Monday, November 28, 2011


சிவ வடிவங்கள்

சிவ வடிவங்கள் அல்லது சிவஸ்வரூபங்கள் அறுபத்து நான்காகும்
சிவன் உருவமாகவும் அரூவமாகவும் திகழ்பவர். யார் எப்படி அவரை த்யானிக்கின்றார்களோ அந்த வடிவிலேயே காக்ஷி அளிக்கவல்லவர்.
ஆனால் பல நிலைகளில் பல ஸ்தலங்களில் பல காரணங்களுக்காக
அவர் பலப்பல வேடங்கள் கொண்டு அருள் புரிந்துள்ளார்  அவ்வாறு
அவர் மேற்கொண்ட வடிவங்கள் அல்லது ஸ்வரூபங்கள் அறுபத்தி நான்கு. அவரின் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒரு சிறப்பும் பெருமையும் உண்டு  அந்த வடிவத்தொடு இயைந்த ஸ்தலத்துக்கும் ஒரு பெருமை உண்டு.

அறுபத்து நான்கு சிவஸ்வரூபங்கள்

1 லிங்கமூர்த்தி
2 லிங்கோர்ப்பவ மூர்த்தி
3 முகலிங்க மூர்த்தி
4 சதாசிவ மூர்த்தி
5 மகா சதாசிவ மூர்த்தி
6 உமாமகேச மூர்த்தி
7 சுகாசன மூர்த்தி
8 உமேச மூர்த்தி
9 சோமாஸ்கந்த மூர்த்த
10 சந்திரசேகர மூர்த்தி
11 இடபாரூட மூர்த்தி
12 இடபாந்திக மூர்த்தி
13 புஜங்கலளித மூர்த்தி
14 புஜங்கத்ராச மூர்த்தி
15 சந்த்யான்ருத்த மூர்த்தி
16 சதாநிருத்த மூர்த்தி
17 சண்டதாண்டவ மூர்த்தி
18 கங்காதர மூர்த்தி
19 கங்காவிசர்ஜன மூர்த்தி
20 திரிபுராந்தக மூர்த்தி
21 கல்யாணசுந்தர மூர்த்தி
22 அர்த்தநாரீஸ்வர மூர்த்தி
23 கஜயுக்த மூர்த்தி
24 ஜ்வாரபக்ன மூர்த்தி
25 சார்த்தூலஹர மூர்த்தி
26 பாசுபத மூர்த்தி
27 கங்காள மூர்த்தி
28 கேசவார்த்த மூர்த்தி
29 பிக்ஷாடன மூர்த்தி
30 சிம்ஹக்ன மூர்த்தி
31 சடேச அனுக்ரஹ மூர்த்தி
32 தெக்ஷிணா மூர்த்தி

    நாளை மீண்டும் மீதமுள்ள 32 வடிவங்களை அறிவோம்



Saturday, November 26, 2011


RISK FACTORS FOR HEART DISEASE
இதயநோய் உண்டு பண்ணக்கூடியவை

A risk factor is something that will increase the chance of your getting a heart problem In the absence of this factor the chances of your getting a heart disease are less.
Some of the risk factors are under our control and can be changed. But some other factors are not under our control and hence cannot be changed or modified.

RISK FACTORS THAT YOU CANNOT CHANGE

1 AGE            Risk of HD increases with advancing age
2 GENDER        Males are more prone for HD than females
3 GENES         If your parents had a HD you are at a higher risk
4 RACE          Certain races including INDIANS are at a higher risk

RISK FACTORS YOU CAN CHANGE

1 SMOKING          If you are a smoker stop it immediately
2 CHOLESTROL       Cholesterols are the main direct cause of HD.You must
                       keep your cholesterol under strict control
3 BLOOD PRESSURE  If you have high BP keep under strict control by diet
                       exercise and medicines
4 DIABETES          Diabetes is the worst culprit Keep it under control
5 EXERCISE          Daily exercise is a must to avoid getting HD
6 DIET              Your diet must take a low fat high protein and high
                    fiber diet
7 WEIGHT           You must maintain an optimum eight Most of us are
over weight persons Maintanng an optimal weight
will reduce the risk of HD

8 STRESS           In these days mental stress is an important factor for
                   HD Stess reduction and management is important
9 ALCOHAL          Alcohal should be limited If you can stop drinking

Now knowing the risk factors for heart disease it is only in our hands to prevent it Because most of the risk factors are controllable
Let us adhere to them and live a long healthy and happy life

Friday, November 25, 2011


உங்கள் நெஞ்சு வலி  இருதயவலியா

  நெஞ்சுவலி என்றவுடன் நாம் எல்லொரும் நினைப்பது இருதயத்தைத்தான்.எத்தனையோ வலிகள் வந்தாலும் நெஞ்சுவலி என்றவுடன் நமக்கு அளவில்லாதபயம் உண்டாகின்றது.
நெஞ்சுவலி என்பது நாம் பயப்பட வேண்டிய ஒன்றுதான்
ஆனால் எல்லா நெஞ்சுவலியும் இருதய வலியா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்..
நெஞ்சுவலியிலே இரண்டு வகைகள் உண்டு
1 இதயம் சார்ந்த நெஞ்சுவலி     CARDIAC(HEART) PAIN
2.இதயம் சாரா நெஞ்சுவலி        NONCARDIAC PAIN
   இதயம் சாரா நெஞ்சுவலி பல காரணங்களால் வரலாம்.
நாம் இன்று இதயம் சார்ந்த நெஞ்சுவலியின் தன்மைகளைப் பற்றி
தெரிந்துகொள்ளுவோம் .இருதய வலி என்பது ஒரு அபாய சங்கு ஆகும் .அதை சரியாகக்கண்டறிந்து உரிய நேரத்தில் முறையான மருத்துவம் செய்தால் உடல் உபாதைகளையும் உயிர் இழப்பையும் தடுக்கலாம்.நெஞ்சுவலியின் சரியான காரணத்தை முறையான மருத்துவர்தான் கண்டறிந்து குணப்படுத்த முடியும் என்றாலும் நாமும் முன்னெச்சரிக்கையுடன் செயல் பட்டால்தான் மோசமான பின் விளைவுகளைத் தவிற்கமுடியும்.

