Thursday, February 20, 2025

அபிராமி அந்தாதி-62

 

 

அபிராமி அந்தாதி-62

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

புதன், ஃபிப்ரவரி 19,  2025

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை அறுபத்து ஒரு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் அறுபத்து இரண்டாவது பாடலைப் பார்ப்போம்.

இந்தப் பாடலில் பட்டர் சிவபெருமானுடை வீரப் பெருமைகளில் சிலவற்றைச்சொல்லி,அம்மை அவரைத்தழுவியதால் அவர்மார்பில் ஆஎற்பட்ட அம்பாளின் தழும்பையும், அம்பாள் தனது கரும்பு வில்லோடும் மலர்க் கணைகளோடும் அவர் மனதில் நிறைந்திருப்பதையும் சொல்லுகிறார்

எத்தகைய அச்சமும் அகல

தங்கச் சிலைகொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும் எப்போதும்என் சிந்தையதே.

தங்கச்

பொன்மலையான மேருமலையை

சிலை

வில்லாகக்

கொண்டு,

கொண்டு

தானவர்

திரிபுராசுரர்களின்

முப்புரம்

மூன்று கோட்டைகளையும்

சாய்த்து

அழித்து

மத

மதம் கொண்டு

வெங்கட்

சிவந்த கண்களுடைய

கரி உரி

யானையின் தோலை உரித்து

போர்த்த

மேல் போர்த்திய

செஞ்சேவகன்

சிவந்தவரான சிவபெருமானின்

மெய்யடையக்

திருமேனி அடைய

குரும்பைக்

இள குரும்பை போன்ற

கொங்கைக்

மார்பினால்

குறியிட்ட

அடையாளமிட்ட

நாயகி,

தலைவியே

கோகனகச்

பொன்னைப்போல்

செங் கைக்

சிவந்த கரங்களில்

கரும்பும்,

கரும்பு வில்லும்

மலரும்

மலர் அம்புகளும்

எப்போதும்என்

எப்பொழுதும் என்

சிந்தையதே.

த்யானத்தில் உள்ளன

பொருள்: 

தங்கச் சிலை கொண்டு – பொன்மலையாம் மேரு மலையே வில்லாகக் கொண்டு
தானவர் முப்புரம் சாய்த்து – திரிபுர அசுரர்களின் முப்புரங்களையும் சிரித்தெரி கொளுத்தி
மத வெங்கண் கரி உரி போர்த்த – மதத்தால் சிவந்த கண்களைக் கொண்ட யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட
செஞ்சேவகன் – சிவந்தவனாம் சிவபெருமானின்
மெய்யடையக் – திருமேனியை அடைய
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி – கொங்கையெனும் அம்பினைக் குறி வைத்த தலைவியே!
கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே – சிறந்த பொன்னைப் போல் சிவந்தத் திருக்கையில் இருக்கும் கரும்பு வில்லும் மலர்க்கணைகளும் எப்போதும் என் தியானத்தில் இருக்கின்றன.

(உரை): 

மேரு மலையாகிய பொன்வில்லைக் கொண்டு அசுரர்களுக்குரிய திரிபுரத்தை அழித்து, மதம் பொருந்திய செவ்விய கண்ணையுடைய யானையின் தோலைப் போர்த்த செவ்விய வீரனாகிய சிவபெருமான் திருமேனி முழுவதும் நகிலாகிய குரும்பை யடையாளத்தை வைத்த பிராணேசுவரியினுடைய தாமரை மலரைப்போன்ற சிவந்த கையிலுள்ள கரும்பு வில்லும், மலரம்புகளும் எக்காலத்திலும் என் மனத்துள்ளே இருப்பனவாகும்.

விளக்கம்:

 , அபிராமித்தாயே! உன் கணவர் பொன் மலையை வில்லாகக் கொண்டு, முப்புரத்தை எரித்த, சிவந்த கண்களை உடைய, யானைத்தோலைப் போர்த்திய சிறந்த காவலனாவான். அன்னவனின் திருமேனியையும், உன்னுடைய குரும்பையொத்த கொங்கையால் சோர்வடையச் செய்தவளே! பொன் போன்ற சிவந்த கைகளில் கரும்பு வில்லோடும், மலர் அம்போடும், என் சிந்தையில் எப்போதும் உறைந்திருப்பாய்.

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

புதன், ஃபிப்ரவரி 19,  2025

 

No comments:

Post a Comment