ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
செவ்வாய்,
ஃபிப்ரவரி 11, 2025
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை ஐம்பத்து ஒன்பது பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் அறுபதாவது பாடலைப் பார்ப்போம்.
இந்த பாடலில் பட்டர் அம்பாளின் திருவடிகள் பல உயர்ந்த இடங்களில் இருந்தாலும் தனது முடியிலும் நிலை
கொண்டிருப்பதைச் சொல்லுகின்றார்
மெய்யுணர்வு பெற
பாலினும் சொல் இனியாய், பனி மா
மலர்ப் பாதம் வைக்க
மாலினும், தேவர்
வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும், கீழ்நின்று
வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும்
சால நன்றோ அடியேன் முடை நாய்த்தலையே?
பாலினும் |
பாலைவிட |
சொல்
இனியாய் |
இனிய
பேச்சினை உடையவளே |
பனி |
உனது
குளிர்ந்த |
மாமலர்
பாதம் |
தாமரைப்
பாதங்களை |
வைக்க |
வைக்க |
மாலினும் |
திருமாலை
விடவும் |
தேவர் |
தேவர்களும் |
வணங்க |
வணங்கித்தொழும் |
நின்றோன் |
சிவபெருமானின் |
கொன்றைவார் |
கொன்றைமலர்
அணிந்த |
சடையின்மேலினும் |
ஜடாமுடியினை
விட |
கீழ்
நின்று |
கீழே
நின்று |
வேதங்கள் |
அருமறையான
வேதங்கள் |
நாலினும் |
நான்கும் |
பாடும் |
உன்
புகழ் பாடும் |
மெய்பீடம் |
பீடங்களினும் |
அடியேன் |
சிறியோனாகிய
எனது |
முடை |
நாற்றமெடுத்த |
நாய்த்
தலை |
நாய்த்தலை |
சால |
விரும்பி |
நன்றாகியதோ |
வைக்க
ஏற்றதோ? |
பொருள்:
பாலினும் சொல் இனியாய் –
பாலை விட இனிமையான பேச்சினை உடையவளே!
பனி மாமலர்ப் பாதம் வைக்க – உன் குளிர்ந்த தாமரை போன்ற திருவடிகளை வைக்க மாலினும் – திருமாலை விட
தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்ச்சடையின் மேலினும் – எல்லாத் தேவர்களும் வணங்க நின்றவனாம் சிவபெருமானின் கொன்றை மலர் அணிந்த அழகிய சடை முடியை விட
கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு நாலினும் – கீழே நின்று உன் புகழ் பாடும் நான்கு வேத பீடங்களை விட
சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே – நாயேனாகிய அடியேனின் முடை நாற்றம் வீசும் தலை சால நன்றாகியதோ? (விரும்பி என் தலை மேல் உன் திருவடிகளை வைத்தாயே?!)
உரை:
பாலைக் காட்டிலும் இனிய சொல்லையுடைய தேவி, குளிர்ச்சியுடைய தாமரை மலர் போன்ற நின் திருவடிகளை வைத்தருள, திருமாலும் மற்றும் உள்ள தேவர்களும் வணங்கும்படி நின்ற சிவபிரானது கொன்றைக் கண்ணியை அணிந்த நீண்ட சடையின் மேலிடத்தைக் காட்டிலும், கீழே நின்று வேதங்கள் பாடுகின்ற உண்மையான பிரணவ பீடங்கள் நான்கைக் காட்டிலும் அடியேனுடைய நாற்றமுடைய நாய்த்தலையைப் போன்ற தலையானது மிகவும் நன்றோ?
விளக்கம்:
ஏ, அபிராமித்தாயே! பாலைவிட
இனிமையான
சொல்லை
உடையவளே! நீ
உன்னுடைய
திருவடித்
தாமரையை, திருமாலைக்
காட்டிலும்
உயர்ந்த
தேவர்கள்
வணங்கும்
சிவபிரானின்
கொன்றையனிந்த
நீண்ட
சடைமுடியில்
பதித்தாய். அடுத்துன்
அருட்கண்கள்
பட்டு
உயர்ந்து
நிற்கும்
நால்வகை
வேதத்திலே
உன்னுடைய
திருவடித்
தாமரைகளைப்
பதித்தாய். ஆனால்
இன்று
நாற்றமுடைய
நாயாகிய என்னுடைய தலையையும்,
உன்னுடைய
திருவடிகளில் சேர்த்துக் கொண்டாய். (மேற்கூறிய
சிவபெருமான், நான்கு வேதங்களோடு
என்னையும் ஒப்பிட, நான் அவ்வளவு
சிறந்தவனா?)
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
செவ்வாய், ஃபிப்ரவரி
11, 2025
No comments:
Post a Comment