Monday, June 6, 2016

                                               விநாயகர் துதி                                                                                      விநாயகப்பெருமான் முழுமுதற்கடவுளாவார் அவர் துதியோடு இன்றைய பதிவைத் துவங்குவேன்
   எண்ணத்தில் என்றும் உன்னை எண்ணி முன்வைத்தே 
   பண்ணமுதனே  செய்யும் செயல் யாவும் துவக்குவேன் 
   கண் மூன்றுடை ய கருணாகரன் பெற்ற செல்வனே என்றும் 
   மண்ணுலகில் மலமற்று வாழ்ந்திட நின் திருவடியருளுமே 

                               ஜகன்நாதன்

முக்கன்ணீசன் பெற்ற செல்வனான கணநாதனை எண்ணத்தில் முன் நிறுத்தி துவங்கிச் செய்யும்செயல்கள்  யாவும் நலமாகத் துவங்கி நன்றாக முடியும் 
அதோடு இந்த மண்ணுலகில் துன்பமின்றி வாழ்ந்திட அவனருள் துணை செய்யுமே 

Monday, November 16, 2015




சுப்பிரமணிய புஜங்கத்தின் ஆறாவது பாடல் 

கிரௌ மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா
ததா பர்வதே ராஜதே தேதிரூடா
இதீவப்ருவன் கந்தசைலாதி ரூடா
ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து (6)



கந்தநாதனுறைக்குன்றேறுவோர்ஈசனதிருவருளோடு                       அந்தக் கைலாயமேறுவது திண்ணம் என்றுணர்த்தும் நம்     சொந்தப்பிள்ளை கந்தமலையுறைவான் மலர்த் திருவடிகள்          பந்தமாய் என்றும் விடாதுநாம் உய்யப்பற்ற வாழ்கவே

கந்த நாதனுரையும் குன்று ஏறுவோர் அவன் தந்தை ஈசனருளோடு    திருக் கைலாயம் ஏறுவது திண்ணம் என்று உணர்த்தும் நம் சொந்தப் பிள்ளையான திருச்செந்திலோனின் திருவடிகளை என்றும் நாம் விடாது உய்யப் பற்றிட வாழ்கவே 

Saturday, November 14, 2015



சுப்பிரமணிய புஜங்கம் 

சுப்பிரமணிய புஜங்கத்தின் ஐந்தாவது பாடல் 

தீராத துன்பம் தீரும் 

யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா
ததைவாபத ஸந்நிதௌ ஸேவதாம்மே
இதீவோர்மி பங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹுருத் ஸரோஜே குஹம்தம் (5)

  • வந்துவந்து கரையில் மோதும்அலைகள்மறைவாற்போல்         வந்த தீவினையாவும்  நாடிவந்தவர்தம்மைவிட்டு எந்நாளும்         வந்தவழிதெரியாமல் மறையுமென்றுரைப்பார்போன்றுவிளங்கும் செந்திலுறை கந்த நாதனை என் மனத்துள் வைத்துள்ளேன்


விடாது என்னாளும் கடலிலிருந்து எழும் அலைகள் கரையில் வந்து மோதி மறைவது போல தன்னை நாடி வருபர்கள் வினைகள் யாவும் அவர்களை விட்டு மறையும் என்று உறைப்பார்ப் போலல விளங்கும் செந்தில் நாதனை என் மனதுள் வைத்துள்ளேனே 

Thursday, November 12, 2015



சுப்ரமண்ய புஜங்கத்தின் நான்காவது பாடல் 



யதா ஸந்நிதானம் கதாமானவாமே
பவாம் போதிபாரம் கதாஸ்தேததைவ
யதா ஸந்நிதானம் கதாமானவாமே
பவாம் போதிபாரம் கதாஸ்தேததைவ
இதிவ் யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் (4)
  யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் (4)


