Thursday, June 30, 2016



சுப்ரமண்ய புஜங்கத்தின் பதிமூன்றாவது ஸ்லோகம் 

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது 


 ஸதாசாரதாஷண்ம்ருகாங்காயதிஸ்யு 
 ஸமுத்யந்தஏவஸ்திதாச்சேத்ஸமந்தாத்                    
 ஸதாபூர்ணபிம்பாகலங்கைஸ்சஹீனா   ததாத்வன்முகானாம்ப்ருவேஸ்கந்தஸாம்யம் (13)
( ஸ்ரீ ஆதிசங்கரர் )
  இதற்கு நான் இயற்றிய பாடல்

ஆறுசந்திரர்கள் ஒன்றாய்த் தண்ணொளிவீசி களங்கமின்றிப் 

  பேரெழிலோடு வானில் வலம் வந்து  எல்லாத்திக்கும் விரிந்து   

   பரவிநின்றாலும்என்றும்கருணைஒன்றையேபெருக்கி    

  அருளும் நின் பேரெழில் திருமுகங்களுக்கு அவை ஈடாகுமோ13

( ஜகன்நாதன் )

 இதன் பொருள் 


எப்போதும் குளிர்மிகுந்தவனவாயும் , களங்கம் இல்லாதவனவாயுமான  பரிபூரணமான நிலவொளியை  எல்லாத் திக்கிலும் வீசுகின்ற ஆறுசந்திரர்கள்   என்றைக்கும் உள்ளனவாகி  பேரொளியை வீசினாலும்  அவை என்றும் கருணை ஒன்றையே பெருக்கி அ ருளும் திருச்செந்திலாதிபனின் முகங்களி லிருந்து  வீசும் பேரொளி க்கு  ஒப்பாகுமோ . அவ்வாறு இல்லாமையால் அவை முருகன் திருமுகங்கள் வீசும் திரு ஒளிக்கு ஒப்பற்றவையாகும்.

No comments:

Post a Comment