தினம் ஒரு லலிதா
நாமம்----39, & 40
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
வியாழக்
கிழமை, அக்டோபர், 2 ,2025
அனைவருக்கும்
வணக்கம்.
இன்று நாம் அம்பாளின் முப்பத்து ஒன்பது
மற்றும் நற்பதாவது திவ்ய நாமங்களைப்
பார்ப்போம். இந்த நாமங்கள் அம்பிகையின் தொடைகள்
மற்றும் முழங்கால்களின் அழகையும்,,அவைகளின் உண்மைத் தத்துவத்தையும் விவரிக்கின்றன. இந்த நாமங்கள் இரண்டும் அம்பாளின் பதினேழாவது ஸ்லோகத்தில்
வருகின்றன
39.காமேஶ ஜ்ஞாத ஸௌபாக்ய மார்த வோரு த்வயா
அந்விதா।
காமேஷ
|
மஹாதேவர்,ஈஸ்வரர்
|
ஞாத |
அறிந்த,உணர்ந்த
|
சௌபாக்ய |
மங்கலகரமான,அழகான |
மார்தவ |
மென்மையான ,கனிவான
|
ஊரு |
தொடைப்
பகுதி
|
த்வய
|
இர்ண்டும்
ஜோடியாக
|
அன்விதா |
அழகாய்க்கொண்டிருப்பவள் |
எந்த ஒரு
பெண்ணின் புற அழகையும் உணர்வதர்க்கோ காண்பதற்கொ அவளின் கணவருக்கு மட்டுமே உரிமை உண்டு.பரமாம்பிகையான லலிதா தேவியின் அழகை உணர்ந்து காண்பதாற்கும் ரசிப்பதர்க்கும் அவளின் கணவரான
பரமேஸ்வர்ருக்கே உரிமை உள்ளது.
இதன் தத்துவம்
அம்பாளும் பரமேஸ்வ்வர்ரும் இணைபியாத்வர்கள்.இந்தப்ரபஞ்சமே அவர்களின் ஐக்கியத்தினால் உருவானது. எனவே அம்பாளின் ரஹஸ்யங்களை ஈஸ்வர்ர் மட்டுமே அறிவார்.
அவளுடைய
தொடைகளின் அழகு அவளுடைய துணைவரும் படைப்பாளருமான காமேஸ்வரருக்கு மட்டுமே தெரியும்.
இது மறைமுகமாக பஞ்சதசியின் சக்தி கூடத்தின் ரகசிய இயல்பைக் குறிக்கிறது, இது இந்த நாமத்திலிருந்து சக்திகூட்த்தின் ரஹஸ்யம் தொடங்குகிறது.
40. மாணிக்ய முகுடா கார ஜாநு த்வய விராஜிதா
மாணிக்ய |
மாணிக்கம்
|
முகுடா |
மகுடம், க்ரீடம்
|
ஆகாரகாணப்படுதல் |
தோற்றம், |
ஜானு
|
முழங்கால்
|
த்வய |
இரண்டும்
|
விராஜிதா |
விளங்குகின்றன |
அம்பாளின் இரண்டு முழங்கால் களும் ஒரு மாணிக்கங்கள் பதித்த
மகுடம் போல் இணையாக மிளிர்ந்து அழகுடன் விளங்குகின்றன.இந்தப் பகுதிகல் யாவும் அம்பாளின்
சக்திகூடங்களின் பகுதிகளாக விளங்குகின்றன
அவளுடைய
ஒவ்வொரு முழங்காலும் ஒரு கிரீடம் போலத் தோன்றும் ஒற்றை மாணிக்கத் துண்டு (மீண்டும்
சிவப்பு நிறம்) போன்றது.அம்பாளின் அனைத்து பகுதிகளுமே சிவப்பு நிறமாக வர்ணிக்கப் படுகின்றன.மீண்டும்
இவயும் அம்பாளின் கருணா வடிவத்தையே இவையும் விவரிக்கின்றன
இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை
நார்பத்து ஒன்றாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்
இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
நன்றி. வணக்கம்.
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
வியாழக்
கிழமை, அக்டோபர், 2 ,2025
No comments:
Post a Comment