இதயவலியின் தன்மைகள்

1 இடம்  
      இதயவலி மார்பின் நடுப்பகுதி (தொண்டக்குழியிலிருந்து மேல்வயிறு வரையிலானபகுதி) இடது மார்புப்பகுதி இடது தோள் மற்றும் இடது மேற்கை இடது தாடைப்பகுதி இடது முதுகின் மேற்பகுதி நடு வயிற்றின் மேற்பகுதி மற்றும் சில வேளைகளில்
வலது பகுதிகளிலும் வரலாம்.
     பொதுவாக இதயவலி பரவலானதாகவே இருக்கும்.எங்கே வலிக்கிறது என்னும்போது உள்ளங்கை முழுவதையும் வைத்துக்காட்டினால் அது இதய வலியாக இருக்கலாம் ஆனால்
ஒரு விரலால் ஒரு புள்ளியில் வலி என்றால் அனேகமாக அது இதயவலியாக இருக்க வாய்ப்பில்லை

2 வலியின் தன்மை

      இதயவலி பொதுவாக ஒரு பாராங்கல்லை வைத்து மார்பிலே அழுத்துவது போலிருக்கும் .சிலருக்கு SHARP PAIN என்று சொல்லக்கூடிய பளிச் என்ற வலியிருக்கும் பல நேரங்களில் எரிச்சல் மட்டுமே இருக்கும் மற்றும் சிலருக்கு நெஞ்சில் ஒரு இனம்புரியாத உணர்வு CHEST DISCOMFORT AND UNEASINESS மட்டும் இருகும்
    இந்த வகையான குறிகள் இதயசாரா நோய்களிலும் வரலாம்
உதாரணமாக குடல் மற்றும் இறைப்பை நோய்களிலும் நடுவயிற்றின் மேற்பகுத்யில் வலி வரலாம் அவகளை பாகுபடுத்தி உண்மையான காரணத்தை அறியவேண்டியது அவசியம்.

3 நேரம்   DURATION

    பொதுவாக இதயவலி நீண்ட நேரம் தொடற்சியாக இருக்காது. பல வேளைகளில் விட்டு விட்டே வரும். நாள் பூராவும் தொடர்ந்து வலி இருந்தால் அனேகமாக அது இதயவலியாக இருக்க வாய்ப்பில்லை.
  ஆனால் மிக மோசமான மாரடைப்பு (MAJOR HEART ATTACK)
போன்ற சமயங்களில் தொடர்ந்து வலி இருக்க வாய்ப்புண்டு

4 பரவுதல்   RADIATION

   இதயவலி பொதுவாக அது வருகின்ற பகுதியில் மட்டும் நிற்பதில்லை. நெஞ்சிலிருந்து அது சில இடங்களுக்கு பரவும்
நெஞ்சிலிருந்து இடது தோள் புஜம் தாடை நெஞ்சுக்குழி முதுகு
ஆகிய இடங்களுக்கு வலி பரவலாம்
5 எதனால் வருகிறது   WHAT BRINGS THE PAIN

    பொதுவாக சாதாரண நிலைகளில் வலி வருவதில்லை.
அதிகமான உடல் உழைப்பு (EXERTION) மனச்சோர்வு (DEPRESSION)
மன அழுத்தம் (ANXIETY) TENSION அளவுக்கு அதிகமான உணவு
மாறுபட்ட வெப்ப நிலைகள் போன்றவைகள் இதயவலியை உண்டாக்கக்கூடியவை

6 எப்படிப்போகிறது     WHAT RELIEVES THE PAIN

    நெஞ்சுவலி வந்தவுடன் நாம் செய்கின்ற செயலை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தால் வலி நின்றுவிட்டால் அது இதயவலியாகும்.PAIN RELIEVED BY REST
   நாக்கின் அடியில் வைக்கும் NITRATE மாத்திரைகள் வைத்து வலி நின்றால் அது இதயவலியாகும்
   அமைதியான சூழலில் வலி நின்றால் அது இதய வலியாக இருக்கலாம்
    இவைகள் எல்லாம் செய்த பின்னும் வலி தொடர்ந்திருந்தால்
அது அனேகமாக இதயவலியாக இருக்க வாய்ப்பில்லை

உடனான குறிகள்   ASSOCIATED SYMPTOMS

    நெஞ்சுவலி இதயவலியாக இருந்தால் அதனுடன் கீழ்க்கண்ட குறிகளும் காணப்படும்
    அளவில்லா வியர்வை EXCESSIVE SWEATING
    தலைசுற்றல்          GIDDINESS
    மயக்கம்              DIZZINESS
    மூச்சுத்திணரல்       BREATHLESSNESS  (DYSPNOEA)
    வாந்தி               VOMITING
    படபடப்பு             PALPITATION
    நினைவிழப்பு         UNCONSCIOUSNESS

நான் குறிப்ப்ட்டுள்ள செய்திகளை மனதில் கொண்டு நாம் வரும் நெஞ்சுவலியின் தன்மையை உணர முடியும்
இருந்தாலும் உண்மையான சரியான கணிப்பை (DIAGNOSIS) ஒரு
மருத்துவரால் மட்டுமே செய்ய முடியும் எனவே இந்த உண்மைகளை உங்களின் தெரிந்துகொள்ளுதலுக்காகவே கொடுத்துள்ளேன் (FOR YOUR KNOWLEDGE AND INFORMATION)
உண்மையான நெஞ்சுவலியின் தன்மையை கண்டறிந்து முறையான மருத்துவம் செய்யவேண்டியவர் உங்கள் மருத்துவர் மட்டுமே என்பதை மறவாதீர்கள்
   


