Tuesday, June 28, 2016



சுப்ரமண்யபுஜங்கத்தின் பதினோராவது ஸ்லோகம்
ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது 


புளிந்தேசகன்யாகநாபோகதுங்க                  ஸ்தனாலிங்கநாஸக்தகாச்மீரராகம்                                        நமஸ்யாம்யஹும்தாரகாரேதவோரஸ்வ                       பக்தாவனே ஸர்வதா ஸானுராகம் (11)  

( ஸ்ரீ ஆதிசங்கரர் )

  குறவேடனின் மகளாகிய வள்ளியின் இரு புற அழகிய மார்புகளில் அலங்கரிக்கப்பட்டுள்ள குங்குமங்கள் அவளைத் தழுவிய காரணத்தால் முருகனின் மார்பிலும் பட்டு மார்பு சிவந்து ஒளிவீசியதினலோ அல்லது, தன் அன்பர் குழாம் மீது கருணை கொண்டு அவர்களைத் தடுத்தாட் கொள்ள வேண்டும் என்று மனத்தினுள் எழும் ஆசையினாலோ தீயவனான சூரபத்மனைத் கடிந்ததனாலோ செந்தில் நாதனின்  மார்பில் சிவப்பு நிறம் தோன்றியதோ? அச்செவ்வொளி வீசும் மார்பினைத் தொழுவேன்.

துங்க தனம் - உயர்ந்த ஸ்தனங்கள். 

அடியேன் இயற்றிய பாடல் 

வேட்டுவர்கோன்தன் திருமகள் வடிவழகி வள்ளி மை                                                                        தீட்டியவிழியாள்தன்மார்பியலங்குகுங்குமத்தாலோ 
                                                                                                    மீட்டுமடியார்உற்றதுயர்துடைத்ததினலோதீயவனைக்                                                                  கடிந்ததனாலோ சிவந்த குமரன் மார்பைப்போற்றுகிறேன் 11


( ஜகன்நாதன் )

                   

No comments:

Post a Comment