                                                                                     இன்று நாம் அம்பாளின் மற்றும் நாற்பத்தொன்றாவது மற்றும் நாற்பத்து இரண்டாவது திவ்ய நாமங்களைப் பார்ப்போம். இந்த நாமங்கள் அம்பிகையின் கெண்டைக்கால்  மற்றும் கணுக்கால்களின் அழகையும்,,அவைகளின் உண்மைத் தத்துவத்தையும் விவரிக்கின்றன. இந்த நாமங்கள் இரண்டும்  அம்பாளின் பதினேழாநெட்டாவது ஸ்லோகத்தில் வருகின்றன

41.இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

 

இந்த்ரகோப

சிவந்து மின்னும் பூச்சி                                                            

பரிக்ஷிப்த                                                        

சிதரப் பட்டிருப்பதால்

ஸ்மர

காமதேவன்,மன்மதன்                                                                     

தூணாப

அம்பராத்துணி, அம்புக்கூடு        

ஜங்கிகா

கெண்டைக்கால், முன்னம் கால்

                              ம்பாளுடைய கெண்டைக்கால் தசைகள் அன்பின் கடவுளான மன்மதனின் அம்பறாத்தூணியைப் போல இருக்கும். அம்பராத்துணி அம்புகளின் கூடாகும்.அது மேலே விரிந்தும் கீழே குறுகியும் இருக்கும் இந்த அம்பராத்துணியை அழகாக அலங்கரிக்கும் வண்ணம் மழைக் காலத்தில் கிளம்பும் ஒருவகை சிவந்து மின்மினுக்கும் பூச்சிகள் இந்த்ரகோபம் எனப்படும். இந்த பூச்சிகள் மன்மதனின் அம்பராத்துணியை மொய்த்துக் கொடிருப்பதால் அது சிவந்து காணப் படும் அவ்வாறே அம்பிகையின் கெண்டைக்கால் களும் சிவந்து காணப்படுகின்றன.

 

சவுந்தர்ய லஹரி (பாடல் 83) கூறுகிறது, "உங்கள் இறைவன் சிவனின் இதயத்தை வெல்வதற்காக, ஐந்து அம்புகளைக் கொண்ட மன்மதக் கடவுள், உங்கள் கால்களை பத்து அம்புகளைக் கொண்ட அம்புப் பெட்டியாக மாற்றியுள்ளார் (கால் நகங்கள்)."


 

42. கூடகூல்பா

கூட === மறைக்கப்பட்ட                                                                                               குல்ஃபா === கணுக்கால்கள்

அவளுக்கு வட்டமான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட கணுக்கால்கள் அவைகளின் எலும்பு வெளியே தெரியாத வண்ணம் இறுகிய தசைகள் அவைகளை மூடி மறைக்கப்பட்டுள்ளன.

.இது அந்த கணுக்கால்கள் வலிமையும் அழகும் உடையவை என்பதை காட்டுகின்றன.

இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை நாற்பத்து மூன்றாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்

                                                                                                                                                     இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

நன்றி. வணக்கம்.                                                                                                   

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வெள்ளி க் கிழமைஅக்டோபர், 3 ,2025


No comments:

Post a Comment