ஜகன்நாதன்வேண்டல்பதிகம்
என்றுமகலாஏகன்மீதுசிவசிந்தனைவேண்டும் நன்றானவனையேநாளும்உள்ளிமகிழவேண்டும் கன்றுநாடும்பசுவாயகாலகாலனின்கருணைவேண்டும் அன்றடிமுடிகாட்டாஅருணேசனினாசிவேண்டும் 1
உற்றஉடலும் உயிரும்என்றும்உனக்கேஆகவேண்டும் கற்றகல்வியும் வித்தையும்கயிலாயனுக்கேஆகவேண்டும் பெற்றசெல்வமும்நிதியும்நீலகண்டனுக்கேஆகவேண்டும் வற்றாப்புகழும்பெருமையும்வள்ளலுக்கேஆகவேண்டும் 2
நோக்கும்விழிகள்நன்றானஉன்எழில்காணவேண்டும் பார்க்கும்பார்வையில்உன்பேரருள்பாதம்பவேண்டும் கேட்கும்செவிகள்கைலாயனின்புகழ்கேட்கவேண்டும் நாசிகளில்நாதனின்பூஜைநறுமணம்வீசவேண்டும் 3
வாயென்றும்வாமதேவன்நாமமேவிளம்பவேண்டும் நாவென்றும்நமசிவாயவென்றேநாளும்ஓதவேண்டும் காவென்று கேட்காமலேகாலகாலன்காக்கவேண்டும் தாயென்றுறையும்தயாபரன்தயைதவறாதுவேண்டும் 4
கரங்கள்கவடிலாதுசிரம்மீதுகுவித்திடவேண்டும் விரல்களால்திருவெண்ணீறு குழைத்துப்பூசிடவேண்டும் அரவணிவானுக்குகரமமலர்மாலைதொடுத்திடவேண்டும் விரல்நுனிகளால்விமலனருள்நாடிவணங்கவேண்டும் 5
துடிக்கும்இதயம்தூயவனைஎண்ணியேத்துடிக்கவேண்டும் விரியுமீரல்வளியானவாலேகுறையிலாதுவிரியவேண்டும் இரத்தமும்நரம்புகளும் நாதனைத்தொழநலமாகவேண்டும பரந்தஉள்ளுறுப்பெல்லாம்பரமனையே உள்ளவேண்டும் 6
கள்ளமில்நல்லுறவு கால மெல்லாம்கனியவேண்டும்
வெள்ளம்போல்வித்தகர்தம் இயைபு இணைந்திடவேண்டம் உள்ளத்தாலுயர்ந்தஉத்தமர்உறவுநிலைத்திடவேண்டும் அள்ளக்குறையாஅன்புடைநெஞ்சங்கள்அருகிடவேண்டும் 7
அன்பையேஅனைவர்க்கும்அளிக்கும்மனம்வேண்டும் தன்னையேதந்தவர்தம்திருவடிதினம்தொழவேண்டும் முன்னும்பின்னும்முக்காலும்ஈசனடிதொழவேண்டும் என்றென்றும்ஈஸன்புகழ்ப்பெருமைப் பாடவேண்டும் 8
கால்கள்இரண்டும்உன்திருத்தலம்நாடிநடக்கவேண்டும் மாலயனுடன்சிவக்குழந்தையரருள்விளைந்திடவேண்டும் பாலால்அபிஷேகம்பந்நாளும்நான்புரிந்திடவேண்டும் காலனைஉதைத்த நீலகண்டனின்கருணைமிகவேண்டும்
நாட்டமெல்லாம்நடனசபேசன் மீதேனாளுமமையவேண்டும் பாட்டெல்லாம்பரமன்புகழையேப்பந்நாளும்பாடவேண்டும் வாட்டமுற்றகாலும்விடாதுவிமலனையேஎண்ணவேண்ட
ஏட்டிலும் எண்ணத்திலும்என்றும்ஈஸனையஉள்ளவேண்டும் 10
சிவதாஸன்வெண்காட்டான்ஜகன்நாதன்பழுதியலா சிவநாதன்பேறருள்வேண்டிபாடியபாடல்களை சிவபக்தியோடுதினம்ஓதுவோர்சந்தியரோடு அவனருள்பெற்றுய்ந்துமகிழ்வதுதிண்னமே
2
No comments:
Post a Comment