பஞ்ச பூத ஸ்தலங்கள்
இந்த ப்ரபஞ்சமே பஞ்ச பூதங்களால் ஆனது, அவை காற்று ‘
ஆகாயம் நீர் நெருப்பு பூமி என்பனவாகும்
இறைவன் தானே அந்த பஞ்ச பூதங்களாக விளங்குகிறார்.
நிலமாக காஞ்சியிலே காட்சி அளிக்கிறார்
ஆகாயமாக சிதம்பரத்திலே அருள் பாலிக்கிறார்
வாயுவாக காளஹஸ்தியிலே விளங்குகிறார்
தீயாக திருவண்ணாமலையிலே திகழ்கின்றார்
நீராக திருவானைக்காவிலே நிலைதிருக்கின்றார்
நம் உடம்பிலேயே பஞ்சபூதங்களும்
அமைந்துள்ளன
நமது சரீரம் பூமியாகவும் ஆன்மா ஆகாயமாகவும் இரத்தம்
நீராகவும் சுவாசம் கற்றாகவும் உடல் வெப்பம் தீயாகவும்
அமைந்து பஞ்ச பூதங்களும் நம் உலில் அடக்கம் என்று
காட்டுகின்றது
சைவ தத்துவம் அத்வைதம் ஆகும். அத்வைதம் என்றால்
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பதாகும்
ஜீவாத்மா என்பது நாம் .பரமாத்மா என்பது இறைவன்
இறைவன் நம்முள்ளேயே இருக்கிறார் என்பதையே இது
குறிக்கின்றது.
முடிந்தால் ஒருமுறை பஞ்ச பூதஸ்தலங்களுக்கு சென்று ஈசனை
வணங்கி மகிழ்ந்து அருள் பெறுங்கள்
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய்……..
என்ற தேவாரத்தை ஓதி மகிழுங்கள்.
MEDINEWS
இன்று இரத்த அழுத்தம் ப்ற்றிபார்ப்போம் இரத்த அழுத்தம் என்பது [BLOOD PRESSURE] நம்முடைய இதயத்திலும் இரத்தக்குழாய்களிலும் ஓடுகின்ற இரத்தம் ஏற்படுத்துகின்ற அழுத்தமாகும்.
இதில் இதயத்தில் உள்ள அழுத்தம் இரத்தக்குழாய்களில் உள்ள அழுத்தம் என இரண்டு உள்ளன.அவைகளை முறையே SYSTOLIC
BP
மற்றும் DIASTOLIC BP என்று அழைக்கின்றோம்.இவைகளையே பலர் தவறாக HIGH BP / LOW BP என்று அழைக்கிறார்கள்
SYSTOLIC
BP என்பது இதயதில் உள்ள அழுத்தம்.
DIASTOLIC BP என்பது இரத்தக்குழாய்களில் உள்ள அழுத்தமாகும்..இதயத்தில் அழுத்தம் அதிகமாகவும் இரத்தக்குழாய்களில் குறைவாகவும் இருககும்..இதை GRADIENT என்று அழைக்கிறோம்.. நம்முடய இதயம் நம் நகரின் WATER TANK போன்றது..நம் இரத்தக்குழாய்கள்
நம் வீட்டுக்குழாய் போன்றது..TANKல்
தண்ணீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும் போகப்போக அழுத்தம் குறைந்துகொண்டே வரும்.. அதுபோலத்தான் இதயத்தில் அழுத்தம் அதிகமாகவும் இரத்தக்குழாய்களில் குறைவாகவும் இருக்கும் .இது இயல்பானது.
NORMAL BLOOD PRESSURE
இதய அழுத்தம் [ SYSTOLIC BP ] 90 – 130
இரத்தக்குழாய் அழுத்தம் [ DIASTOLIC BP ] 60 – 90
HYPERTENSION [இரத்தக்கொதிப்பு]
இரத்தக்கொதிப்பு என்பது உயர் இரத்த அழுத்தமாகும்.அது இதய அழுத்தம் மட்டுமாக இருக்கலாம் அல்லது இரத்தக்குழாய் அழுத்தமாக இருக்கலாம். பல நேரங்களில் இரண்டுமே அதிகமாக இருக்கலாம் ஓடுகின்ற இரத்தின் அழுத்தம் அடிகமாக ஆகின்றபோது அது இரத்தக்குழாய்களை பலவீனப்படுத்தி சேதப்படுத்தி விடுகின்றது அதன் காரணமாக உடலின் முக்கியப்
பகுதிகளான இதயம் மூளை சிறுனீரகம் கண்கள் போன்றவைகளுக்குச் செல்லும் இரத்தஓட்டம் பாதிக்கப்பட்டு
மோசமான விளைவுகளை உண்டாக்குகின்றது
HEART
ATTACK HEART FAILURE BRAIN STROKE KIDNEY
FAILURE
BLINDNESS
DEATH போன்றவை மோசமான விளைவுகளாகும்.
ஒருமுறை இரத்தக்கொதிப்பு கண்டறியப்பட்டுவிட்டால் விடாது
தொடர் சிகிச்சை அவசியமாகும். சிகிச்சையைத் தொடராது
விட்டால்
பல மோசமான வ்ளைவுகளை சந்திக்க வேண்டும்.
இரத்தக்கொதிப்பினாலான
பின் விளைவுகள் [ COMPLICATION ]
வருவதற்கு
முன்பே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால்
எந்த
விதமான பயமுமின்றி நல் வாழ்வு வாழலாம்
வேறொரு
முறை இன்னும் பல செய்திகளுடன் சந்திப்போம்
No comments:
Post a Comment