சிவதாஸன் ஜகன்நாதனின்
சர்வேஸ்வரரின் திருப்பள்ளி எழுச்சி
சர்வேஸ்வரர் திருப்பள்ளி எழுச்சியில்
இன்று 10 முதல் 15 ஆவது பாடல் வரை
தந்துள்ளேன் படித்து மகிழ்ந்து ஈஸனருள்
பெற்றுய்யுங்கள்
நெஞ்சமெல்லாம்
நிறைந்தவனே
நடன
சபேசனே கொஞ்சுமொழியாளை வாமபாகத்தில் கொண்டவனே விஞ்சுஎழில் மிகு வீர சிவனே தஞ்சமென்றோரைக்காக்கும் பிஞ்சுமதி
நுதற்கண்ணனே
பரமனே
பள்ளி
எழுந்தருளாயே 10
நல்ல நதிஅடைக்க மண்சுமந்து பிரம்படி பட்டாய் வில்லவனுக்குபாசுபதாஸ்திரமளித்து வில்லடி பட்டாய் வல்ல வேடனுக்கு கண்ணில் குருதி பெருக்கி காலடிபட்டாய் எல்லையில்புகழுடை பரமனே பள்ளி எழுந்தருளாயே 11
கொடுநாகங்கள் உடல்மீது ஓடக்கொண்ட கயிலாயனே பிடி வெண்ணீறு மேனிமுழுதும் அணிந்த பரமேசனே கடும்புலியின் உரிவை இடையில் அசைத்த காலகாலனே அடியவர் துயரகற்றும் பரமனே பள்ளி எழுந்தருளாயே 12
கால்கால்தூக்கி கண்டேயனுக்காக காலனை உதைத்தவனே வேல்கொண்டவனை ஈன்று ஞாலத்தைக் காத்தவனே ஆலஹாலத்தை உண்டு அகிலம்காத்த நீலகண்டனே ஆலயம் தேடி வந்தோம் பரமனே பள்ளி எழுந்தருளாயே 13
பெர பெருவிரி வானமாய்
அனைத்துலகும் தாங்கும் மண்ணாய் மருவி வீசி மகிழ்த்தும் தென்றல் காற்றாய் ஒளிவீசிப்பரவிப் பெருகும்நெருப்பாய் தண்ணமுத நந்நீராய் ஐந்து பூதங்களாய் பரவிநிற்கும் பஞ்சபூதநாதனே பரமனே பள்ளி எழுந்தருளாயே 14
யுகயயுகங்கள்கள் அனைத்தும் நீயேயானாய் ஏகநாதனே ஜெகம் முழுதும் நீயே ஆள்வாய் ஜகதீஸ்வரனே பவம்
முழுதும்
நீயேபரந்து காப்பாய் பரமேஸ்வரனே தவம்
புரிந்துவந்தோம் பரமனே
பள்ளி
எழுந்தருளாயே 15
ந்ன்ன் நாளை மீண்டும் சந்திப்போம்
சிவதாஸன் ஜகன்நாதன்
ந்ன்
நல
No comments:
Post a Comment