Thursday, November 24, 2011


அபிஷேகப்பலன்கள்

சிவன் அபிஷேகப்பிரியர். ஒரு சொம்பு தண்ணீரை மொண்டு அவர் தலையிலே ஊற்றினாலே அளவில்லா ஆனந்தம் அடைபவர்.
நெகிழ்ந்த மனத்தோடு எல்லாப்பொருட்களைக்கொண்டும் சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம் .ஷோடேச அபிஷேகம் என்று சொல்லப்படுகின்ற பதினாறு அபிஷேகங்கள் சிறப்புடயவை
ஆனால் எல்லோராலும் எல்லானாட்களிலும் பதினாறு அபிஷேகங்கள் செய்யமுடியுமா என்பது இயலாமல் இருக்கலாம்
ஆனால் சுத்தமா மனத்துடன் தூயனீரைக்கொண்டு அபிஷித்தாலே ஈசன் மனம் மகிழ்வார்
 
   அபிஷேகம் செய்கின்ற ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிச்
சிறப்பும் மகோத்வமும் இருகின்றன.அவை என்னவென்று பார்ப்போம்

1  தண்ணீர்                     ஈசனருள்
2  பால்                         நீண்ட ஆயுள்
3  தயிர்                        நல்ல மக்கட்ச்செல்வம்
4  நெய்                         மோக்ஷம்
5  தேன்                        இனிய குரல் வளம்
6  அரிசி மாவு                  கடன் இல்லாமை
7  கரும்புச்சாறு                 நோயின்மை
8  பஞ்சாமிர்தம்                 அளவில்லா செல்வம்
9  எலுமிச்சை சாறு             எமபயம் போக்கும்
10 சர்க்கரை                     பகைமையைப்போக்கும்
11 இளனீர்                      இன்பமயமான வாழ்க்கை
12 அன்னம்                     பீடுடைய வாழ்க்கை
13 எண்ணெய்                   சலனமில்லாமை
14 மஞ்சள்                      லக்ஷ்மி கடாக்ஷம்
15 சந்தனம்                     சகல சௌபாக்யம்
16 விபூதி                       ஈஸ்வரனின் பாதாரவிந்தம்

  இந்த பதினாறு திரவியங்களாலும் ஈசனை அபிஷேகித்து வணங்கி அவன் அருளைப் பெறலாம்
 
  பொருளளால் அபிஷேகிக்கும்போது பொருட்பலங்களை அவர் தருகிறார்
                     ஆனால்
  ஈஸ்வரனை அன்பால் அபிஷேகம் செய்தால் அவர் தன்னையே தருவார்

ஓம் நமசிவாய

Tuesday, November 22, 2011


இதய நோயின் முக்கியமான அறிகுறிகள்

இன்றைய நவீன உலகில் மக்களுக்கு அதிகமான பாதிப்புகளையும் மரணத்தையும் உண்டாக்குகின்ற நோய்களில்
முன்னணியில் இருப்பது இருதய நோயாகும் .இதற்கு முக்கிய காரணம் இருதய நோயின் அறிகுறிகள் பற்றி மக்களின் அறியாமையேயாகும் .பல நேரங்களில் இருதய
நோயின் அறிகுறிகளை அலட்சியப்படுத்துவதனாலேயே மரனம்
ஏற்படுகின்றது. என்வே அனைவரும் இருதய நோயின் அறிகுறிகள் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும்

1 நெஞ்சு வலி
   இருதய நோயின் ப்ரதான அறிகுறி நெஞ்சு வலியாகும் இது மார்பின் நடுப்பகுதியிலோ அல்லது சற்று இடப்புறமாகவோ இருக்கும் .நெஞ்சின்மீது ஒரு பாராங்கல்லைத் தூக்கி வைத்ததுபோல் இருக்கும். சில நேரங்களில் எரிச்சல் போலவும் இருக்கலாம் பலருக்கு நெஞ்சு வலி ஒரு சிறிய நெருடல் (DISCOMFORT) போல இருக்கும்.
   இந்த வலி இடது தோள் இடது கை வயிற்றின் மேல் பகுதி
தாடை சில நேரங்களில் வலப்புற மார்பிலும் உணரப்படும். .பொதுவாக இருதய வலி STRAIN மூலமாகவும் உடல் வருந்த வேல செய்வதாலும் உண்டாகும். ஓய்வெடுத்தால் உடன் வலி நின்றுவிடும்.
   பல நேரங்களில் இந்த வலி வய்ற்றுக் கோளாரினாலோ அல்லது அஜீரணத்தினாலோ உண்டானதென தவறாக எண்ணப்பட்டு உயிரிழப்புக்கு ஆளாக நேரிடுகிறது. என்வே நெஞ்சு வலியை அல்ட்சியப்படுத்தாதீர்கள்

2 மூச்சுத்திணறல்
   இதுவும் ஒரு முக்கியமான அறிகுறியாகும். மூச்சுத்திணறல் சுவாச நோய்கள் காரணமாக வரலாம் அல்லது இருதய நோய் காரணமாகவும் வரலாம்.அவைகளை சரியாக வேறுபடுத்தி அறிந்தால்தான் முறையான் சிக்ச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற முடியும

இருமல்

   இருமல் ஒரு சாதாரண அறிகுறியாகத் தோன்றினாலும் இதுவும் ஒரு முக்கியமான அறிகுறியாகும். பல காரணங்களாலும் நோய்களாலும் இருமல் வரலாம். இருதய நோய் உள்ளவர்களுக்கு  
நுறையீரலில் நீர் கட்டிக்கொள்ளுவதால் இருமலும் மூச்சுத்திணரலும் உண்டாகின்றன

