ஸ்ரீ பரமேஸ்வரர் திருப்பள்ளி எழுச்சி 26--30
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும்
சிவதாஸன் ஜகன்நாதனின் இனிய வணக்கம்
எனது ஸ்ரீ சர்வேஸ்வரரின் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களில் இன்று 25 முதல் 30 வரையிலான் பாடல்களையும் பலசுத்தியும் தந்துள்லேன் படித்துப் பொருளுணர்ந்து ஈசன் அருள் பெற்றுய்யுங்கள்
உனதருள்நாடிஉள்ளமுருகிப்பாடிதொழுமடியவரும் தினம்நால்வேதங்களைவிடாதோதும் அருமறையவரும் மனமுருக்கும் நாதம் இசைக்கும்
இசைவல்லவரும்
இன்று நினதெழில்காண கூடினரே பரமனே பள்ளி எழுந்தருளாயே 26
ஆண்டுமுழுதும்ஆலயங்களில்திருவிழாக்கள்கொண்டவனே வேண்டுவோர்க்குவேண்டுவனவருளும் விஸ்வேஸ்வரனே மீண்டும்மீண்டும்உன்னடிதொழுவோமே மஹேஸ்வரனே தீண்டும்
நோயண்டாதருளும் பரமனேபள்ளி
எழுந்தருளாயே 27
திரிபுரமெரித்து தீயோரை அழித்து தேவரை மகிழ்வித்தாய் எரிசிஹையோடு தக்கன் யாகமழித்தவன் ஆணவமடக்கினாய் விரிசடைகொண்டு மதனை எரித்து எழுப்பியாட்கொண்டாய் பரிவுடனே எமைக்காக்கும் பரமனே பள்ளி எழுந்தருளாயே 28
எண்ணம் முழுதும் ஏகனாய் நிறைந்த ஈசனே மூத்தவன் திண்ணமாயருளும் விநாயகனோடும் சின்னவனோடும் பண்ணமுதப்பேரெழிலாள் உமையோடும் இயைந்து அருளும் கண்மூன்றுகருணாகரனே பரமனே பள்ளி எழுந்தருளாயே 29
புல்பூண்டுகளோடுமரம்தாவரங்களும்புழுப்பூச்சிகளும்
நல்நீர்வாழினங்களுடன்ஊர்வனபறப்பனவிலங்குகளும் வல்அசுரர்மனிதர்தேவர்முனிவர்கந்தர்வரும்பிறதெய்வங்களும் நல் காக்ஷி வேண்டிநாடினரே பரமனே பள்ளி எழுந்தருளாயே 30
மாதங்களில் முன்னதான மார்கழியில் மலங்ககளகற்றும் வேதநாயகனேவெண்காடனேஉன்புகழ்பாடிஅடிநாடி தீதறுபக்தியோடுஜகன்நாதன்தினம்நீபள்ளிஎழப்பாடினனே மாதொரு பாகனே இனி தினம்திருப்பள்ளி எழுந்தருளாயே
இத்துடன் எனது சிவத்திருப் பள்ளி எழுச்சிப்ன் பாடல்கள் முப்பதும் நிறவுறுகின்றன
இந்த மார்கழி மாதம் முழுதும் ஈசனைத்துதித்து அவனருள் வேண்டி பாட்டி அவரை திருப்பள்ளி எழ பாடும் அருளைக் கொடுத்த இறைவனுக்கு என் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் நன்றியை வணக்கமாக அவர் திருப் பொற்பாதத்தில் சமர்ப்பித்து அவரருள் பெற்றுய்வோம்
நன்றி வணக்கம்
சிவதாஸன் ஜகன்நாதன்
சர்கஜனமே சுகினோ பவந்து
ஓன் நமசிவாய
17-10-2023
No comments:
Post a Comment