ருத்ரத்தின் சாராம்சம்
ருத்ரம் வேதத்தின் நடுநாயகம். நான் முன்பொருமுறை சொன்னது போல ரிக் யஜுர்
சாமம் என்ற மூன்று முக்கிய வேதங்களுக்குள் நடு நாயகமாக விளங்குவது யஜுர் வேதமாகும்
அந்த யஜுர் வேதத்தின் நடுநாயகமாக விளங்குவது ருத்ரமாகும்.
ருத்ரத்தைப் படிப்பதோ பாராயணம் செய்வதோ அல்லது அதை மற்றவர் சொல்லவோ
அல்லது ஓதவோ கேட்பது மிக உன்னத
மானதும் புண்ணியமானதுமாகும். எல்லோரும் ருத்ரத்தைப்
பாராயணம் செய்வது சுலபமல்ல.ஆனால் ருத்ரதில் சிறப்பாக
விளங்கும் சில பகுதிகளை நாம் அறிந்து கொள்ளுவது சிறப்
புடையதாகும்.
ருத்ரப்ரச்னவில் முழுமுதற்கடவுளான வினாயகருக்கான துதி
குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஸ்லோகம் அனேகமாக பலரும்
அறிந்ததும் பலராலும் ஸ்மரிக்கப்படுவதாகும் இதோ அது
ஓம் கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவினாமுபமச்ரவஸ்தமம்
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மஸ்பத ஆ ந
ஸ்ருண்வன்னூதிபி
சீதசாதனம் மஹாகணபதயே நம:
இந்த ஸ்லோகத்தைத் தினம் பாராயனம்
செய்து வினாயகப்பெருமானின் அருளைப்பெறுவோமாக
அடுத்து சிவ நமஸ்க்காரமாக சொல்லப்படுகின்ற ஒரு அதி
உன்னதமான பகுதி இதோ
நமஸ்தே அஸ்து பகவான் விஸ்வேஸ்வராய மஹாதேவாய
த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய
காலாக்னி ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயா
சர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:
இங்கே ஈஸ்வரன் எந்த வடிவங்களில் எல்லாம் விளங்குகிறார்
என்று சொல்லப்படுகின்றது
அடுத்து ருத்ரத்தின் ஹ்ருதயப்பகுதிய்லே பஞ்சாக்ஷ்ர மந்திரம்
சொல்லப்படுகின்றது.
எட்டாவது அனுவாஹத்திலே வரும்
நமசிவாய
என்பதே அளவில்லா வளங்களை அளிக்கவல்ல பஞ்சாக்ஷ்ர மந்திரமாகும் இந்த பஞ்சாக்ஷர
மந்திரத்தை நாளும் பொழுதும்
ஓதுவோர்க்கு வாழ்வில் அளவில்லாத வ்ளங்களும் மகிழ்வும்
சுகமும் பல்கிப்பெருகுவது திண்ணம்
ருத்ரத்திலே சொல்லப்படுகின்ற ம்ற்றொரு உன்னதமான ஸ்லோகம் ம்ருத்யுஞ்சயஸ்லோகமாகும்.
ம்ருத்யு என்றால் எமன் .அந்த எமனை வெற்றி கொள்ளக்கூடிய ஸ்லோகமே ம்ருத்யுஞ்ஜயஸ்லோகமாகும்.
இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து தினம் ஈசன் முன்னே
சொல்லி வந்தால் எம பயம் கிடையாது. எமன் அவர்களை அகாலத்தில் நெருங்கமாட்டான்.
அந்த உன்னதமான ஸ்லோகம் இதோ
த்ரயம்பகம் யஜாமஹேசுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
இதன் பொருள் பழுத்த வெள்ளறிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல சாவினுடய
பிடியிலிருந்து உன்னருளால் விடுபடுவோமாக என்பதாகும். அனேகமாக பல இடங்களில்
ஆயுஷ் ஹோமங்களில் இந்த ஸ்லோகம் சொப்படுவதைக் கேட்டிருப்பீர்கள்
சிவனை வணங்குவதால் ஏற்படும் பலனைப் பற்றி சொல்வதாக
அமைந்துள்ள இந்த ஸ்லோகத்தைப் பார்ப்போம்.
ருத்ரத்தில் நமகத்தின் இறுதிப்பகுதியிலே வருகின்ற் ஸ்லோகம்
அயம் மே ஹஸ்தோ பகவான் அயம் மே பகவத்தர
அயம் மே விஷ்வ பேஷஜோ அயம் சிவாபிமர்சன:
இதன் பொருள் என்னுடைய இந்த கையே இறைவனாகும்.
இந்த கையே இறைவனை விட மேம்பட்டதாகும்.
சகல பிணிக்கும் இதுவே மருந்தாகும்.
ஏன் தெரியுமா இந்தக்கையன்றோ ஈசனை வணங்குகிறது
எனவே ஈசனை வணங்குகின்ற கையே இறைவனாகவும்
இறைவனுக்கு மேலானதாகவும் எல்லாப்ப்ணிக்கும் மருந்தாகவும்
அமைகின்றது.
ருத்ரத்தை முழுமையாகப் படித்து பாராயணம் செய்ய இயலாதவர்கள் அதன் சாரமான
இந்த ஸ்லோகங்களயாவது தினம் இறைவன் முன்னே சொல்லி அவன் அருள் பெற எல்லாம் வல்ல சர்வேஸ்வரண்டம்
வேண்டுவோம்
ஓம் நமசிவாய
No comments:
Post a Comment