மயக்கம்
   மயக்கம் தலைசுற்றல் போன்றவையும் நினைவிழத்தலும் சாதாரணமாக வரக்கூடும்

சோர்வு FATIGUE
   காரணமில்லாத உடர்சோர்வு உண்டாகும் இது முக்கியமான உருப்புகளுக்கு இரத்த ஓட்டம் தடைபடுவதாலோ குறைவதாலோ உண்டாகின்றது.
வாந்தி பிரட்டல் (NAUSEA/ VOMITTING
)
   வாந்தி அல்லது வயிற்று பிரட்டல் வயிறு உப்பல் போன்றவை நீர் தங்குதலின் காரணமாக உண்டாகும்

மற்ற இடங்களில் வலி
   முன்பே சொன்னது போல நடு நெஞ்சிலோ இடப்புற நெஞ்சிலோ மட்டுமல்லாது வலி மார்பின் வலப்புறம் நடு வயிற்றின் மேல் பகுதி இடது தோள் இடது மேற்கை இடதுபுற
முதுகு தாடைகள் ஆகிய இடங்களிலும் வரலாம்

படபடப்பு PALPITATION
   இருதய நோய் உள்ளவர்களுக்கு படபடப்பு இதயம் அதிகமாகவும் வேகமாகவும் துடிப்பதனால் ஏற்படுகின்றது படபடப்
பும் மூச்சிறைப்பும் சேர்ந்து அதிகமான சுக்வீனத்தையும் தளற்சியையும் உண்டாக்குகின்றன

வியர்வை
   அளவுக்கதிகமான வியர்வையும் இதய நோயின் அறிகுறியாகும் குளிர் காலத்தில்கூட அவர்களுகு அதிகமான வியர்வை இருக்கும்.மாரடைப்பு HEART ATTACK வந்தவர்களுக்கு உடம்பு குளித்த்துபோல் வியர்த்திருக்கும்

உடல் தளர்வு WEAKNESS
   இதய நோய் உள்ளவர்களின் உடல்  நளுக்கு நாள் மெலிந்தும் தளர்ந்தும் போய்விடும். முகம் பொலிவிழந்து காணப்படும். வயதான தோற்றத்தைக் கொடுக்கும்

வீக்கம் SWELLING

   பாதம் கணுக்கால் கல்கள் முகம் வயிறு ஆகிய இடங்களில் வீக்கம் ஆணப்படும்.இதன் காரணமாகவே அதிகமான சோர்வு தளர்ச்சி பசியின்மை ஆகியவை உண்டாகின்றன

     நான் மேற்குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் இதய நோய்க்கான அறிகுற்கள் என்றாலும் வேறு பல நிலைகளிலும் நோய்களிலும் இவைகள் தோன்றலாம்
    உதாரணமாக நடு வயிற்றின் மேல் பகுதியில் குடல் புண்
(ULCER) காரணமாக வலி வரலாம்.இதய நோயின் காரணமாகவும் அங்கு வலி வரலாம்.அவ்ற்றுள் உண்மையான காரணத்தை அறிந்து முறையான மருத்துவம் செய்யவேண்டும்
    இங்கே ஒரு முக்கியமான செய்தியை சொல்லவேண்டும்
மேல் வயிற்றிலே வலி வரும்போது இது வாய்வு வலிதான் என்று நினைப்பது தவறாகும் ஏன் எனில் வயிற்று வலியை இதயவலி என்று நினைத்து இதயத்துக்கு மருத்துவம் செய்தால் தவறில்லை.ஆனால் இருதய வலியை வயிற்று வலி என்று எண்ணி இதயத்துக்கு வைத்தியம் செய்யாவிட்டால் உயிரையே இழக்க நேரிடலாம் எனவே
   IT IS BETTER TO ERR ON THE WRONG SIDE
தப்பை தப்பாக செய்தால் தப்பில்லை

இந்த இதய நோயின் குரிகளை மறவாமல் வைதிருங்கள்






ருத்ரத்தின் சாராம்சம்

ருத்ரம் வேதத்தின் நடுநாயகம். நான் முன்பொருமுறை சொன்னது போல ரிக் யஜுர் சாமம் என்ற மூன்று முக்கிய வேதங்களுக்குள் நடு நாயகமாக விளங்குவது யஜுர் வேதமாகும்
அந்த யஜுர் வேதத்தின் நடுநாயகமாக விளங்குவது ருத்ரமாகும்.
ருத்ரத்தைப் படிப்பதோ பாராயணம் செய்வதோ அல்லது அதை மற்றவர் சொல்லவோ அல்லது ஓதவோ கேட்பது மிக உன்னத
மானதும் புண்ணியமானதுமாகும். எல்லோரும் ருத்ரத்தைப்
பாராயணம் செய்வது சுலபமல்ல.ஆனால் ருத்ரதில் சிறப்பாக
விளங்கும் சில பகுதிகளை நாம் அறிந்து கொள்ளுவது சிறப்
புடையதாகும்.

ருத்ரப்ரச்னவில் முழுமுதற்கடவுளான வினாயகருக்கான துதி
குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஸ்லோகம் அனேகமாக பலரும்
அறிந்ததும் பலராலும் ஸ்மரிக்கப்படுவதாகும் இதோ அது
ஓம் கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவினாமுபமச்ரவஸ்தமம்
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மஸ்பத ஆ ந
ஸ்ருண்வன்னூதிபி
சீதசாதனம் மஹாகணபதயே நம:

இந்த ஸ்லோகத்தைத்  தினம் பாராயனம் செய்து வினாயகப்பெருமானின் அருளைப்பெறுவோமாக

அடுத்து சிவ நமஸ்க்காரமாக சொல்லப்படுகின்ற ஒரு அதி
உன்னதமான பகுதி இதோ

நமஸ்தே அஸ்து பகவான் விஸ்வேஸ்வராய மஹாதேவாய
த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய
காலாக்னி ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயா
சர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:

இங்கே ஈஸ்வரன் எந்த வடிவங்களில் எல்லாம் விளங்குகிறார்
என்று சொல்லப்படுகின்றது
அடுத்து ருத்ரத்தின் ஹ்ருதயப்பகுதிய்லே பஞ்சாக்ஷ்ர மந்திரம்
சொல்லப்படுகின்றது.
எட்டாவது அனுவாஹத்திலே வரும்

   நமசிவாய

என்பதே அளவில்லா வளங்களை அளிக்கவல்ல பஞ்சாக்ஷ்ர மந்திரமாகும் இந்த பஞ்சாக்ஷர மந்திரத்தை நாளும் பொழுதும்
ஓதுவோர்க்கு வாழ்வில் அளவில்லாத வ்ளங்களும் மகிழ்வும்
சுகமும் பல்கிப்பெருகுவது திண்ணம்

ருத்ரத்திலே சொல்லப்படுகின்ற ம்ற்றொரு உன்னதமான ஸ்லோகம் ம்ருத்யுஞ்சயஸ்லோகமாகும்.
ம்ருத்யு என்றால் எமன் .அந்த எமனை வெற்றி கொள்ளக்கூடிய ஸ்லோகமே ம்ருத்யுஞ்ஜயஸ்லோகமாகும்.
இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து தினம் ஈசன் முன்னே
சொல்லி வந்தால் எம பயம் கிடையாது. எமன் அவர்களை அகாலத்தில் நெருங்கமாட்டான். அந்த உன்னதமான ஸ்லோகம் இதோ

த்ரயம்பகம் யஜாமஹேசுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

இதன் பொருள் பழுத்த வெள்ளறிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல சாவினுடய பிடியிலிருந்து உன்னருளால் விடுபடுவோமாக என்பதாகும். அனேகமாக பல இடங்களில்
ஆயுஷ் ஹோமங்களில் இந்த ஸ்லோகம் சொப்படுவதைக் கேட்டிருப்பீர்கள்
சிவனை வணங்குவதால் ஏற்படும் பலனைப் பற்றி சொல்வதாக
அமைந்துள்ள இந்த ஸ்லோகத்தைப் பார்ப்போம்.
ருத்ரத்தில் நமகத்தின் இறுதிப்பகுதியிலே வருகின்ற் ஸ்லோகம்

அயம் மே ஹஸ்தோ பகவான் அயம் மே பகவத்தர
அயம் மே விஷ்வ பேஷஜோ அயம் சிவாபிமர்சன:

இதன் பொருள் என்னுடைய இந்த கையே இறைவனாகும்.
இந்த கையே இறைவனை விட மேம்பட்டதாகும்.
சகல பிணிக்கும் இதுவே மருந்தாகும்.
ஏன் தெரியுமா இந்தக்கையன்றோ ஈசனை வணங்குகிறது

எனவே ஈசனை வணங்குகின்ற கையே இறைவனாகவும்
இறைவனுக்கு மேலானதாகவும் எல்லாப்ப்ணிக்கும் மருந்தாகவும்
அமைகின்றது.

ருத்ரத்தை முழுமையாகப் படித்து பாராயணம் செய்ய இயலாதவர்கள் அதன் சாரமான இந்த ஸ்லோகங்களயாவது தினம் இறைவன் முன்னே சொல்லி அவன் அருள் பெற எல்லாம் வல்ல சர்வேஸ்வரண்டம் வேண்டுவோம்


ஓம் நமசிவாய


Saturday, November 19, 2011


நீலகண்டன்

சிவன் நீலகண்டன் என்று அழைக்கப்படுகிறார் அதன் காரணம் அவரது கண்டம் அல்லது தொண்டை நீலமாக இருப்பதுதான்.
ஒரு முறை அமிர்தத்துக்காக தேவர்களும் அசுரர்களும் மேரு மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை
கயிறாகவும் கொண்டு பார்க்கடலை கடைந்தபோது முதலில் அமிர்தம் வராமல் ஆலகால விஷம் வந்தது. ஆலகால விஷம் இந்த உலகம் முழுவதையும் அழிக்கவல்லது.அதன் கொடுமையிலிருந்து மீள்வதற்காக தேவர்கள் ஈசனையடைந்து தங்களைக்காக்குமாறு வேண்டினார்கள் சர்வேஸ்வரனும் சுந்தரரை
அனுப்பி அந்த ஆலகால விஷத்தைக்கொண்டுவருமாறு பணித்தார்.
சுந்தரரும் பார்க்கடல் சென்று ஆலகால விஷத்தை ஒரு நாவற்கனி போல கொண்டுவந்து ஈசனிடம் அளித்தார். அதனாலேயே அவர் ஆலால சுந்தரர் என்ற பெயர் பெற்றார்.
ஈசனும் உலகமெல்லாம் காக்கும் பொருட்டு அந்த விஷத்தை வாயிலே இட்டு விழுங்கத்தொடங்கும்போது லோகனாயகியான
உமையம்மை தன் கைகளினாலே ஈசனது தொண்டையை நெருக்கி அந்த விஷம் உள்ளே செல்லாமல் தடுத்து நிறுத்தினார்.
அந்த ஆலகால விஷம் ஈசனது கண்டத்திலே நின்றுவிட்டதினால்
அவர் நீலகண்டன் என்ற பெயர் பெற்றார்.உலகையும் சகல் ஜீவராசிகளையும் அக்கொடிய ஆலகால விஷத்தினின்றும்
காத்தருளினார்.
இது அனேகமாக நாம் எல்லோரும் அறிந்த செய்திதான்.
ஈசனை ஆலகால விஷம் தீண்டுமா என்பதே கேள்வி. உமையம்மையின் பயத்துக்கு என்ன காரணம்.?

