Monday, April 22, 2024

 


லிங்காஷ்டகம் தமிழில்

சிவதாஸன் ஜகன்நாதன்

 

பகைவர்களை வெல்லவும், உறவினர்களின்  உறவு மேம்படவும்உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும்,                                       எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும்                                                                      மந்திர வலிமை வாய்ந்த லிங்காஷ்டகம் எனும்                                                  ஸ்லோகம் இங்கு தரப்படுகிறது.


இந்த மந்திரத்தை சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு நாகலிங்க மலர்களைச் சூடி இம்மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.

லிங்காஷ்டகம் தமிழ் பதிகம்

ஸ்ரீ லிங்காஷ்டகத்தை மனதில் சிவபெருமானை நினைத்து தினமும் அல்லது பிரதோஷ வேளையில் ஜெபித்து சிவதரிசனம் கண்டால் சிவபெருமானின் அருளும், நந்தியின் அருளும் ஒருங்கே கிடைக்கும்

தமிழ் லிங்காஷ்டகம் பாடல் வரிகள்

 

ப்ரம்ம முராரியார் போற்றிடும் லிங்கம்                                                                     சிறிதும் களங்கம் இல்லா  சிவலிங்கம்                                                                           பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்                                                                                 நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்                                                         காமனை எறித்த கருணாகர  லிங்கம்                                                              இராவணன் உள்ளம் விளங்கிடும் லிங்கம்                                                               நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

வாசமனைத்தையும் பூசிய லிங்கம்                                                                             வளர் அறிவாகிய காரண லிங்கம்                                                                                     சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்                                                                                    நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்                                                                       தன்னிடை நாகம் அணிந்திடும் லிங்கம்                                                                தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்                                                                                நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

 

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்                                                                             பங்கஜ மாலையை சூடிய லிங்கம்                                                                                       தொங்கிய வினைகளை போக்கிடும் லிங்கம்                                                                 நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !

!தேவ கணங்களின் அர்ச்சனை லிங்கம்                                                                        தேடிடும் பக்தியில் வூரிடும் லிங்கம்                                                                                 சூரியன் கோடி சுடர் விடும் லிங்கம்                                                                           நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!

எட்டு தளத்தினுள் எழுந்திடும் லிங்கம்                                                                   எல்லாமாகிய காரண லிங்கம்                                                                                                  எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்                                                                                 நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!

தேவரின் உருவில் பூஜைக்கும்  லிங்கம்                                                                       தேவ வனமலரை ஏற்றிடும் லிங்கம்                                                                  பரமநாதனாய் பரவிடும்  லிங்கம்                                                                                   நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!

1.      லிங்காஷ்டகம் இதனை தினமும்                                                                               சிவ சன்னதியில் சொல்வார்                                                                                      சிவலோக காட்சியுடன்                                                                                             சிவனருளும் கொள்வார்…

2.      .தென்னாடுடைய சிவனே போற்றி                                                                      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி….

ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம்நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். ஸகல மங்களங்களும் உண்டாகும்.

No comments:

Post a Comment