ஸ்ரீ ருத்ரம்
பகுதி 7
நமோ அஸ்து நீலக்ரீவாய சஹஸ்ராக்ஷாய மீடுஷே
அதோ யே அஸ்ய சத்வானோஃஹம் தேப்யோஃகரந் நம:
நீலக் கண்ட்த்தை உடையவரும் ஆயிரம் கண்களைக்கொண்டவரும்
வேண்டுவோர்க்கு வேண்டுவதை அளிப்பவருமான பரமேஸ்வரை வணங்குகிறேன்
மேலும் அவரது பிரதம
கணங்களான அடியவர்களையும் வணங்குகிறேன்.
ப்ரமுஞ்ச
தன்வனஸ்த்வ-முபயோ ராத்னியோர் ஜ்யாம்
யாச்ச தே ஹஸ்த இஷவ:
பரா தா பகவோ வப
பகவானே உங்களுடைய
வில்லின் இரண்டு நுணிகளிலும் பூட்டியுள்ள நாண்களை அவிழ்த்து விடுங்கள் உங்களுடைய
கையில் உள்ள பாணங்களை அம்பாராத்துணியில்
வைத்து விடுங்கள்
அவத்த்ய தனுஷ்வ
சஹஸ்ராக்ஷ சதேஷூதே
நீசிர்ய சல்யானாம்
முகா சிவோ ந: சுமனா பவ
கணக்கற்ற கண்களை
உடையவரே பல அம்பராத்துணிகளை உடையவரே நீங்கள் தங்கள் வில்லின் நாணைத்தளர்த்திவிட்டு
அம்புகளின் முனையை கூர் மழுங்கச்செய்து எங்களுக்கு மங்கள வடிவினராகவும் நல்
மனதுடையவராகவும் ஆகவேண்டும்
[1 11]
No comments:
Post a Comment