Tuesday, February 4, 2025

அபிராமி அந்தாதி-58

 

 

அபிராமி அந்தாதி-58

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

செவ்வாய், ஃபிப்ரவரி 4,  2025

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை ஐம்பத்து ஏழு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் ஐம்பத்தெட்டாவது பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில் பட்டர் பல நிலைகளிலும் தாமரையின் வடிவமாக இருப்பதையும் அவளின் அங்கங்கள் அனைத்துமே தாமரைகளாக இருப்பதையும் சொல்லி அத்தாமரைகளே தனக்க்கு  தஞ்சம் என்று சொல்லுகிறார்

மனஅமைதி பெற

அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல்நல்லாள், தகை சேர்நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், தையல்நல்லாள், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.

அருணா

கதிரவனைக்கண்டு

ம்புயத்தும்,

மலரும் தாமரையிலும்

என் சித்தா

என் மனமாகிய

ம்புயத்தும்

தாமரையிலும்

அமர்ந்திருக்கும்

வீற்றிருக்கும்

தருணாம்புய

இளைய தாமரை மொட்டாய

முலைத்

மார்பகங்களை கொண்ட

தையல்நல்லாள்,

பெண்களில்  சிறந்த அன்னையின்

கரா

திருக்கரங்கள்

ம்புயமும்

எனும் தாமரைகளும்

சரணா

திருவடிகள்

ம்புயமும்

எனும் தாமரைகளும்

அல்லால்

அல்லாது

ஒரு தஞ்சமுமே.

எந்த வேறு ஒரு கதியும்

கண்டிலேன்,

அறியேனே

 

 

பொருள்: 

அருணாம்புயத்தும் –                                                                                                           அருணனாம் பகலவனைக் கண்டு வைகறையில் மலரும் தாமரையிடத்தும்                                                                                  

என் சித்தாம்புயத்தும் –                                                                                                 என் மனமெனும் தாமரையிடத்தும்

அமர்ந்திருக்கும் தருண அம்புய முலைத் தையல் நல்லாள் – அமர்ந்திருக்கும் இளமையான, தாமரை போன்ற முலைகளையுடைய பெண்களில் சிறந்த அன்னையின்                                                                                   தகை சேர் நயனக் கருண அம்புயமும் –                                      பெருமையுடைய திருக்கண்கள் என்னும் கருணைத் தாமரைகளும்

வதன அம்புயமும் –                                                                                                     திருமுகம் என்னும் தாமரையும்

கர அம்புயமும் –                                                                                        திருக்கரங்கள் என்னும் தாமரைகளும்                                                              சரண அம்புயமும்                                                                                       திருவடிகள் என்னும் தாமரைகளும்
அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே –                                                           அன்றி வேறு எந்த கதியையும் அறியேன்

உரை: 

செந்தாமரை மலரிலும் என் உள்ளத் தாமரையிலும் எழுந்தருளியிருக்கும், தாமரை அரும்பு போன்ற நகிலையுடைய பாலாம்பிகையின் அழகு சேர்ந்த கருணை விழியாகிய தாமரையும், திருமுகத் தாமரையும், திருக்கர மலரும், திருவடிக் கமலமும் ஆகிய பற்றுக்கோடுகளையன்றி வேறொரு பற்றுக்கோட்டையும் யான் அறிந்திலேன்.

விளக்கம்: 

அபிராமி! வைகறையில் மலர்ந்த தாமரையினிடத்தும் என்னுடைய மனத்தாமரையிலும் வீற்றிருப்பவளே! குவிந்த தாமரை மொக்குப் போன்ற திருமுலையுடைய தையலே! நல்லவளே! தகுதி வாய்ந்த கருணை சேர்ந்த நின் கண் தாமரையும், முகத்தாமரையும், பாதத் தாமரையுமேயல்லாமல், வேறொரு புகலிடத்தை நான்

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

செவ்வாய், ஃபிப்ரவரி 4,  2025

 

No comments:

Post a Comment