அபிஷேகப்பலன்கள்
சிவன்
அபிஷேகப்பிரியர். ஒரு சொம்பு தண்ணீரை மொண்டு அவர் தலையிலே ஊற்றினாலே அளவில்லா ஆனந்தம்
அடைபவர்.
நெகிழ்ந்த
மனத்தோடு எல்லாப்பொருட்களைக்கொண்டும் சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம் .ஷோடேச அபிஷேகம்
என்று சொல்லப்படுகின்ற பதினாறு அபிஷேகங்கள் சிறப்புடயவை
ஆனால்
எல்லோராலும் எல்லானாட்களிலும் பதினாறு அபிஷேகங்கள் செய்யமுடியுமா என்பது இயலாமல் இருக்கலாம்
ஆனால்
சுத்தமா மனத்துடன் தூயனீரைக்கொண்டு அபிஷித்தாலே ஈசன் மனம் மகிழ்வார்
அபிஷேகம் செய்கின்ற ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிச்
சிறப்பும்
மகோத்வமும் இருகின்றன.அவை என்னவென்று பார்ப்போம்
1 தண்ணீர் ஈசனருள்
2 பால் நீண்ட
ஆயுள்
3 தயிர் நல்ல
மக்கட்ச்செல்வம்
4 நெய் மோக்ஷம்
5 தேன்
இனிய குரல் வளம்
6 அரிசி மாவு கடன்
இல்லாமை
7 கரும்புச்சாறு நோயின்மை
8 பஞ்சாமிர்தம் அளவில்லா
செல்வம்
9 எலுமிச்சை சாறு எமபயம்
போக்கும்
10
சர்க்கரை பகைமையைப்போக்கும்
11
இளனீர் இன்பமயமான வாழ்க்கை
12
அன்னம் பீடுடைய வாழ்க்கை
13
எண்ணெய் சலனமில்லாமை
14
மஞ்சள் லக்ஷ்மி கடாக்ஷம்
15
சந்தனம் சகல சௌபாக்யம்
16
விபூதி ஈஸ்வரனின்
பாதாரவிந்தம்
இந்த பதினாறு திரவியங்களாலும் ஈசனை அபிஷேகித்து வணங்கி
அவன் அருளைப் பெறலாம்
பொருளளால் அபிஷேகிக்கும்போது பொருட்பலங்களை அவர்
தருகிறார்
ஈஸ்வரனை அன்பால் அபிஷேகம்
செய்தால் அவர் தன்னையே தருவார்
ஓம் நமசிவாய
No comments:
Post a Comment