Wednesday, November 28, 2012


ஸ்ரீ ருத்ரம்
பகுதி  3
சிவன் ஆதிமூலமான்வர் அவரே சகல கடவுள்களுக்கும் தேவர்களுக்கும் மூலாதாரமானவர் ஒரு பெரிய் மரத்தின் வேரிலே தண்ணீர் ஊற்றும் போது அது அதன் கிளைகள் இலைகள் காய் கனிகள் என்று எல்லா இடமும் பரவுவதுபோல் நாம் ஈசனுக்களிக்கும் பிரார்த்தனை எல்லாக்கடவுள்களையும் சென்றடைகிறது ப்ரதோஷ வேளையிலே சகல கடவுள்களும் தேவ்ர்களும் ஈசனைத் தரிசிப்பதற்காக சென்றுவிடுவதால் ப்ரதோஷ நேரத்தில் சிவனை வழிப்டும்போது அந்தப்பிரார்த்தனை சகல கடவுள்களையும் சென்றடைகின்றது.பல கோயில்களில் ப்ரதோஷ காலங்களில் சன்னிதி மூடியிருப்பதன் காரணம் இதுவேயாகும்
சிவபிரார்த்தனைகளில் மிகசிறப்புடையது ஸ்ரீ ருத்ரமாகும்
இது பல ஜன்ம பாபங்களையும் போக்கவல்லது
வேதத் துதிகளிலே மிகசிறப்புடையது ஸ்ரீ ருத்ரமாகும்
ஸ்ரீ ருத்ரத்தில் சொல்லப்படுள்ள முக்கியமான் மந்திரங்களாவன
1.      த்ரய்ம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
   உருவாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
  இது ம்ருத்யுஞ்சய மஹா மந்திரம் எமனை வென்று எம பயம் போக்கவல்லது
2 நமஸ்தே அஸ்து பகவான் விஸ்வேஸ்வராய மஹாதேவாய       த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னிகாலாய காலாக்னி ருத்ராய       நீலகண்டாய ம்ரித்யுஞ்ஜயாய சர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமன் மஹாதேவய நமஹ
  இது ஈசனின் பலரூபங்களையும் பெருமைகளையும் சொல்லும் ஸ்லோகமாகும்
3  ஓம் நமசிவாய
   இதுவே பஞ்சாக்ஷரி மந்திரம் ஐந்தெழுத்து மந்திரம் ஈசனின் ஸ்வரூபம் என்றெல்லாம் அழைக்கப்புடும் அதி உன்னதாமான மந்திரமாகும்
  பஞ்சாக்ஷரத்துக்கு மிஞ்சிய மந்திரம் வேறொன்றுமில்லை
பஞ்சாக்ஷரத்தால் ஈசன் மகிழ்வார்.சடாக்ஷரத்தால்[சரவனபவா] அவர் மைந்தன் முருகன் மகிழ்வார் அஷ்டாசரத்தால்[நமோ நாராயணாய] அவர் மைத்துனர் பெருமாள் மகிழ்வார்
  இதையே ஞானசம்பந்தப்பெருமானார் வந்த கூற்று அஞ்ச உதைத்தன் அஞ்செழுத்துமே என்று அஞ்செழுத்துபதிகத்திலே கூறுவார் மார்கண்டேயரை எமன் பாசக்கயிறு வீசிப் பிடிக்கவந்தபோது அவர் நமசிவய என்ற பஞ்சாக்ஷரி மந்திரத்தை சொன்ன மாத்திரத்தில் அந்த கூற்றுவன் அஞ்சுமாறு ஈசன் எமனை உதைத்தார் என்று சொல்லுகிறது
  இத்தகைய பெருமை வாய்ந்த இந்த பஞ்சாக்ஷரி மந்திரம் வருவது ஸ்ரீ ருத்ரத்தில் தான் ஓம் நமசிவாய நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அது ஸ்ரீ ருத்ரத்திலிருந்துதன் வந்த்து என்பது எத்தனை பேருக்குத்தெரியும்
  அய்ம் மே ஹஸ்தெ பகவான் அயம் மே பஹவத்ர
  அயம் மே விஷ்வ பேஷஜே அயம் சிவா விமர்சின

இதிலே பக்தனுடைய கை கடவுளுக்கு இணையானது அது இறைவனிலும் மேலானது உலகின் சகல் ஜீவன்களின் வியாதிகளுக்கும் மருந்தானது                          ஏனென்றால் இந்தக்கை சிவனை வன்ங்குகிறது என்று சொல்லுகிறது
சிவனை வணங்குகின்ற ஒரே காரணத்துக்காக சிவபக்தனின் கை கடவுளாகவு அதற்கு மேலும் சகலவியாதிகளுக்கும் மருந்தாகவுமாகிறது என்றால் சிவ வழிபாட்டின் பெருமையை சொல்லவும் முடியுமோ
  இத்தகைய சிறப்புடைய ஸ்லோகங்கள் எல்லாம் ஸ்ரீ ருத்ரத்தில்தான் வருகின்றன

தினம் ஒரு திருமுறை  2
சொற்றுணை வேதியன் ஜோதிவானவன்
பொற்றுணை திருந்தடி பொறுந்தக்கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்சினும்            நற்றுணையாவது நமசிவாயவே   


இன்றைய ஸ்லோகம்   2

கஜாணனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்போ பலசார ப்க்ஷிதம்
உமா சுதம் சோக வினாசகாரணம்
நமாமி விக் ணேஸ்வர பாதபங்கஜம்

Monday, November 26, 2012


ஸ்ரீ ருத்ரம்
பகுதி  2
ருத்ரத்தின் மகிமை சொல்லுக்கடங்காத்து வேதம் சொல்லி துதிக்கும் போது அவன் அனைத்தையும் அருள்கிறான் ஈசன் எங்கெல்லாம் எந்தெந்தெந்த வடிவங்களில் எல்லாம் இருக்கிறார் என்பதை அழகாச்சொல்லுகிறது ஸ்ரீ ருத்ரம்
 சகல உலகமும் அவரே என்பதை  ஜெகதாம் பத்யே என்ற வாஸ்கம் சொல்லுகிறது
 சகல தேவர்களின் இருதயங்களிலும் அவரே உறைகிறார் என்பதை
தேவானாம் ஹிருதயேப்ய என்றும்
 வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்பவர் என்பதை விசின்வத்கேப்யஹா என்றும்
மகான்கள்வடிவிலும் அற்ப சக்தி உள்ளவர்கள் வடிவிலும்விளங்குகிறான். சேனைத் தலைவர்களாகவும் சேனைகள்எனவும் இருப்பதை , சேனாப்ய: சேனா நிப்யச்ச: என்கிறதுருத்ரம். அதே சமயம் தேர் ஓட்டுபவர் வடிவிலும்(க்ஷத்ருப்ய: ) ,தச்சர் வடிவிலும் (தக்ஷப்ய:) , குயவர்வடிவிலும் (குலாலேப்ய:) கருமார்வேடத்திலும்(கர்மாறேப்ய:) பறவைகளைப் பிடிக்கும் வேடர்வடிவத்திலும்( புஞ்சிஷ்டேப்ய:) மீன் பிடிக்கும் செம்படவவடிவிலும்( நிஷாதேப்ய:) இருக்கிறான்.


சிவ ச்வரூபமோ அலாதியானது. ஆலகால விஷத்தைஉண்ட கண்டம் (நீலக்ரீவாய); அதன் மேல் விபூதி பூசப்பட்டுஇருக்கிறது (சிதிகன்டாய) . ஒரு சமயம் பார்த்தால் நீண்டஜடா முடி (கபர்தினே) இருக்கிறது. மறு கணம் பார்த்தால்கேசம் நீக்கப்பட்ட (வ்யுப்தகேசாய) தலை.ஆயிரக்கணக்கான கண்கள்(சகஸ்ராக்ஷாய) . குறுகியவாமன வடிவுடைய (ஹ்ரச்வாய்ச வாமனாய்ச) அவனே ,பெரிய வடிவத்துடனும் ( ப்ருஹதே) தோன்றுகிறான். பாலவிருத்த வடிவங்களிலும் காட்சி அளிக்கிறான். வேதங்களால்துதிக்கப்படுவனாகவும் (ச்துத்யாய) வேத முடிவில்வீற்றிருப்பவனாகவும்( அவசான்யாய) விளங்குகிறான்.

ஆகவே தர்மத்தின் வடிவமான பரமேச்வரனைத் தர்ம தேவதையே வாகனமாகத் தங்குகிறது என்பதை, "பப்லுசாய" என்ற சொல்லால் வேதம் வர்ணிக்கிறது. சம்சாரமாகிய மரம் ஜனன மரணங்களுக்கு ஏதுவானது. அதை வேரோடு வெட்டி வீழ்த்தி முக்தியைத் தருபவன் ஆதலால் " பவச்ய ஹேத்யை " எனப்படுகிறான். பக்தனைக் காப்பதற்காக அவன் கூடவே செல்லுபவன் என்று "தாவதே" என்ற பதத்திற்கு அர்த்தம் சொல்லுவார்கள் பெரியவர்கள். எனவே, பக்தனுக்காகத் தூது செல்லவும் தயங்குவதில்லை பரமன் என்பதைத் திருவாரூரில் சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தியாகராஜப் பெருமான் தூது சென்றதால் அறியலாம். அது மட்டுமா? இன்னும் உனக்காக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா , அதனையும் செய்கிறேன் என்கிறானாம். இதைத்தான் ஸ்ரீ ருத்ரம், "தூதாய ச ப்ரஹி தாய ச " என்று காட்டுகிறது. 
தவறு செய்யாதவர்கள் உலகத்தில் யாரும் இல்லை. அதிலும் தனது பக்தன் செய்யும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு மன்னிக்கிறான் ஈச்வரன். இதைத் தான் வேத மாதா நமக்கு, "ஸஹமானாய " என்ற பதத்தால் உணர்த்துகிறாள்.
நமஸ் ஸோமாய ச என்று தொடங்கும் எட்டாவது அனுவாகத்தில் ஸ்ரீ பஞ்சாக்ஷரம் வருவதால் பெரியவர்கள் இதை ஜபிப்பதை விசேஷமாகக் கருதுவார்கள். இதைத் தான் ஞான சம்பந்தரும், "வேதம் நான்கினும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே " என்று பாடினார். இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் சி வ  பூஜை செய்பவன் சிவனாகவே  ஆகிவிடுகிறான். சுவாமியைத் தொட்டு பூஜை பண்ணிய கைகள் அத்தன்மையை அடைந்து விடுவதை, "அயம்மே ஹஸ்தோ பகவான்" என்று சொல்லும் ஸ்ரீ ருத்ரம், அப்படிப் பூஜை செய்யும் வலது கை,  நோய் தீர்க்கும் மருந்தாகவும் ஆகிவிடுவதாகக் கூறுகிறது.

       இன்னும் ஸ்ரீ ருத்ரத்தின் மஹிமையை சொல்லிக்கொண்டே போகலாம்
இதையே நான் ஈசனருளால் என்னால் முடிந்தவரையில் எளியோர்கள் புறிந்துகொள்ளும் வகையில் தர ஈசன் அருள்வேண்டித்துவங்குகிறேன் 





இன்றைய திருமுறை  2
ஆதி நாதன் அடல் விடைமேலமர்
பூத நாதன் புலியதள் ஆடையன்
வேத நாதன் வியசயமங்கை யுளான்
பாதம் ஓதுவோர்க்கு இல்லை பாவமே

 விசயமங்கையிலே வாழ்கின்றவ்ரும் மூல முதல்வரும் புலித்தோலை ஆடையாக அணிந்தவரும் வேதங்களின் தலைவருமான் ஈசனைத்தொழுது அவன் புகழ் பாடுவோர் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவரே இது திருநாவுக்கரசர் ஸ்வாமிகளின் அருள் வாக்காகும்


இன்றைய ஸ்லோகம்  2
கணாநாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவிணாம் உபமஸ்ரவஸ்தம்ம்
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மனஸ்பத
ஆனஷ்ருன்வன் நூதிபிஷ்ஷீத சாதனம்
ஓம் மஹா கணாதிபதயே நமஹ
  எந்த ஒரு செயலைத் துவங்கும்போதும் முதற்கடவுளான கணபதிப்பெருமானைத் தொழுதபின் தொடங்கவேண்டும்

Saturday, November 24, 2012


இன்றைய திருமுறை
உலகலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் ஜோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

இன்றைய ஸ்லோகம்
த்ரய்ம்பகம் யஜாமஹே சுகந்திம்
புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ
பந்தனாம் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

  இது மிருத்யுஞ்சய ஸ்லோகம் என்ற எமனை வெல்லக்கூடிய ஸ்லோகமாகும்

Friday, November 23, 2012


ஸ்ரீ ருத்ரம்
பகுதி 1
முன்னுறை
மனிதனாகப்பிறந்த ஒவ்வொருவரும் தம் வாழ் நாளில் படித்து கேட்டு உண்ர்ந்து ஓதி ஜபிக்கவேண்டிய ஒரு மந்திரம் ஸ்ரீ ருத்ரமாகும்.நம்மில் அனேகமாக ஸ்ரீ ருத்ரத்தை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.எனினும் ஸ்ரீ ருத்ரம் என்றவுடன் பலரும் பயப்படுவது அது ஒரு மிகப்பெரிய மந்திரமாயிற்றே.அதை படிப்ப்து சிரம்மாயிற்றே அதன் பொருள் புரிவது கஷ்டமாயிற்றே அதைப்படிக்கும் போதோ சொல்லும்போதோ சிறு பிழைகள் ஏற்பட்டால் அது பாபமாகுமே என்ற அச்சம் காரணமாக பலரும் விரும்பினாலும் ஸ்ரீ ருத்ரத்த கற்றுகொள்ள தயங்குகிறார்கள்
ஆனால் சிவனின் ரூபங்களையும் பெருமைகளையும் விளக்கும் ஸ்ரீ ருத்ரத்தை அனைவரும் அறிந்துகொள்வது மிக அவசியமானதொன்றாகும் எனவே யாவரும் புரிந்துகொள்ளும் வகையில் அதைத்தரும் இறைத்தொண்டினை சிவன்ருளுடன் செய்ய எண்ணியுள்ளேன் ஏன் இந்த முயற்சிக்கு அனைவரின் அன்பான ஆதரவை நாடுகிறன்
   ஸ்ரீ ருத்ரம் ஸ்ரீ சிவபெருமான் மீது புணையப்பெற்ற செய்யுள் வடிவான் வேத நூலாகும் அது நமகம் சமகம் என இரண்டு பகுதிகளைக்கொண்ட்தாகும் அதன் முத்ற்பகுதியிலே நமஹ என்ற சொல் அத்கமாகப்பிரயோகிக்கப்படுவதால் அது நமகம் என்றழைக்கப்ப்டுகிறது அதன் இரண்டாம் பகுதியில் சமே என்ற சொல் அதிகமாகப்பிரயோகிக்கப்படுவதால் அது நமகம் என்றழைக்கப்படுகிறது
   நம்முடைய வேதங்கள் நான்கு அவ்ற்றுள் ரிக் யஜுர் சாம்ம் என்ற மூன்றும் சிறப்புடையனவாகும்.இம்மூன்றின் நடுவில் உள்ளது யஜுர் வேதமாகும் இதன் நடுப்பகுதியில் அமைந்துள்ளதெ ஸ்ரீ ருத்ரமாகும் எனவே ஸ்ரீ ருத்ரம் வேத்த்தின் இருதயமாக்க் கருதப்படுகிறது.எனவே ஸ்ரீ ருத்ரத்தை அறிந்தாலேயே நாம் வேத்த்தின் சாரத்தை அறிந்த்தாக்க்கொள்ளலாம்

Wednesday, November 14, 2012






Dear Friends ,
There have been a fairly long gap since we met via my blog I am sorry for that.Now I have decided to resume my posts soon so that we can again be in touch  Hope to meet you all soon

  regards ,

Jagannathan