Monday, February 17, 2025

அபிராமி அந்தாதி-61

 

 

அபிராமி அந்தாதி-61

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

ஞாயிறு, ஃபிப்ரவரி 16,  2025

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை அறுபது பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் அறுபத்தொன்றாவது பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில் பட்டர் அம்பாள் நாயினும் கடையேனான தன்னை ஒரு பொருட்டாக மதித்து ஏற்றுக்கொண்ட த்னமையை வியவரிக்கின்றார்

61. மாயையை வெல்ல

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்
தாயே, மலைமகளே, செங்கண்மால் திருத் தங்கச்சியே.

நாயேனையும்

நாயை விட ஈனனான என்னையும்

இங்கு

இவ்வுலகில்

ஒருபொருளாக

ஒரு பொருட்டாக

நயந்து வந்து,

விரும்பி நாசிவந்து

நீயே

உன்னருளான் நீயே

நினைவின்றி

என் நினைவில்லாதபடி

ஆண்டு

என்னை ஆண்டு

கொண்டாய்,

கொண்டாய்

நின்னை

உன்னை

உள்ளவண்ணம்

கருணையில் சிறந்தவள் நீ

அறியும்

என்ற உண்மையை

பேயேன்

பேயேனாகிய நான்

அறிவு தந்தாய்

அறியும் பேறு தந்தாய்

என்ன பேறு

அதற்கு நான் என்ன பேறு

பெற்றேன்

பெற்றோனே

தாயே,

இப்ரபஞ்சத்தின் மாதாவே

மலைமகளே,

இனயவன் மகளே

செங்கண்

சிவந்த கண்களுடைய

மால்

திருமாலின்

திருத்தங்கச்சியே.

பெருமை மிகு தங்கையே

 

 

பொருள்:

நாயேனையும் –                                                                                                                     நாயை விட ஈனனான என்னையும்                                                                                          

இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து –                                                                    இங்கு ஒரு பொருட்டாக விரும்பி வந்து                                                                            

நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் –                                                                 என் முயற்சி சிறிதும் இன்றி நீயே உன் கருணையினால், என்னைப் பற்றிய நினைவே எனக்கு இல்லாதபடி, என்னை ஆண்டு கொண்டாய்                   

நின்னை உள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய் –                        எந்தக் காரணமும் பார்க்காத கருணையில் சிறந்தவள் நீ என்ற உன் உன்மை நிலையையும் உள்ள வண்ணம் அறியும் அறிவினையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய்                                                                                           

என்ன பேறு பெற்றேன் –                                                                                                    இந்த அறிவினை உன் அருளால் பெற என்ன பேறு பெற்றேன்                               

தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே –                                        என் தாயே! மலையரசன் மகளே! அடியார்களுக்கு அருளும் கருணையால் சிவந்த கண்களையுடைய திருமாலவனின் திருத்தங்கச்சியே!

(உரை): 

உலகத்து உயிர்க்கெல்லாம் மாதாவே, பார்வதி தேவியே, சிவந்த கண்ணையுடைய திருமாலுடைய அழகிய தங்கையே, நாய் போன்ற என்னையும் நீ இங்கே நின் பார்வைக்கு உரிய பொருளாகத் திருவுள்ளங் கொண்டு விரும்பி நீயே வலிய வந்து, இவனை ஆட்கொள்ளலாகும், ஆகாது என்று ஆராயும் நினைவு இல்லாமல் அடியேனை அடிமை கொண்டாய்; நீ இருந்தபடி நின்னைப் பேய்போன்ற யான் அறியும் ஞானத்தை அருளினாய்; அடியேன் எத்தகைய பாக்கியத்தை அடைந்தேன்!

விளக்கம்: 

தாயே! மலையரசர் மகளே! சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே! நாயாகவுள்ள என்னையும் இங்கே ஒரு பொருட்டாக மதித்து, நீயே, தன்னை மறந்து ஆட்கொண்டு விட்டாய்! அது மட்டுமல்லாமல், உன்னையே உள்ளபடியே அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய். நான் பெறுதற்கரிய பேறல்லவோ பெற்றேன்!

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

ஞாயிறு, ஃபிப்ரவரி 16,  2025

 


No comments:

Post a Comment