ஓம் நமசிவாய:
லிங்காஷ்டகம்
சிவதாஸன் ஜகன்நாதன் ஃபிப்ரவரி, 26 2025 குரோதி, மாசிமாதம்,
14 புதன்
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்களும் மஹா
சிவராத்ரி நந்நாள் வாழ்த்துக்களும்.
தமிழில் சிவபெருமானை வணங்கும் பாடல்கள் பத்துப் பாடல்கள் கொண்ட
தொகுப்பாய் இருக்கும்,. நாம் அவைகளை பதிகங்கள் என்று கூறுவோம். சமஸ்க்ருத்த் தில் சிவபெருமானுக்கு உகந்த பாடல்கள்
எட்டு ஸ்லோகங்களாக இருப்பவைகளை அஷ்டகங்கள் என்று சொல்லுவோம் அஷ்ட என்றால் எட்டு என்பது நமக்குத்தெரியும்.
இன்றைய மஹா சிவராத்ரி நந்நாளில் இந்த ஸ்லோகங்களைப் படிப்பதாலும்
பாராயணம் செய்வதாலும் பரமேஸ்வர ரின் பேரருளுக்கு நாம்
பாத்தியமாகலாம்.இன்று நான் லிங்காஷ்டகத்தை முதலில் எட்டு ஸ்லோகங்களையும் பின்
அவைகளின் தமிழ் பொருளையும் தந்துள்ளேன் .இந்த அருள்மிகு நாளில் அவைகளை எத்தனை முறை
முடியுமோ அத்தனை முறைகள் படித்துபரமேஸ்வர ரின் பேர
ருளுக்குப் பாத்திரமாகுங்கள்
சிவதாஸன் ஜகன்நாதன்
எளிமையான சிவ அஷ்டக ஸ்லோகங்களில் முதன்மையானது லிங்காஷ்டகம்.ஸ்வரூபஅரூப ரூபமாக சிவபெருமான் விளங்குவதே லிங்க
வடிவமாகும்
அந்த திவ்ய வடிவத்தைப் போற்றிப் பாடும் எட்டு எளிய சமஸ்க்ருத
ஸ்லோகாங்களைக் கொண்ட்தே லிங்காஷ்டகமாகும்.
இந்த மந்திரத்தை
சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு மலர்களைச் சூடி மலர்களைக் கொண்டு அர்ச்சனை
செய்து, இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ
லிங்கம்1
தேவ முனி ப்ரவாச்சித
லிங்கம்
காம தஹம் கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்2
ஸர்வஸுகந்தி ஸுலேபித
லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 3
கனக மஹாமணி பூஷித
லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 4
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 5
தேவ கணார்ச்சித
ஸேவித லிங்கம்
பானவர்ப் பக்தி ப்ரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 6
அஷ்ட தளோபரி வேஷ்டித
லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 7
ஸுரரகுரு ஸுரவர்
பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சில லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 8
லிங்காஷ்டகம் இதம்
புண்யம் யே படேத் சிவ சன்னிதௌ சிவலோகம் அவாப்நோதி
சிவேந ஸஹமோததே
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்1
ப்ரஹ்ம முராரி ஸுரார்சித
லிங்கம் – நான்முகப் பிரம்மனாலும், முரனை
அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் தேவர்களாலும்
அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.
நிர்மல பாஸித ஸோபித லிங்கம் – குற்றமற்ற
மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்.
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் – பிறப்பு
– இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட
சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.
தேவ முனி ப்ரவாச்சித லிங்கம்
காம தஹம் கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம் – மறைந்திருந்து
மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து, பின்னர் அவனை மீண்டும்
உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்.
ராவண தர்ப வினாக்ஷன லிங்கம் – இராவணனின்
கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட
சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
ஸர்வஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் – எல்லாவிதமான
நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்.
புத்தி விவர்த்தன காரண லிங்கம் – உண்மையறிவு
அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்.
சித்த சுராசுர வந்தித லிங்கம் – சித்தர்களாலும்
தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட
சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
கனக மஹாமணி பூஷித லிங்கம் – பொன்னாலும்
மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம்.
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் – நாகங்களின்
அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம்.
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம் – தனக்குரிய
மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட
சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் – தாமரை
மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம்.
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் – பற்பல
பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட
சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பானவர்ப் பக்தி ப்ரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் – தேவ
கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம்.
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் – உணர்வுடன்
கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம்.
தினகர கோடி ப்ரபாகர லிங்கம் – கோடி
சூரியன்களின் ஒளியினைக் கொண்டிருக்கும் லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட
சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் – எட்டிதழ்
தாமரையால் சூழப்பட்ட லிங்கம்.
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் – எல்லாவிதமான
செல்வங்களுக்கும் காரணமான லிங்கம்.
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் – எட்டுவிதமான ஏழ்மையை
அழிக்கும் லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட
சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
ஸுரரகுரு ஸுரவர் பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சில லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் – தேவலோக
நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.
பராத்பரம் பரமாத்மக லிங்கம் – பெரியதிலும்
பெரியதான,
பரமாத்ம உருவான லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட
சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
லிங்காஷ்டகம் இதம் புண்யம் யே படேத் சிவ சன்னிதௌ சிவலோகம் அவாப்நோதி சிவேந ஸஹமோததே
லிங்காஷ்டகம் இதம்
புண்யம் – இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது.
யே படேத் சிவ சன்னிதௌ – இதனை
சிவ சன்னிதானத்தில் படித்தால்,
சிவலோகம் அவாப்நோதி – சிவலோகம் கிடைக்கும்.
சிவேந ஸஹமோததே – சிவனுடன் தோழமை
பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.
ஓம் நமசிவாய: சிவதாஸன் ஜகன்நாதன்
ஃபிப்ரவரி, 26 2025 குரோதி, மாசிமாதம்,
14 புதன்