ஈசன் சகலமுமானவர்.அமுதமும் அவரே விஷமும் அவரே .அவரை ஆலகாலவஷம் எதுவும் செய்யாது ஆனால் ப்ரபஞ்சம் முழுவதும் சகல ஜீவராசிகலும் அவருள் அடக்கம்.
எனவே அவர் உண்ட ஆலகாலவிஷம் அவரை எதுவும் செய்யாவிடினும் அவருள்ளே அடக்கமான ஜீவராசிகளுக்கு தீங்கு
விளைக்குமோ என்ற் எண்ணித்தான் உமையம்மை அதை ஈசனின் கண்டதிலே நிறுத்தினார்.

அந்த நீலகண்டனை  நாள்தோரும் வணங்கி மகிழ்வோம்

ஓம் நமசிவாய

Friday, November 18, 2011


ஸ்வாமியே சரணம் ஐயப்பா

இன்று கார்த்திகை முதல் தேதி. இந்த மாதம் முழுவதும் நமக்கு
முக்கியமான மாதமாகும். ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் மாலை
அணிந்து சபரிமலை விரதம் மேற்கொள்ளுவார்கள்.
எல்லா முருகன் கோயில்களிலும் இந்த மாதம் முழுவதும் சிறப்பு
வழிபாடுகள் நடைபெறும்.
இம்\மாதம் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில்தான் பௌர்னமி
வரும் . அந்த நாளில் எல்லா சிவன் கோவில்க:ளிலும் தீபத்திருவிழா சிறப்பாக நடைபெரும். திருவண்ணாமலையிலே
மஹாதீபம்  நடைபெருவதும் இந்த நாளில்தான்

கார்த்திகை முதல் நாள் முதல் விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் மார்கழி மண்டலம்  அல்லது தை முதல் தேதியில் சபரிமலை செல்வார்கள். ஐயப்பன் ஒரு அற்புதமான தெய்வமாவார்.ஐயப்பனின் தத்துவமே சைவ வைணவ கொள்கை
களின் சங்கமமாகும்
அவர் சிவன் விஷ்னுவின் மகன் என்பது அவ்விரு கோட்பாடு
களின் சங்கமத்தையே குறிக்கின்றது.உலகிலேயே மதம் ஜாதி
அந்தஸ்து வயது இனம் என்ற எந்தவிதமான வேறுபாடும்
இல்லாத இடம் ஐயப்பனின் சன்னிதியாகும்.அங்கே வருபவ்ர் மனதில் எல்லாம் பரவியுள்ள எண்ணம் ஐயப்பன் மட்டுமே.
சபரிமலை முழுதும் ஒலிக்கும் ஒரே கோஷம் சாமியே சரனம் ஐயப்பா என்ற ஒன்று மட்டுமே.எந்த பாகுபாடுமில்லாமல் ஒவ்வொருவரும் அடுத்தவரை சுவாமி என்றே அழைப்பர்.
விரதமிருக்கின்ற நாட்களில் அவர்களின் மனதிலே
காமம் குரோதம் மோகம் மதமாச்சர்யம் என்ற எந்த தீயகுணங்
களுக்கும் இடமில்லாது நடப்பர்..தனி நபர் ஒழுக்கத்தின் சிறப்பாக
புகையிலை மது மாமிசம் சிற்றின்பங்கள் ஆகியவற்றை முழுதாக
தவிர்த்து ஒரு தவ வாழ்க்கை வாழ்வார்கள்.
மனம் வாக்கு காயம் என்ற மூன்றினாலும் தூய்மாக இருப்பர்.
அவர்கள் அணியும் காவி கருப்பு நீல உடைகளும் நெற்றியிலே அணிந்திருக்கும் திருனீறு குங்குமம் மற்றும் சந்தனம் காண்பவர்
நெஞ்சிலே பக்தியையும் பரவசத்தையும் உண்டுபண்ணும்.
இன்று நம் பகுதிகளிலே மிக அதிகமான மக்கள் கூடிகின்ற விழாக்களிலே முக்கியமானவை திருவண்ணாமலை மஹாதீபம்
திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் சபரிமலை ஜோதி
ஆகியவையாகும்..பல லக்ஷக்கணக்கான பக்தர்கள் அன்று சபரி
மலையிலே கூடுவார்கள்.சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம்
விண்ணைப்பிளக்கும். அந்தக்காட்சி மனதிலே அளவில்லா
பரவசத்தை உண்டு பண்ணும்

முடிந்தவர்கள் விரதமிருந்து சபரி மலை சென்று அந்தப் பரம்பொருளை தரிசித்து வரலாம் இயலாதவர்கள் இந்த கார்த்திகை மாதம் முழுதும் விரதமிருந்து அவனை வணங்கி மகிழ்ந்து அருள் பெறலாம்…

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

Wednesday, November 16, 2011


பஞ்ச பூத ஸ்தலங்கள்

இந்த ப்ரபஞ்சமே பஞ்ச பூதங்களால் ஆனது, அவை காற்று ‘
ஆகாயம் நீர் நெருப்பு பூமி என்பனவாகும்
இறைவன் தானே அந்த பஞ்ச பூதங்களாக விளங்குகிறார்.

நிலமாக காஞ்சியிலே காட்சி அளிக்கிறார்

ஆகாயமாக சிதம்பரத்திலே அருள் பாலிக்கிறார்

வாயுவாக காளஹஸ்தியிலே விளங்குகிறார்

தீயாக திருவண்ணாமலையிலே திகழ்கின்றார்

நீராக திருவானைக்காவிலே நிலைதிருக்கின்றார்

 நம் உடம்பிலேயே பஞ்சபூதங்களும் அமைந்துள்ளன
நமது சரீரம் பூமியாகவும் ஆன்மா ஆகாயமாகவும் இரத்தம்
நீராகவும் சுவாசம் கற்றாகவும் உடல் வெப்பம் தீயாகவும்
அமைந்து பஞ்ச பூதங்களும் நம் உலில் அடக்கம் என்று
காட்டுகின்றது

சைவ தத்துவம் அத்வைதம் ஆகும். அத்வைதம் என்றால்
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பதாகும்
ஜீவாத்மா என்பது நாம் .பரமாத்மா என்பது இறைவன்
இறைவன் நம்முள்ளேயே இருக்கிறார் என்பதையே இது
குறிக்கின்றது.

