திருவண்ணாமலை கிரிவலம
இன்று திருவண்ணாமலையில் ஐப்பசி மாத கிரிவலம்.திருவண்ணாமலை
சிவபெருமானின் பஞ்ச பூதத் தலங்களில் அக்னித்தலமாகும்.காஞ்சீபுரம்
பூமித்தலம்,காளஹஸ்தி வாயுத்தலம்,சிதம்பரம் ஆகாயத்தலம்,மற்றும்
திருவானைக்காவல் தண்ணீர் தலம்.
சிவஸ்த்தலங்களிலே திருவாரூரிலே பிறக்க முத்தி,காசியிலே இறக்க முத்தி
திருவண்ணாமலையை நினைக்க முத்தி என்று சொல்வார்கள்.இப்பெருமை பெற்ற நகரிலே ஈசன் மலையாக உள்ளார்.இங்கு மலயே சிவலிங்கமாகும்.
எனவே பௌர்னமி நாட்களில் இக்கிரியை கால்னடயாக வலம் வருவதே
கிரிவலமாகும்.ஒவ்வொருபௌர்னமியின் போதும் லெட்சக்கணக்கான
பக்தர்கள் கிரிவலம் வருகின்றார்கள்.இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்
கொண்டுதான் போகின்றது.
கிரிவலதின் பெருமைகளையும் பலன்களையும் சொல்ல இயலாது.அதை
அனுபவித்து உணரத்தான் முடியும்.ஒரு முறை கிரிவலம் சென்றவர்க்ள்
ஒவ்வொரு மாதமும் மீண்டும் மீண்டும் செல்லவே விழைவர்.உயிராலும்
உணர்வாலும் மட்டுமே உணரக்கூடியவைகளில் இதுவும் ஒன்று.
கிரிவலப்பாதை சரியாக 14 கி மீ கொண்டது.கிரிவலப்பாதயில் 50 க்கும்
மேற்பட்டகோயில்கள் உள்ளன.பல ஆசிரமங்கள் உள்ளன.எட்டு திசைகளிலும் அஷ்டலிங்கங்கள் உள்ளன.பல கடவுள்கள் மற்றும்
தேவைதைகளின் ஆலயங்கள் உள்ளன.
கிழக்கே இந்திரலிங்கம் தென்கிழக்கே அக்னி லிங்கம் தெற்கே எமலிங்கம்
தென்மேற்கே நிருதி லிங்கம் மேற்கே வருணலிங்கம் வடமேற்கே வாயு
லிங்கம் வடக்கே குபேரலிங்கம் தென் கிழக்கே ஈசான்ய லிங்கம் என
எட்டு திசைகளிலும் எட்டு லிங்கங்கள் அஷ்டலிங்கங்களாக அமைந்துள்ளன.
ரமணமஹரிஷிக்கும் சேஷாத்ரி மஹரிஷிக்கும் ஆஸ்ரமங்கள் உள்ளன.
வினயார் முருகன் விஷ்னு அம்பாள் ஆஞ்சனேயர் தெக்ஷ்ணாமூர்த்தி
மாரியம்மன் என எல்லாவித தெய்வங்களின் ஆலயங்களும் உள்ளன.
நேரண்ணாமலைமற்றும் அடி அண்ணாமலை ஆலயங்களும் கிரிவலப்
பாதயிலே அமைந்துள்ளன.கிரிவலம் முடியும் தருவாயில் இடுக்குப்
பிள்ளயார் கோயில் அமைந்துள்ளது
கிரிவலம் வருகையில் ஒவ்வொரு திசையிலிருந்து அம்மலையைப்
பார்க்கும் போது அது வெவ்வேறு உருவங்களில் காட்சியளிப்பது
கானறகரிய காட்சியாகும் நல்ல நிலவொளியில் கிரிவலம் வரும் போது
மலையிலே நிறைந்துள்ள மூலிகைகள் நறுமணமும் முழு நிலவின் தண்ணொளிக்கதிர்களும் நம் உடலுக்கும் உணர்வுக்கும் சொல்லவொனா
இன்பதையும் புத்துணற்சியையும் அளிக்கின்றன
சுமார் 4 முதல் 5 மணி நேர பயணதில் மனதில் சிவசிந்தனையைத்தவிற
வேரெந்தனினைவும் இல்லாது கிரிவலம் முடிக்கும் போது நாம் பேரின்பம்
அடைகின்றோம்.கிரிவலம் முடித்தபின் உடலில் சோர்வோ தளர்வோ கால்
களில் வலியோதெரிவதில்லை.மனமும் உடலும் லேசாகிவிடுகின்றன.
இறைவனே நம் ஆத்மாவில் கலந்த உணர்வுடன் கிரிவலத்தை முடித்து
கோபுர தரிசனம் செய்து அடுத பௌர்னமிக்கு மீண்டும் வருகிறேன் என்று அருணாசலேஸ்வரரிடம் விடைபெற்று திரும்புகிறோம்
No comments:
Post a Comment