ஸ்ரீ லலிதா
சஹஸ்ரநாமாவளி -75
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
ஞாயிறு, 26, அக்டோபர், 2025
அனைவருக்கும்
வணக்கம்.
இன்று நாம்
அம்பாளின் எழுபத்து ஐந்தாவது திவ்ய நாமாவளியைப் பற்றிப்பார்ப்போம்
இந்த நாமாவளி அம்பாளின் இருபத்து எட்டாவது
ஸ்லோகத்தில் வருகின்றது.
அம்பாள் தன்னுடைய சக்தி
சேனைகள் பண்டாசுரனின் படைகளை அழித்ததைக் கண்டு பெரும்கிழ்ச்சி கொண்டாள்.மேலும்
தன்னுடைய மந்திரியான மந்திரிண்யம்பா என்ற தேவி அப்பண்டாசுரனின் படைத்டளபதியான
விஷங்கன் என்ற அசுரனை அழித்த்தைக் கண்டு மகிழ்வடைந்தாள்.
75. மந்த்ரிண்யம்பா விரசித விஷங்க வத
தோஷிதா ।
மந்த்ரிண்யம்பா
=== அம்பாளின்மந்திரியான மந்திரிண்யம்பா
விரசித
=== செய்த செயல்பாடு
விஷங்க
=== விஷங்கன் என்னும் பண்ட்டாசுரனின் தளபதி
வத === அவனை வதம் செய்து அழித்த
தோஷிதா ।=== கண்டு மகிழ்ந்தாள்
பண்டாசுரன் ஈஸ்வரரிடம் பெற்றாவரத்தல் பல தீய அசுரர்களை தனது
உடலிலிருந்து படைக்கும் வல்லமை பெற்றவன்.அவன் தனது தோளிலிருந்து விஷுக்ரன் மற்றௌம் விஷங்கண் எனும் இரண்டு தளபதி களைப்
படைத்தான்.அவர்களை மந்த்ரிண்யம்பா தேவி அழித்ததைக் கண்டு அம்பாள் மகிழ்ந்தாள்.
மந்திரினி
(ஷ்யமலா) தேவி, விசாகவதம் என்ற அசுரனை அழித்ததில்
அவள் மகிழ்ச்சியடைந்தாள். விசாகனும் விஷுக்ரனும் பண்டாசுரனின் இரண்டு சகோதரர்கள்.
பண்டாசுரனால் அவரது தோள்களிலிருந்து படைக்கப்பட்டவர்கள்.
இந்த
நாமத்தில் பீஜ 'வி' (वि) உள்ளது. இந்த பீஜத்தின் மூல எழுத்து 'வ' (व). வா என்பது இரண்டு விஷயங்களைக் குறிக்கிறது. இது இயற்கைக்கு
அப்பாற்பட்ட சக்திகளை அடைய உதவுகிறது. இரண்டாவதாக இது தீய தாக்கங்களை அழிக்கிறது.
மந்திரினி தேவி மந்திரங்களின் சக்தியைக் குறிக்கிறது. விஷங்கா என்பது புலன்களின்
தீய விளைவுகளிலிருந்து எழும் ஆசைகளைக் குறிக்கிறது. லலிதாம்பிகை பக்தர்களின்
அத்தகைய ஆசைகளை மந்திரினி தேவி அழிக்கிறாள்.
இத்துடன்
இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை எழுபத்துஆறாவது நாமாவளியின்விளக்கமோடுசந்திப்போம்
இந்த பதிவுகள்
அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம்
அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
நன்றி. வணக்கம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
ஞாயிறு, 26, அக்டோபர், 2025
No comments:
Post a Comment