Thursday, May 9, 2013


இறைப்பண்கள்

முதல்வனே முன்னவனே முருகனுக்கு மூத்தவனே
மதமகற்றுபவனே மகோன்னதம் அருள்பவனே மந்திரமானவனே
விதவிதமான விருந்து விழைபவனே நாளும் மறவாதுனது
பதமலர் பக்தியோடு ஜெகன்நாதன் பணிந்தேத்துவனே


ஆறுமுகத்தழகா ஆவின்ங்குடிவாழ் அண்ணலே இப்போதே நீ
ஏறுமயிலேறி வருவாய் எந்தனுக்கு கண்முன் காட்சி அளித்து
மாறாத துன்பம் எந்நாளும் எனை நாடாவண்ணம் காத்தருளி 
பேறருள் செந்தில் நாதா ஜெகன்நாதன் நினைப்பணிந்தேனே

ஆறுமுகம் கொண்டாய் ஆறு படை வீடமர்ந்தாய் ஆவலுடன்
ஏறுமயிலேறி வந்தாய் எந்நாளும் எங்கள் குலம் வாழவைத்தாய்
மாறிலா வ்ள்ளிமனம் ஈர்த்தாய் மஹேசனுக்குபதேசித்தாய் சூரனை
கூறாக்கினாய் கவடில்லா கடையேனின் மனம்நிறைந்தாய் குஹனே 

மயிலேரும் மால் மருகா வடிவேல் முருகா நாளும்
அகிலமெல்லாம் காத்தருள்செய் கந்தா கடையேன் நான்
பயிலுவதெல்லாம் நின் புகழ்பெருமையே எக்காலும் உன்
எழிலுருவை எண்ணி எண்ணி உளம் நெகிழ்ந்துருகுவேனே

வடிவழகன் வடிவேலன் வண்ணமிகு பேரெழிலாள்
கொடியிடை வள்ளி மனம் மகிழ் நேசன் முதமிழ் வேள்
அடியேன் ஆவலுடன்  உள்ளமுருகி அழைத்தால்
நொடிப்பொழுதில் இங்குவந்து நலமெல்லாம் நாளுமருள்வார்

விழிக்ழ்ள் பன்னிரண்டு அழகுடன் மிளிறும் நிந்தன்
எழிலுறு திருக்கோலம் என்றும் கண்டு மகிழும் என்னை
வழி நட்த்தித் திருவிளையாடல் பல காட்டி ம்கிழ்த்தும் முருகா
பழியேதும் வாராதருளி என்விழியொளி காத்தருளும் வேலனே





தாயே தயாபரி சங்கரி சர்வேஸ்வரி வித்யாம்பிகே
நீயே ஆதிபராசக்த்தியானாய் உமையே ஈசனின் இடப்பாதியே
காயே கண்டு மனம் நொந்தகாலை கனியாக கனிந்துவந்து
நாயேன் ஜெகன்நாதனுக்கு நலமெல்லாம் தந்தருளும் மஹேஸ்வரியே



வெள்ள்ம்போல் கருணைமழை பொழிந்து காக்கும் பெரு
வள்ளல் பெருமானே பாவியேன் எண்ணமெல்லாம் நீயே நிறைந்து
உள்ளம் உருகி உனையே நினைந்து நினைந்து வாழும் அடியேன்
கள்ளம் இல்லாது ஜெகன்நாதன் எப்போதும் உனைத்தொழுவேனே

சிவ வழிபாட்டு ம்கிமை
தினம் தினம் மனம் எண்ணி எண்ணி உருகி
கணமும் விடாது ஈசனை வழிபடுவோர் நாளும்
தனமும் தான்யமும் தவமும் தவறாத செல்வமும்
ம்னமகிழ்வும் மாறாது பெற்றுய்வார் திண்ணமே

தேய்பிறை பதிநான்காம் நாளில் வேழமுகன் செவ்வேளோடு நம்
தேயுறு நிலவணிஈஸ்ன் வேயுறுதோளுமையோடும் வேண்டும் வரம்
ஆயிரம் நாளும் அருள் ஆலவாயன் மகிழ சிவராத்ரி பூஜை
நாயினும் கடையேன் ஜெகன்நாதன் நலமாய்ச்செய்ய வருள்வாரே