முடிந்தால் ஒருமுறை பஞ்ச பூதஸ்தலங்களுக்கு சென்று ஈசனை
வணங்கி மகிழ்ந்து அருள் பெறுங்கள்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய்……..

என்ற தேவாரத்தை ஓதி மகிழுங்கள்.
MEDINEWS

இன்று இரத்த அழுத்தம் ப்ற்றிபார்ப்போம் இரத்த அழுத்தம் என்பது [BLOOD PRESSURE] நம்முடைய இதயத்திலும் இரத்தக்குழாய்களிலும் ஓடுகின்ற இரத்தம் ற்படுத்துகின்ற அழுத்தமாகும்.
இதில் இதயத்தில் உள்ள அழுத்தம் இரத்தக்குழாய்களில் உள்ள அழுத்தம் என இரண்டு உள்ளன.அவைகளை முறையே SYSTOLIC
BP மற்றும் DIASTOLIC BP என்று அழைக்கின்றோம்.இவைகளையே பலர் தவறாக HIGH BP / LOW BP என்று அழைக்கிறார்கள்
SYSTOLIC BP என்பது இதயதில் உள்ள அழுத்தம். DIASTOLIC BP என்பது இரத்தக்குழாய்களில் உள்ள அழுத்தமாகும்..இதயத்தில் அழுத்தம் அதிகமாகவும்  இரத்தக்குழாய்களில் குறைவாகவும் இருககும்..இதை GRADIENT என்று அழைக்கிறோம்.. நம்முடய இதயம் நம் நகரின் WATER TANK போன்றது..நம் இரத்தக்குழாய்கள்
நம் வீட்டுக்குழாய் போன்றது..TANKல் தண்ணீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும் போகப்போக அழுத்தம் குறைந்துகொண்டே வரும்.. அதுபோலத்தான் இதயத்தில் அழுத்தம் அதிகமாகவும் இரத்தக்குழாய்களில் குறைவாகவும் இருக்கும் .இது இயல்பானது.

NORMAL BLOOD PRESSURE
இதய அழுத்தம் [ SYSTOLIC BP ]            90 – 130
இரத்தக்குழாய் அழுத்தம் [ DIASTOLIC BP ]   60 – 90

HYPERTENSION [இரத்தக்கொதிப்பு]
இரத்தக்கொதிப்பு என்பது உயர் இரத்த அழுத்தமாகும்.அது இதய அழுத்தம் மட்டுமாக இருக்கலாம் அல்லது இரத்தக்குழாய் அழுத்தமாக இருக்கலாம். பல நேரங்களில் இரண்டுமே அதிகமாக இருக்கலாம் ஓடுகின்ற இரத்தின் அழுத்தம் அடிகமாக ஆகின்றபோது அது இரத்தக்குழாய்களை பலவீனப்படுத்தி சேதப்படுத்தி விடுகின்றது அதன் காரணமாக உடலின் முக்கியப்
பகுதிகளான இதயம் மூளை சிறுனீரகம்  கண்கள் போன்றவைகளுக்குச் செல்லும் இரத்தஓட்டம் பாதிக்கப்பட்டு
மோசமான விளைவுகளை உண்டாக்குகின்றது
HEART ATTACK HEART FAILURE  BRAIN STROKE KIDNEY FAILURE
BLINDNESS DEATH போன்றவை மோசமான விளைவுகளாகும்.

ஒருமுறை இரத்தக்கொதிப்பு கண்டறியப்பட்டுவிட்டால் விடாது
தொடர் சிகிச்சை அவசியமாகும். சிகிச்சையைத் தொடராது
விட்டால் பல மோசமான வ்ளைவுகளை சந்திக்க வேண்டும்.
இரத்தக்கொதிப்பினாலான பின் விளைவுகள் [ COMPLICATION ]
வருவதற்கு முன்பே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால்
எந்த விதமான பயமுமின்றி நல் வாழ்வு வாழலாம்

வேறொரு முறை இன்னும் பல செய்திகளுடன் சந்திப்போம்

Monday, November 14, 2011


ஓம் நமசிவாய

சிவனின் சஹஸ்ர நாமங்களில் அதி உன்னதான நாமம் நமசிவாய வாகும்.நமசிவாய மந்திரத்துக்கு ஈடு இணை ஏது
மில்லை.நமசிவாய என்று சொன்னால் நா இனிக்கும் ஊன்
உருகும் நெஞ்சம் நெகிழும் உயிர் சிலிற்கும்.நமசிவாய என்று
நாளைத்துவக்கி மீண்டும் நமசிவாய என்று முடித்து உறங்கச்
செல்வோற்கு நாளெல்லாம் நண்ணாளாகவே அமையும்

இந்த நாமம் எங்கிருந்து வந்தது?
ரிக் ,யஜுர் ,சாமம், அதர்வணம் என்னும் நாங்கு வேதங்களிலே
சிறப்புடையவை ரிக் யஜுர் சாம வேதங்களாகும். இம்மூன்று
வேதங்களில் நடு நாயகமாக விளங்குவது யஜுர் வேதமாகும்
யஜுர் வேதத்தில் நடு நாயகமாக விளங்குவது ஸ்ரீருத்ரம் ஆகும்
அதன் எட்டாவது அணுவாகத்தில் நமசிவாய ச என்று வருகிறது.
எனவே வேதத்தின் நடு நாயகமாக விளங்குவது நமசிவாய.

