சிவா குடும்ப அந்தாதி
ஸ்ரீ சிவகுடும்பம்
திருவிளையாடல்கள் பலகாட்டி திருவருளும் தில்லைநடராஜன்
பெருவழகுடன் பவம்காக்கபரமனுடன்பரிவோடாடும்பரமேஸ்வரி மருவிலா மனதோடு எண்ணுவோர்
செயல்காக்கும் மஹாகணபதி உருவடிவழகுடைபாலன்உருகுவோர்வினைதீர்க்கும்வடிவேலன் கருத்தினில் கருணைமிகு சிவகுடும்பத்தினை உருவேற்றுவோமே
சிவ குடும்ப அந்தாதி
எண்ணத்தில் உன்னை முன்வைத்தே நல்வேழமுகப் பண்ணமுதனே செய்யும் செயல் யாவும்துவக்குவேன் கண்மூன்றுடை கருணாகரன் பெற்ற செல்வனே என்றும் மண்ணுலகில் மலமற்று வாழ்ந்திட நின் திருவடியருளுமே
அருளுமே அனைத்து இகபர சுகமும் அளவிலாஉன் கருணை திரளுமே தூய பக்தர்கூட்டம் தினம் தினம் உன் திருவடிகாண அரளுமே தீதுற்றோர் தீயக்கூட்டம் உன் திருநாமப்புகழ் கேட்டு வரளுமே வற்றாத வறுமையும் தீமையும் செந்திலானைக்கண்டு
கண்டேன் தாயே நின் சலங்கைதிகழ் கமலப்பொற்பாதம் கொண்டேன் அளவிலாப் பெருமகிழ்வு என்அம்மா உந்தன் கெண்டையம் தடங்கண் மலர் பேரெழில் கண்டு வியந்து
வண்டார் குழலியே ஈசன் என்றும் மகிழ் உமையம்மையே
அம்மை இடப்புறம் எழிலுறக்கொண்ட ஆலவாயா அன்புடன்
எம்மை எந்நாளும் ஏற்றமுறச் செய்யும் எங்கள் ஏகம்பனே தம்மையே தந்தார்க்கு தாயுமானவனே சிறிதும் தவறாது
இம்மையும் எம்மையும் நிறைவோனே ஜெகன்நாதன் எண்ணம்
எண்ணத்தில் என்றும் ஏகமாய் நிறைந்திட்ட ஏகநாதனே பண்ணமுதப்பேரெழிலாள் பரமேஸ்வரியுடனும் பார்புகழ்
முன்னவன்முதல்வன்விநாயகனுடன்மறவாதருளும்நம் சின்னப்பிள்ளை செவ்வேளோடும் நிறைவாயே என் எண்ணம்
ஜகன்நாதன்
No comments:
Post a Comment