Thursday, May 9, 2013


பஞ்சபூத்த்தலைவன்



நலங்கள் நாளும் வளமுடன் அருளும் நம்சர்வேசன்               பலப்பல நாகம்பூண்டு வெண்ணீறு மேனிமுழுதும் பூசி                         மலங்கள் மூன்றுமழித்து என்றும் மங்கலம் பெருக                தலங்கள் ஐந்தனுள் பஞ்சபூதங்களாய் நின்றருள்வாரே

அருநெருப்பாய் விரிவானமாய் பரந்த நல்ல                 பெருமண்ணாய் தண்குளிர்ந்த ந்ந்நீராய் மெல்ல                       வரும் தென்றல் காற்றாய் திகழ் எம்பெருமானை எண்ணி            உருகும் அடியேன் ஜெகன்நாதன் வாழ்வு வளமுற திருவருள்வாரே



தில்லையம்பதியிலே நல் உமையோடிணைந்து மிக                 வல்ல நடமாடி பெருந்திருமுறைகள் காத்து நின்று          எல்லையிலாப் பக்திமிகு திருநாளைப்போவார்க்கு மிக                நல்ல காட்சியருளி பரந்த வானமாய் நிற்பதென்னே

எண்ணமெல்லாம் சிவமே என்றுள்கி உனை எந்நாளும்                   வ்ண்ணமிகு உமையம்மை உருகி உவந்து வழிபட அவர்க்கு             கண்ணதிலே பெருவெள்ளம் அருளுடன் காட்டிவிளையாடிய          பண்ணமுதன் ஏகம்பத்தில் மன்னாய் மலர்ந்ததென்னே


திருமால் அடிதேடி வராகமாகி கீழ்ச்செல்ல அப்போது            பெருவயன் முடி நாடிஎழில் அன்னமதில் மேற்செல்ல தப்பாது        வரும் அடியார் உன்புகழ்பாடி கிரிவலம் செல்ல அவர்க்கு எப்போதும்      அருள்காட்டி திருவண்ணாமலையில் தீயாய் திகழ்வதென்னே

ஒளிமிகு கண்ணில் குருதிபெருகி வழியக்கண்டு உருகி               களிறையும் கலங்கவைக்கும் வலிய வேடன் கண்னப்பன்              மிளிர் கொன்றை ஈசனுக்குக்கண்ணை அப்பிய விடம் அவர்   வளியாய்த்திகழும் வளம் நிறை வான்புகழ் காளத்தியே

அன்னை அகிலாண்டேஸ்வரி வண்ணமிகு பேரெழிலாள்            உன்னை நாள்தோரும் நன்னி நாடி வலம் வந்திட என்னையாட்கொண்டஜம்புகேசப்பெருமானே என்றும்              உன்னை நான் நீராய் திருவானைக்காவிலே காண்பதென்னே

தலங்கள் ஐந்தினிலே தலைவன் தேவதேவனை தப்பாது
வலம்வந்து உள்ளுருகி விடாது வழிபடுவோர் நாளும்
நலங்கள் பலப்பலப் பெற்று பார்புகழ பாங்காய் பலகாலும்
மலமற்று வாழ்ந்திடுவார் இது மாறாத ஈசனருளே







No comments:

Post a Comment