முக்கண்ணீசன் மக்கள் மனம் மகிழ் நேசன் மகேசன்
எக்காலமும் எப்போதும் எவ்விட்த்தும் எல்லோருக்கும்
தக்க நல் தருணமதில் தடையேதுமில்லாது நல்லருள்
மிக்க்ச்சொறியும் வள்ளல் செந்தாள் மகிழ்ந்து பணிவோமே

விடம் கண்டம் வைத்தாய் வீறுகொண்டு எடுத்த
படமுடைய நாகம் மேனி எங்கும் வைத்தாய்
தடங்கண் உமை நங்கை எழிலுற இடம் வைத்தாய்
கடன் உனக்குப்பட்ட என்னை உன்திருவடிவைத்தாயே





கண் நான் பெற்றது நாளும் உந்திரு உருக்கண்டு மகிழ்ந்திடவே
விண்ணும் மண்ணும் பெண்ணும் ஆனும் தேவரும் இறையோரும்
எண்ணமெல்லாம் சிவமே நிறைந்திட ஏகம்பனே எங்கள் ஊனக்
கண்களை காலமெல்லாம் உனைக்கண்டு மகிழ்ந்திடக்காப்பாயே








ஈசனும் நேசனும்
அஞ்செழுத்து நீயேயானாய் அருள்மிகு அந்தமில்சர்வேசா
விஞ்சு ஆறெழுத்துருக்கொண்டாய் குழந்தை வடிவேலா
துஞ்சுவோர் எண்னமதிலும் நிறைந்தாய் தூய கங்காதரா
அஞ்சேல் என்றருள் முத்திரை காட்டினாய் முத்தழகு செவ்வேளே
நஞ்சுண்டு கண்டம் கருத்து அண்டம் காத்தாய் திருநீலக்ண்டா
வஞ்ச நெஞ்சம் கொண்ட வல் சூரனை ஆட்கொண்டாய் செந்தில்நாதா
பஞ்சாய் வந்த்துன்பமெல்லாம் பறக்கவைத்தாய் பரம தயாளா
கொஞ்சுமொழி வள்ளியொடு விளையாடினாய் தணிகைவேலவா
விஞ்சிநிற்பது வானமெனப் பரந்த பரமேசன் அருட்கருணையோ
கிஞ்சித்தும் குறையாத அப்பனுக்குறைத்த குமரேசன் திருவருளோ

ஓங்காரமே உருவான சம்போ சங்கரா சர்வேசா
ஓங்காரத்துக்குப்பொருளுறைத்த கந்தா கதிர்வேலா
பாங்காய்ப் பந்நாகம் கபாலமோடணி மஹேஸ்வரா
ஈங்கிங்கு எமையாள மயில்மீதுவந்த முருகேசா
நாங்கள் நாளும் உள்ளம் உருகிப்பாடும் பரமேசா
ரீங்காரமிடும் வண்டு மொய் மலர்சூழ் சோலைமலையழகா
சங்காரமூர்த்தியே காலனை உதைத்துபாலனுக்கருளியவா
ஆங்காரம் கொண்ட சூரனை வென்று அருளி ஆட்கொண்டவா
எங்கும் நிறை சங்கரன்சாமி அருள் மழைபொழிவார்
கங்காதரன் மகன் கந்தசாமி அருள் வெள்ளம் பெருக்குவார்


