சிவதாஸன் ஜகன்நாதனின்
சர்வேஸ்வரரின் திருப்பள்ளி எழுச்சி
பாடல்கள் 21 முதல் 25 வரை
கார்த்திகையில்தீபமாயருணையிலேஜொலிப்பவனே மார்கழி ஆதிரையில் தில்லையிலாடும் நடேசனே வார்த்தவடிவழகியைசித்திரையிலேமணந்தசொக்னே ஆர்த்தன்புடன்கூடினோம்பரமனேபள்ளிஎழுந்தருளாயே 21
வெண்பனி கயிலையில் மோனத்தில் அமர்ந்த வனே பண்ணமுதப் பேரெழிலாள் சிவகாமியுடன்ஆடிய பரமனே வெண்காட்டில்ஸ்வேதேஸ்வரனாய்உறை விமலனே பண்ணோடுனைப்பாடபரமனேபள்ளிஎழுந்தருளாயே 22
ஐந்தெழுத்துநமசிவாயமாய்த்திகழ்பவனேமுடிஉனதடி வைத்துனைத்தொழுவோர்வம்சம்காக்கும்வள்ளலேஅம்பு எய்துதிரிபுரமெரித்து அகிலம் காத்த லோகநாயகனே பைந்தமிழாலுனைப்பாட பரமனேபள்ளி எழுந்தருளாயே 23
அறுபத்துநான்குவிளையாடலைமதுரையிலேகாட்டினாய் அறுபத்துமூன்றடியாருக்குஅருளிநாயன்மாராக்கினாய் அறுபத்து நான்கு ரூபங்கள் கொண்டு திருவருளினாய் தீது அறுபக்தியுட்ன்தொழுதோமேபரமனேபள்ளிஎழுந்தரு 24
யுகம் க்ருதாவில் அக்னிமலையாய் அருளிய அருணனே யுகம்த்ரேதாவில்மாணிக்கமலையான மஹேஸ்வரனே யுகம்துவாபரால் ஸ்வர்ணமலையாய்விளங்கியவிமலனே யுகம்கலியில்மரகதமலையாயபரமனேபள்ளிஎழுந்தருளாயே 25
இத்துடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்
நாளைம் மீண்டும் சந்திப்போம்
சிவதாஸன் ஜகன்நாதன்
11-01-2023
No comments:
Post a Comment