ஸ்வாமியே சரணம் ஐயப்பா
இன்று
கார்த்திகை முதல் தேதி. இந்த மாதம் முழுவதும் நமக்கு
முக்கியமான
மாதமாகும். ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் மாலை
அணிந்து
சபரிமலை விரதம் மேற்கொள்ளுவார்கள்.
எல்லா
முருகன் கோயில்களிலும் இந்த மாதம் முழுவதும் சிறப்பு
வழிபாடுகள்
நடைபெறும்.
இம்\மாதம்
கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில்தான் பௌர்னமி
வரும்
. அந்த நாளில் எல்லா சிவன் கோவில்க:ளிலும் தீபத்திருவிழா சிறப்பாக நடைபெரும். திருவண்ணாமலையிலே
மஹாதீபம்
நடைபெருவதும் இந்த நாளில்தான்
கார்த்திகை
முதல் நாள் முதல் விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் மார்கழி மண்டலம் அல்லது தை முதல் தேதியில் சபரிமலை செல்வார்கள். ஐயப்பன்
ஒரு அற்புதமான தெய்வமாவார்.ஐயப்பனின் தத்துவமே சைவ வைணவ கொள்கை
களின்
சங்கமமாகும்
அவர்
சிவன் விஷ்னுவின் மகன் என்பது அவ்விரு கோட்பாடு
களின்
சங்கமத்தையே குறிக்கின்றது.உலகிலேயே மதம் ஜாதி
அந்தஸ்து
வயது இனம் என்ற எந்தவிதமான வேறுபாடும்
இல்லாத
இடம் ஐயப்பனின் சன்னிதியாகும்.அங்கே வருபவ்ர் மனதில் எல்லாம் பரவியுள்ள எண்ணம் ஐயப்பன்
மட்டுமே.
சபரிமலை
முழுதும் ஒலிக்கும் ஒரே கோஷம் சாமியே சரனம் ஐயப்பா என்ற ஒன்று மட்டுமே.எந்த பாகுபாடுமில்லாமல்
ஒவ்வொருவரும் அடுத்தவரை சுவாமி என்றே அழைப்பர்.
விரதமிருக்கின்ற
நாட்களில் அவர்களின் மனதிலே
காமம்
குரோதம் மோகம் மதமாச்சர்யம் என்ற எந்த தீயகுணங்
களுக்கும்
இடமில்லாது நடப்பர்..தனி நபர் ஒழுக்கத்தின் சிறப்பாக
புகையிலை
மது மாமிசம் சிற்றின்பங்கள் ஆகியவற்றை முழுதாக
தவிர்த்து
ஒரு தவ வாழ்க்கை வாழ்வார்கள்.
மனம்
வாக்கு காயம் என்ற மூன்றினாலும் தூய்மாக இருப்பர்.
அவர்கள்
அணியும் காவி கருப்பு நீல உடைகளும் நெற்றியிலே அணிந்திருக்கும் திருனீறு குங்குமம்
மற்றும் சந்தனம் காண்பவர்
நெஞ்சிலே
பக்தியையும் பரவசத்தையும் உண்டுபண்ணும்.
இன்று
நம் பகுதிகளிலே மிக அதிகமான மக்கள் கூடிகின்ற விழாக்களிலே முக்கியமானவை திருவண்ணாமலை
மஹாதீபம்
திருச்செந்தூர்
கந்தசஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் சபரிமலை ஜோதி
ஆகியவையாகும்..பல
லக்ஷக்கணக்கான பக்தர்கள் அன்று சபரி
மலையிலே
கூடுவார்கள்.சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம்
விண்ணைப்பிளக்கும்.
அந்தக்காட்சி மனதிலே அளவில்லா
பரவசத்தை
உண்டு பண்ணும்
முடிந்தவர்கள்
விரதமிருந்து சபரி மலை சென்று அந்தப் பரம்பொருளை தரிசித்து வரலாம் இயலாதவர்கள் இந்த
கார்த்திகை மாதம் முழுதும் விரதமிருந்து அவனை வணங்கி மகிழ்ந்து அருள் பெறலாம்…
ஸ்வாமியே சரணம்
ஐயப்பா
No comments:
Post a Comment