சுப்ரமண்யபுஜங்கத்தின் பன்னிரண்டாவது ஸ்லோகம்
ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது
விதௌக்லுப்ததண்டான்ஸ்வலீலாத்ருதாண்டான் நிரஸ்தே பசுண்டான் த்விஷத்கால தண்டான் ஹதேந்த்ராரிஷண்டான் ஜகத்ராண சௌண்டான் ஸதாதே
ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான் (12)
( ஸ்ரீ ஆதிசங்கரர் )
ப்ரம்மனைப் புடைத்து சிறையிலிட்டு அயனில்லாத அண்டங்களையெல்லாம் காத்தருளி யானையின் துதிக்கையைப் பற்றி அதனையும் வென்று எமனை ஒட்டி சூரபத்மனை வென்றாட்க்கொண்டு இந்திரனின் துயர் களைந்து தன்னை நாடி அடைந்தோர்க்கு என்றும் அபாயமளிக்கும் நின் திருக்கரங்கள் எனக்கு என்றும் துணை செய்து அருளட்டும் கந்தநாதனே
காலதண்டான் என்பது எமனை ஓட்டி எனப்பொருள் படும்
அடியேன் இயற்றிய பன்னிரெண்டாவது பாடல் :-
வேதமோதும் அயனைக்குட்டிசிறையிட்டுஇந்திரன்தன்
வாதனைப்போக்கிவிளையாட்டாய்துதிக்கைப்பற்றிகரியன்
சாதனைமுறித்துசூரபத்மன்தனைவென்று எச்சமயமுமருள்
ஆதரிக்கும்கரங்கள்பன்னிரெண்டுமெனைக்காக்கட்டும்கந்தா
12
( ஜகன்நாதன் )
No comments:
Post a Comment