பரிவுடனே பக்தரை அனுக்ரகித்தருள்வார் பாசமிகு பரமேசன்
வருமடியார் வல்வினையறுத்து வளமளிப்பார் குணமிகு குமரேசன்
கரித்தோல் போர்த்தி காமாட்சியை மணந்தார் கள்ளன் ஏகமபன்
வரிவளைக்கரத்தாள் வள்ளி மனம் கவர்ந்து மணந்தார் தணிகாசலன்
பிரியா மங்கை இடப்புறமும் பெருகுகங்கை முடிமீதும் கொண்டார் ஈசன
உரிமையோடு தேவானையும் வள்ளியும் இருபுறம் கொண்டார் முருகேசன்
திருவெண்ணீறுஅங்கமெங்கும் பூசி மகிழ்ந்து வருவார் வெண்ணீற்றர்
பெரு மணமிகு சந்தனம் பன்னீர் பிரியமுடணிவார் வடிவேலழகர்
உருகுவோர் உள்ளத்தில் நாளும் குடிகொள்வார் உலகாளும் ஈசன்
மருவிலா பக்திகொண்டோர் மனமதில் மகிழ்வோடாள்வார் குஹன்


அடிமுடி மால் அயன் அறியவொண்ணா பெரு உருவுடை ஈசன்
வடிவழகு வளமை மிக்க்கொண்ட திரு உருக்கொண்ட குஹன்
பிடியிடையுடை உமையம்மை மனம் மகிழ் பெரு மஹேசன
கடிமணம் கானகத்தரசி கொடிவள்ளியைக்கொண்டார் குமரேசன்
அடிநாடி கிரிவலம் வருமடியார்க் கருள்வார் அருணாசலேசன்
மடிநிறைந்து கன்று நாடும் பசுபோல் நாடியருள்வார் செந்திலாண்டவன
முடிமீது இளமதி என்றும் கொண்டு அகிலம் காப்பார் கைலாயவாசன்
தடிகைக்கொண்டுநின்று தவறாது அடியாரைக்காப்பார் பழனிவேலன்
இடிதோன்றும் பரந்த வானினும் மிகுந்த அருள் தருவார் நம் அப்பன்
அடியாழம் காண்வொணாப்பரந்த கடலினுமிக்கருள்தருவார் நம் சுப்பன்








நாதவேத்தலைவன் ஞாலமெல்லாம் வணங்கும் நம் நாகபூஷன
நாத நாயகன் நால்வேத்த்த்லைவன் பெற்ற செல்வன் கந்தன்
வேதமே தானேயான வித்தகன் விண்ணவர் கோன் விகிர்தன்
வேதநாத்த்துக்கு விளங்கு பொருள் சொன்னவன் வடிவேலழகன்
காதலாகிக்கசிந்துருகுவார் கண்ணீர் துடைப்பவன் கைலாயன்
காதலே மிகுந்து கரம் குவிப்பார் கர்மவினை அறுப்பவன் கதிர்வேலன்
மாதொரு பாகராய் மகிழ்வுடன் மங்கலங்களரும் மன்னவ்ன் மகேசன்
மாதிருவர் உடனுறை மாதவன் மருகன் மலமகற்றுபவன் முருகன்
பாதம் நாளும் நான் பணிந்திட நல்லருள் செய்வார் பரமேசன்
பாதம் நான் சென்னியில் வைத்தடிதொழ கருணை செய்வார் குமரேசன்

பெருவுடை ஈசன் திருவருட்செய்த தலங்கள் எட்டு
திருவுடை வேலன் மருவிய் அருள்மிகு தலங்கள் ஆறு
கரு நிறம் கண்டம் கொண்ட்மருதீசர் ஆலகாலமுண்டார்
உருவடிவழகுடை திருக்குமரன் பெரு வேல் கைக்கொண்டார்
மருவிலா இளமதிமுடிசூடி ஈசன் திருத்தாண்ட்வமாடினார்
பெரு மயிலேறி பறந்துவந்து வடிவேலன் பக்தற்கருளினார்
தரும் வரங்கள் தடையின்றி விகிர்தர் வேண்டுவோர்க்கருளினார்
அருள் வெள்ளம் கருணைப்பார்வையாலே கந்தன் மிகப்பொழ அருணைவாழ் அந்தமில் கிரிவாசன் நம்மைக்கரை சேர்ப்பார்     கருணையே உருவான் கந்தவேள் என்றும் நம்மைக்காத்தருள்வார்

















































No comments:

Post a Comment