அருணேசன் துதி
பாடித்துதிப்பவர் பல்லாயிரம்பேர் பக்திமிகுந்துனையே
நாடிவர்பவர் நாளும் நாளும் நலமோடு வாழ்ந்துனையே
வாடுபயிர் விழையும் மழைபோல விடாது சிக்கெனப்பிடித்து
ஈடில்லா நின் அருட்கருனையில் மூழ்குவாரே அருணேசா 1
முழுமதி நாளில் இளமதிசூடும் மன்னன் அருணேஸ்ன் மீது
பழுதிலா பக்தியுடன் பதிகங்கள் பலப்பாடி பதமலர் நாடி
தொழுத கையும் தவறாதமனம் சொல்லும் ஐந்தெழுத்துடன்
மழுவேந்தும் மன்னவனின் மாமலை கிரிவலம் வருவோமே 2
பண்ணமுதன் பக்திமிகு பெருவடியார் பாபவினாசன் அவர்
எண்ணமெல்லாம் என்றும் நிறை ஏகன் அநேகன்
நாளும்
வண்ணமிகு பேரெழிலாள் உண்ணாமுலயம்மை நேசன் திரு
வண்னாமலையில் வலம் வருமடியார் மனக்கோயில் மீளா வாசன் 3
அலை அலையாய் பக்தர் வெள்ளமென நாளும் பல்கிப் பெருகி
மலைமகள் மகிழ் மணாளன் மலையாய் நிற்கும் ஈசனைக்காண
அலைகடலெனத்திரண்ட்து கண்டு யான்மனம் சோர்ந்தகாலை பெரு
மலையாய் யானிருக்க இத்திரளுனில் சிக்கி நீயேன்தவிக்கின்றாயென்றார் 4
உள்ளம் உருகி ஊனினை உருக்கி உந்திருவடிகாண
மக்கள்
வெள்ளமென திரண்டு உன்னைகிரிவலம் வந்து வெளிக்காட்டும்
கள்ளமிலா காதல் கண்டு வியந்து உனையே விடாது
உள்கி யானிங்கிருந்து ஊர்த்தவனே உன்னைத் துதிக்கின்றேனே 5
ஆடிவரும் அண்ணாமலையார் அழகைக்கண்டு மகிழக்
கோடிக் கண்கள் வேண்டும் அங்கே அம்மலையை
நண்ணி
நாடிவரும் அடியார் கோடி கோடியாய் அவர் திருப்புகழ்
பாடி மகிழ்ந்து கிரிவலம் வந்து அவர் திருப்பாதம் சரணடைவார் 6
எத்தனையோ கோடி பக்தர்கள் பஞ்சாக்ஷரம் பாடி கிரிவலம் வர
சித்தர்கள் சித்தித்து சிவன் புகழ்பெருமை நாடி கிரிதனில் வாழ
உத்தம நெஞ்சுடை தேவரும் விண்ணவரும் அவர் அடிமுடி தேடிவர
மத்தமும் மதியும் முடிகொண்ட மகேசன் யாவர்க்கும் நலமருள்வார் 7
எண்ணமுக்தியருளும் பஞ்சபூத்த்தேயுத்லம்தனில்
அண்ணாமலையாய் அப்பன் அகிலாண்டேசன் அன்னை
உண்ணாமுலையம்மையுடன் உறைந்து கிரிநாடும் ப்க்தர்
எண்ணமெல்லாம்பரவிபெருகி பேர்ருள்புரிந்து காப்பாரே 8
அருணகிரிக்குக் குமரன் அளவிலா அருள்செய்த அவ்
அருணகிரியை எண்ணுவோர் எண்ணமதில் குடிபெற
அருணகிரியின் அடி முடி காணாது மாலயன் மருவித்தவிக்காவ்
அருணகிரியை அடியார் வலம் வந்து அவனைத்துதிசெய்துய்வாரே 9
அரு நெருப்பாய்த் திருவருணாசலத்தில் ஆட்கொண்டருள் திருப்
பெருவுடைப்பெருமான் பேரெழிலாள் உண்ணாமுலையம்மையுடன்
வருமடியார் வானவரினும் முன்னின்று வணங்கித்துதிக்க இத்
திருவண்ணாமலையே தான் தானேயெனத் திருவுருக்காட்டியருள்வ்ரே 10
தீயாய்தகித்து நின்று தவறாது வரமறுளும் தயாளன் தன்னை
ஓயாது உள்கித்துதிக்கும் உத்த்மர்தம் உள்ளமதில் எந்நாளும்
தாயானவள் தரும் கருணையினும் மேலாகவருளும் ஈசனை
நாயேன் ஜகன்னாதன் நாளும் எந்நேரமும்
உள்கித்துதிப்பேனே
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment