ஸ்ரீ ருத்ரம்
பகுதி 1
முன்னுறை
மனிதனாகப்பிறந்த ஒவ்வொருவரும் தம்
வாழ் நாளில் படித்து கேட்டு உண்ர்ந்து ஓதி ஜபிக்கவேண்டிய ஒரு மந்திரம் ஸ்ரீ
ருத்ரமாகும்.நம்மில் அனேகமாக ஸ்ரீ ருத்ரத்தை அறியாதவர்கள் யாரும்
இருக்கமாட்டார்கள்.எனினும் ஸ்ரீ ருத்ரம் என்றவுடன் பலரும் பயப்படுவது அது ஒரு
மிகப்பெரிய மந்திரமாயிற்றே.அதை படிப்ப்து சிரம்மாயிற்றே அதன் பொருள் புரிவது
கஷ்டமாயிற்றே அதைப்படிக்கும் போதோ சொல்லும்போதோ சிறு பிழைகள் ஏற்பட்டால் அது
பாபமாகுமே என்ற அச்சம் காரணமாக பலரும் விரும்பினாலும் ஸ்ரீ ருத்ரத்த கற்றுகொள்ள
தயங்குகிறார்கள்
ஆனால் சிவனின் ரூபங்களையும் பெருமைகளையும்
விளக்கும் ஸ்ரீ ருத்ரத்தை அனைவரும் அறிந்துகொள்வது மிக அவசியமானதொன்றாகும் எனவே யாவரும்
புரிந்துகொள்ளும் வகையில் அதைத்தரும் இறைத்தொண்டினை சிவன்ருளுடன் செய்ய
எண்ணியுள்ளேன் ஏன் இந்த முயற்சிக்கு அனைவரின் அன்பான ஆதரவை நாடுகிறன்
ஸ்ரீ ருத்ரம் ஸ்ரீ சிவபெருமான் மீது புணையப்பெற்ற செய்யுள் வடிவான் வேத
நூலாகும் அது நமகம் சமகம் என இரண்டு பகுதிகளைக்கொண்ட்தாகும் அதன் முத்ற்பகுதியிலே நமஹ என்ற சொல் அத்கமாகப்பிரயோகிக்கப்படுவதால் அது நமகம்
என்றழைக்கப்ப்டுகிறது அதன் இரண்டாம் பகுதியில் சமே
என்ற சொல் அதிகமாகப்பிரயோகிக்கப்படுவதால் அது நமகம் என்றழைக்கப்படுகிறது
நம்முடைய வேதங்கள் நான்கு அவ்ற்றுள் ரிக் யஜுர் சாம்ம் என்ற மூன்றும்
சிறப்புடையனவாகும்.இம்மூன்றின் நடுவில் உள்ளது யஜுர் வேதமாகும் இதன்
நடுப்பகுதியில் அமைந்துள்ளதெ ஸ்ரீ ருத்ரமாகும் எனவே ஸ்ரீ ருத்ரம் வேத்த்தின்
இருதயமாக்க் கருதப்படுகிறது.எனவே ஸ்ரீ ருத்ரத்தை அறிந்தாலேயே நாம் வேத்த்தின்
சாரத்தை அறிந்த்தாக்க்கொள்ளலாம்
பயனுள்ள குறிப்புகளுக்கு நன்றிகள்..!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete