ஸ்ரீ சிவஸ்வரூபங்கள்--56
சிவதாஸன் ஜகன்நாதன்
ஓம் நமசிவாய
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் சிஃவதாஸன் ஜகன்நாதனின் இனிய காலை வணக்கம்
நமது ஸ்ரீ சிவஸ்வரூபங்கள் தொடரில் இன்று சர்வேஸ்வரரின் 56 வது ஸ்வரூபமான விசாபகரண மூர்த்தி ஸ்வரூபம் பற்றிப் பார்ப்போம்
அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை உண்டு அனைவரயும் காத்ததால் சிவபெருமானுக்கு விசாபகரண மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.
56. விசாபகரண மூர்த்தி
சிவபெருமானின் அனுமதியின்றியும் அவரை வணங்காமலும் தேவர்களும், அசுரர்களும் திருமாலின் ஆலோசனைப்படி மந்திரமலை மத்தாகவும், வாசுகி என்னும் ஆயிரம் தலை பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அமுதம் வேண்டிக்கடைந்தனர்.
திருமால் ஆமை உருவம் கொண்டு மந்திரமலையின் அடியை முதுகாலும், கைகளாலும் தாங்கினார். ஆனாலும் கடைதல் தொடர்ந்து நடைபெற்று வரவே ஒருக்குறிப்பிட்டக் காலத்திற்கு பின்னர் வாசுகி என்றப் பாம்பு வலிதாளாமல் அதன் ஆயிரம் தலை வழியே கடுமையான, கொடுமையான ஆலகால விஷத்தைத் துப்பியது,
அவ்விஷமானது அனைத்து இடங்களிலும் பரவ அது கண்ட திருமால் அதை அடக்க சென்றார். ஆனால் அவ்விஷத்தின் கடுமை அவரது மேனியைக் கருக்கியது, அதனால் அவர் ஓடினார்.
பின்னர் அனைத்து தேவர் குழாமும் கைலை சென்று நந்திதேவரின் அனுமதியுடன் சிவனை தரிசித்தனர். திருமாலின் மாறுவேடத்தைக் கண்ட சிவபெருமான் அவரிடம் இந்தக் கோலத்திற்கான காரணம் வேண்ட அனைவரும் பாற்கடல் விஷயத்தைக் கூறினார். பார்வதி தேவியும் அவர்களைக் காக்குமாறுக் கூறினார்.
பின்னர் சுந்தரர் கொண்டு வந்த விஷத்தை உண்டார். அது தொண்டைக் குழிக்குள் சென்றதும் அதை அங்கேயே நிறுத்தினார். ஆகவே அவரது பெயர் நீலகண்டன், சீசகண்டர் என்றாயிற்று.
இதற்குப் பின்னர் சிவபெருமானின் அனுமதியுடன் பாற்கடலைக் கடைய அதிலிருந்து அமுதமும், இன்னபிற பொருள்களும் வந்தது. திருமால் மோகினியாகி அசுரர்களை வஞ்சித்து தேவர்களுக்கு அமுதம் கொடுத்தார். அதன்பின் அவரவர் அவரவரர் பதவியில் சென்று அமர்ந்தனர்.
அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை உண்டு அனைவரயும் காத்ததால் சிவபெருமானுக்கு விசாபகரண மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.
இவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டியது சென்னை-ஆந்திரா எல்லையிலுள்ள சுருட்டப் பள்ளியாகும். பொதுவாக பெருமாள் பள்ளிக்கொண்ட நிலையில் பார்த்திருப்போம்.
இது சிவபெருமான் பள்ளிக் கொண்ட தலமாகும். இங்கு பிரதோஷம் பார்க்க மிக்கச் சிறப்புடையது. இவரருகே பார்வதி தேவியிருக்கின்றார். இவர் விஷம் உண்டதால் ஏற்பட்ட மயக்கத்தினால் இவ்வாறிருக்கிறார்.
இவர்க்கு செவ்வரளி அர்ச்சனையும், முக்கூட்டு எண்ணெய் என்றழைக்கப்படும் நெய், தேங்காய், எள் நைவேத்தியமும், செவ்வாய் அன்றுக் கொடுக்க விஷ பயம் தீரும், நீள் ஆயுள், குடும்ப அமைதி ஓங்கும். இவரை தரிசிக்க தமிழக அரசு சுற்றுலாப் பேருந்துகளை இயக்குகிறது.
இந்த உன்னதமான மூர்த்தியை வணங்கி ஈஸனருள் பெற்றுஇவோமாக
நாளை அடுத்த பதிவுடன் உங்களை நீன்டும் சந்திக்கிறேன்
நன்றி வணகம்
சிவதாஸன் ஜகன்நாதன்
ஓம் நமசிவாஅய
சர்வஜனமே சுகினோபக்வந்து 18-01-2023