நமசிவாயத்தை பல் பெயர்களிலே அழைக்கிறோம்.அவை
   பஞ்சாக்ஷரம்
   பஞ்சாக்ஷரி
  ஐந்தெழுத்து
   அஞ்செழுத்து   என்பனவாகும்

பஞ்சாக்ஷர ஸ்லோகம் என்ற அதி உன்னதமான ஸ்லோகம்
  நாஹேந்த்ர ஹாராய த்ரிலோசனாய என்று ஆரம்பித்து ஐந்து
ஸ்லோகங்களா பஞ்சாக்ஷரத்தின் பெருமையை விளக்குவதாக
அமைந்துஅள்ளது ந ம சி வா ய என்ற் ஐந்து அட்சரங்களுக்குமாக ஐந்து ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.முடிந்தவர்கள் அந்த ஸ்லோகத்தை தினம் சிவன்
முன்னே சொன்னால் அளவிலா நன்மைகளும் வளங்களும் பெருகும்.பல இசை வல்லுனர்கள் [MSS போன்றவர்கள்] இந்த ஸ்லோகங்களை இசை வடிவமாக தந்துள்ளார்கள்.
நம்முடய தேவாரத்திருமுறைகளிலே நமசிவாயத்தின் பெருமையை நால்வருமே பாடியுள்ளனர்.
திரு நாவுக்கரசர் நமசிவாயப்பத்து என்ற அதி உன்னதமான
பதிகத்தைப் பாடியுள்ளார் நம்மில் அனேகருக்கும் அந்த பத்துப்
பாடல் களுமேத் தெரியும் என எண்ணுகிறேன்

சொற்றுணை வேதியன் ஜோதி வானவன் பொற்றூணை திருந்தடிபொறுந்தக் கைதொழ கற்றுனைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவயவே என்று தொடங்கும்
பத்துப் பாடல்களுமே நாம் பலரும் அறிந்ததுதான்
அதிலே கற்றுணைப்பூட்டியோர் கடலினுள் பாய்சினும்
நற்றுணையாவது நமசிவாய வே என்கிறார்.
மேலும் நாவினுக்கு அருங்கலம் நமசிவாயவே என்கிறர்.
முடிந்தவர்கள் இந்த நமசிவாயப்பத்து என்ற் உன்னதமான
பதிகத்தை தினம் ஈசன் முன் படித்து அவனருள் பெறலாம்

ஞானசம்பந்தப் பெருமான் இதே போன்று நமசிவாயத்தின்
பெருமையை விளக்கும் அஞ்செழுத்துப் பதிகம் ஒன்றை
வெகு நேர்த்தியாகப் பாடியருளியுள்ளார். .இதிலும் பத்துப் பாடல்கள் நேர்த்தியாக அமைந்துள்ளன.

துஞ்சலிலும் துஞ்சலில்லாத போழ்தினும்
நெஞ்சம் நைந்து நினைமின் என்று தொடங்கும் சிறப்பான
பதிகமும் நெஞ்சம் நெகிழ்விக்கும். .இதிலே உள்ள பத்துப் பதிகங்களிலும் எல்லாவற்றுக்கும் தலையானது அஞ்செழுத்தே
என்று நமசிவாயத்தின் பெருமையை போற்றுகின்றார்

நாமும்  நாள்தோறும் பஞ்சாக்ஷ்ர மந்திரத்தை ஓதி
உய்வடைவோம்

ஓம் ந ம சி வா ய.



MEDINEWS

  நம்மில் பலருக்கு இரததக்கொதிப்பு [HYPERTENSION] பற்றி குழப்பமாண கருத்துக்கள் உள்ளன.நாம் முதலில் சில முக்கியமான சொற்களையும் அவற்றின் பொருளையும் உணர வேண்டும்,

1 இரத ஓட்டம் [CIRCULATION]
2 இரத அழுத்தம் [BLOOD PRESSURE]
3 இரத்தக்கொதிப்பு  [HYPER TENSION  HIGH BLOOD PRESSURE]
4 குறைவான இரத்த அழுத்தம்  [HYPO TENSION  LOW B P ]

இதிலே இரத்த ஓட்டம் மற்றும் இரத்த அழுத்தம் என்பவை இயல்பானவை
இரத்தக்கொதிப்பு அல்லது குறைவான இரத அழுத்தம் மட்டுமே
நோயைக்குறிப்பதாகும்
எனக்கு  BP இருக்கிறது என்று யாராவது சொன்னால் அது இய்ல்பானது [NORMAL] Iஇயல்பான இரத்த அழுத்தம் இல்லை என்றால் மனிதன் உயிர் வாழமுடியாது.
சீரான இரத்தஓட்டதிற்கு அளவான இரத்த அழுத்தம் அவசியம்.
இதைத்தான் நாம் சீரான இரத்த அழுத்தம் NORMAL BP ] என்கிறோம் இந்த சீரான BP இருந்தால்தான் உடலின் இரத்த ஓட்டம் இயல்பாக இருந்து நல வாழ்வுக்கு துணை புரியும்.
இரத்த அழுத்தத்தின் இயல்பு நிலை மாறுபட்டு அதன் அளவு உயரும் போது அதை இரத்தக்கொதிப்பு என்கிறோம்.
சிலனேரங்களில் இரத்த அழுத்தத்தின் அளவு குறையும் போது
தேவையான இரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் கிடைக்காமல்
மோசமான விளைவுகளை உண்டாக்கும்.
என்வே இரத்த அழுத்தத்தின் அளவு எல்லா  நிலைகளிலும் சீராக இருக்கவேண்டியது அவசியமாகும்.
  இதுபற்றி மீண்டும் நாளை சந்திப்பில் அறிவோம்