Saturday, October 25, 2025

 


ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி -74

ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்  

சனி, 25,  அக்டோபர், 2025                            

அனைவருக்கும் வணக்கம்.          


இன்று நாம் அம்பாளின் எழுபத்து நாலாவது திவ்ய நாமாவளியைப் பற்றிப்பார்ப்போம்

இந்த நாமாவளி அம்பாளின் இருபத்து எட்டாவது ஸ்லோகத்தில் வருகின்றது
.

அம்பாள் தன்னுடைய சக்தி சேனைகள் பண்டாசுரனின் படைகளை அழித்ததைக் கண்டு பெரும்கிழ்ச்சி கொண்டாள்.மேலும் தன்னுடைய அம்ஸமான பாலாம்பிகையின் திறமையைக் கண்டு ஆனந்தகொண்டால்.அம்பாளின் கவசத்திலிருந்து தோன்றிய பாலாம்பிகை பண்டாசுர்னின் முப்பது புதல்வர்களை வதம் செய்ததைக் கண்டு அம்பாள் மிக்க மகிழ்வுறாள்.


74. பண்டபத்ர வதோத் யுக்த பாலா விக்ரம நந்திதா

பண்டபத்ர  ==== பண்டாசுரனின் புத்துரன்

வதோத் ==== வதைத்த

யுக்த ===== செய்தல்

பாலா  ==== பாலாம்பிகை

விக்ரம ==== துணிச்சல் ,பராக்ரமம்

நந்திதா ==== ஆனந்தம்

 

லலிதாதேவியின் மகள் அம்ஸம்  பாலாம்பிகை, ஒன்பது வயது. பண்டாசுரனுக்கு முப்பது மகன்கள் இருந்தனர். லலிதா தன் மகளை போர்க்களத்திற்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்திய போதிலும், பாலா தனது தாயை வென்று பண்டாசுரனின் முப்பது மகன்களையும் எதிர்த்துப் போர் தொடுத்து அவர்களை அழித்தார்.

பாலா என்பது லலிதாம்பிகையின் அங்க தேவதை. லலிதா, மந்திரினி மற்றும் வாராஹி ஆகியோர் அங்க தேவியர், உபாங்க தேவியர் மற்றும் பிரத்யங்க தேவியர்களைக் கொண்டுள்ளனர். அன்னபூர்ணா தேவி உபாங்க தேவியாகவும், அஸ்வாரூதா தேவி லலிதாம்பிகையின் பிரத்யங்க தேவியாகவும் உள்ளார். (அங்க, உபாங்க மற்றும் பிரத்யங்கம் தேவியின் மொத்த, நுட்பமான மற்றும் நுட்பமான அங்கங்களைக் குறிக்கின்றன)

ண்டாசுரனின் மகன்கள் மூன்று மலங்களான முப்பது தத்துவங்களைக் குறிக்கின்றனர். இந்தத் தத்துவங்களைக் கடக்காவிட்டால், உணர்தல் ஏற்படாது. நம்மிடமிருந்து ஒரு சிறிய முயற்சி (பாலாவைக் குறிக்கும்) தத்துவங்களின் தீய விளைவுகளை அழிக்கும்.

இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை எழுபத்துநாலாவது நாமாவளியின்விளக்கமோடுசந்திப்போம்                                                                                                                  

இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன்அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

நன்றிவணக்கம்.                                                                                                  

 ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்  

சனி,25,  அக்டோபர், 2025                            


 


No comments:

Post a Comment