தன்சன்னிதி நாடியடைந்தோர் யாராயினும் அவர் இப்பெரு

வன் பிறவிக்கடல் நீந்துவாரென்றருளும் வடிவழகு வேலோன்  

மென்மலர் பாதமுடை அன்னை மாதேவி பராசக்தி மனமகிழ்

அன்புக்குமரன் இச்செந்திற்கறையிலுறைவோனை உள்ளுவோம்  4


அன்னை பராசக்தியின் மனம் மகிழ்  அன்புக்குமரன்  திருச்செந்தில் 

கறையில் உறைபவனான வடிவழகுறு வேலவன் தன் சன்னிதி வருபபவர்

 யாராயினும் இப்பிறவிகடல் நீந்திக் கரையேற அருள்பவன் அவன் 

திருவடிகளை மனமுருகி உள்ளுவோம் 

Sunday, December 21, 2014



சுப்பிரமணிய புஜங்கம் 


சுப்ரமன்யபுஜங்கத்தின் மூன்றாவது பாடலில் செந்தில் நாதனின் பெருமையை  விளக்குகின்றார் 

அழகுமயில் வாஹனன் ஆகமவேதப்பொருளோன் தனது                 எழிலுருவினால் காண்போர் மனம் கவர்வோன் மஹான்கள்        பழுத்தஞானிகளின் உளமுறைவோன் ஞானவாக்கியங்களின் பழுதற்றத்தலைவன் ஈசனின் மைதன் குஹனை உள்ளுவோம்  3

மயிலை வாகனமாகக்கொண்டு நான்கு வேதங்களும் கூருகின்ர பொருளோன் காண்பவர் மனதைக்கவரும் எழிலும் மகிமையும் உடையோன் மகான்களின் உள்ளத்தில் உறைபவன் ஞாநியர்களின் தலைவன் மகாவாக்கியங்களின் தலைவன் ஈசனின் மைந்தன் உண்மையான அந்தணர்களுக்குதெய்வமானவன் இந்தப்பெருமை களுடைய செந்திலோனை உள்ளுவோம்
  

Monday, December 15, 2014




ஸ்ரீ  சுப்ரமண்ய புஜங்கத்தின் இரண்டாவது பாடல் பாடல் இயற்றுபவ ரின் அவை அடக்கம்பற்றி விவரிக்கின்றது

உன்னடிதொழசொல்லறியேன்பொருளுமறியேன்                          பண்ணோடியைந்தபாக்களோவசனமோயறியேன்                          தண்ணிலவாயுன்ஆறுமுகசோதியென்உள்மிருந்து                                எண்ணிலாப் பாடல்களை ஊற்றெடுக்கருளியதே     2

யான் சொல்லோ  பொருளோ  கவிபுனையும் திறனோ  யாதுமே அறியாதிருந்தாலும் முருகப்பெருமானின் திருவருளினாலே எண்ணிலாப்பாடல்களை இயற்றும் திறன் தானே வந்துவிடும் என்று அழகுறச்சொல்லுகின்றார் இது இரண்டாவது சுலோகமாகும் 

நாளை சந்திப்போம் 

Sunday, December 14, 2014




வணக்கம்  நீண்ட நாட்களுக்குப்பின் என் எண்னங்களைத்தொடர்வதில் பெரு மகிழ்வடைகின்றேன் 

இந்தத்தொடரில்  ஸ்ரீ ஆதிசங்கரர் திருச்செந்திலாண்டவன்மீது அருளிய சுப்ரமண்ய புஜங்கம் என்ற உன்னதமான 33 பாடல்கள் பற்றி எழுத எண்ணியுள்ளேன் 
  'புஜங்கம்' என்றால் 'தோளால் நகர்ந்து செல்லும் பாம்பு' என்று பொருள். இச்சொல் வடமொழியில் உள்ள ஒருவகை யாப்பைக் குறிக்கும். இப்புஜங்கக் கவியுள் அமைந்து கிடக்கும் சொற்கோவை பாம்பொன்று வளைந்து வளைந்து செல்லுவது போல் இருப்பதால் இத்தகைய கவிக்குப் புஜங்கம் எனப் பெயருண்டாயிற்று.

   ஸ்ரீ ஆதிசங்கரரின் கல்வி, தவம், யோகம் முதலியவற்றின் மேன்மையைக் கண்டு பொறாமை அடைந்த அபிநவ குப்தர் என்ற புலவரொருவர் மந்திர ஏவலால் பகவத்பாதர்கள் காச நோயால் துன்புறச் செய்தார். இந்நோயால் சங்கரர்  தாங்கமுடியாதவாறு துடித்துத் தவித்தார். ஒருநாளிரவு சிவப் பரம்பொருள் இவருடைய கனவில் தோன்றி 'ஜயந்தி புரம்' எனும் திருத்தலத்தில் சூரபன்மாவை வென்றழித்துவிட்டு, 'ஜய வின்ப வடிவமாய்' விளங்கும் என் குமாரனாகிய செந்திற்குமரனைக் கண்டு வழிபட்டால் இக்கொடிய வியாதி அடியோடு உன்னை விட்டு நீங்கும் என்று கூறித் திருநீறும் அளித்தருளினார். ஆச்சாரியர் அதனை ஏற்று அணிந்து தம்மைப் பிடித்திருந்த நோய் நீங்கப்பெற்றார்.

   மறுநாள் தம்முடிய யோக சத்தியால் திருச்செந்தூர் என வழங்கப் பெறும் ஜயந்தி புரத்தை அடைந்தார். அங்கு ஆதிசேடன் என்னும் தெய்வ நாகம் திருச்செந்தில்நாதன் திருவடிகளில் வழிபாடு செய்தலைக் கண்ணுற்றார். உடனே 'பாம்பு' எனும் பொருளைத் தரும் 'புஜங்கம்' என்னும் பெயரைக் கொண்ட புது வகை யாப்பில் வடமொழியில் முப்பத்து மூன்று கவிகள் கொண்ட திருப்பாமாலை படைத்துத் திருச்செந்திலாதிபன் திருவடிக்குச் சூட்டினார். இது தான் 'திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம்' தோன்றிய வரலாறாகும்.
   இந்த 33 பாடல்களும் சமஸ்க்ருதத்தில் எழிலுடன் அமைந்தவைகளாகும் அவைகளின் சொல்லழகை உணர்ந்து போற்றுதற்கு சமஸ்க்ருத ஞானம் வேண்டுமாயினும் அவைகளின் பொருட்செறிவு மிகச்சிறப்புடையதாகும் அந்தப் பொருள் நயங்களை உணர சமஸ்க்ருத ஞானம் தேவையில்லை .சுப்ரமண்யபுஜங்க்த்தை பலர் மொழிபெயர்த்துள்ளார்கள் 
  நானும் என் சிற்றறிவுக்கு எட்டியவரயில் எளியோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் தந்துள்ளேன் .அவைகள் யாருக்கேனும் பயனுள்ளவையா யிருந்தால் அந்தப்பெருமை அந்த செந்திலோனுக்கே சேரும் அதில் ஏதேனும் குற்றங்களிருந்தால் அவை என்னையேச்சேரும் 
நான் பேரறிஞனோ புலவனோ அல்ல  நான் தமிலரிந்தவநேயன்ரி தமிழ்ப்புலவனல்ல இதொஅ ஸ்ரீ சுப்ரமண்யபுஜங்கம் தமிழில் 

என்றும் குன்றா இளமையுடையோன் யானை முகத்தோன்           நன்றான ஐந்துமுகத்தான் விரும்பி மாலயனால் தேடப்படுவோன்         குன்றென மங்களங்களருளும் கண நாதனாகிய வினாயகனின்    குன்றாது பெருகிடும் நல்லருளை வேண்டி வணங்குவோமே  1


 நாளை மீண்டும் சந்திப்போம்