பன்னிரு ஜோதி லிங்கம்
ஆதி முதல்ஜோதியான அண்டம் உருவாக்கிய நம்
பாதிமதி சூடும் பரமேசன்
ப்ன்னிரு ஜோதியராய்த்திகழ்வாரே
வேதியர் விரும்பும்
சீர்மிகு சௌராஷ்டிரத்தில் சோமநாதராய்
பதி பசுவைக்காக்கும்
புகழ் ஸ்ரீ சைலத்தில் மல்லிகார்ஜுனராக
நதி சிரமேற்கொண்ட மஹா காளேஸ்வர்ராய் நல் உஜ்ஜயினிலும்
மதி முடியுடை ஒப்பிலா ஓங்காரேஸ்வர்ராக அமலேஸ்வரத்திலும்
பக்தி மிகு
பரலேஸ்வரத்தில் முதல்தலைமை வைத்தியநாதராய்
கதியருளும் கருணாகரன் பீம சங்கர்ராய் டாகின்யத்திலும்
விதியறுக்கும் வல் ராமநாதராய் சேது
ராமேஸ்வரத்திலும்
ஜாதிமல்லி மலர் நிறை
தாருகாவனத்திலே நல் நாகநாதராயும்
ஆதிசிவன் விஸ்வேஸ்வரராய்
வான்புகழ் வாரனாசியிலும்
மதிநிறை கௌதமரிட்த்தில்
திருவுடை த்ரயம்பகேஸ்வர்ராயும்
பாதியுடல் உமையுறையீசன்
கைலாயதில் கேதார்நாதேஸ்வர்ராயும்
மீதியொரு தல்மதில்
கருணதயாள் குஷ்மேஸ்வர்ராக
நதியோடு பாதி மதி ஜடாமுடிசூடி
நாடிவரும் அடியார்க்கு நற்
கதியருளும் அருணகிரீசன்
பன்னிரு ஜோதியராய்த் திகழ்கின்றாரே
பதியீசனை பக்தியுடன் ஜெகன்னாதன்
பணிந்தேத்துவேனே
1.சோமநாதம்
தான் பெற்ற சாபத்தால் ஒளியிழந்த சோம்ன் சந்திரன் மான்மழுஏந்தும் மஹேசன் அருள்வேண்டி
அவரிடம் தான்பெற்ற சாப்ம் நீங்க
மனைவியருடனும் மங்கை ரோகினி மான்விழியாளுடன் வேண்டியுய்ந்த
தலம் ஸ்ரீ சோமநாதம்
விஸ்வேசம்
கங்கைத்தலைக் கொண்ட கைலாய வாசன்
எங்கள் குலம் காக்கும் கருணாகரன் நாளும்
மங்கை விசாலாக்ஷியுடநுறையும் மாமன்ன்ன்
பங்கமில்லா வாழ்வு அடியார் வளமுடன் வாழ
ஓங்கி உயர்ந்த கோபுரங்களுடன் உன்னத நதி
கங்கைக்கரையில் அருள்தரும் அன்னபூரணி
தங்க மங்கையாளுடனுடனும் காலபைரவருடனும்
எங்குமுறை விஸ்வேஸ்வர்ராய் வாரனாசியிலருள்வார்
ராமேஸ்வரம்
பத்து சிரம் கொண்டு பரமன் மீது பெரும் அளவிலா
பக்தி கொண்டு வரங்கள் பலபெற்ற ராவணன் தன்
புத்தியிழந்து சீதையை கவர்ந்த்தினால் ராமனின் வில்
வித்தைக்குயிறையானதால் ராமன் பெற்ற பிரம்ம
ஹத்தி தோஷம் நீங்க சேதுக்கடற்கரையில் சீதை
பக்திமிக்க்கொண்டு கடல் மண்னால் பிடித்த லிங்கத்தை
சுத்திய வாலால் அனுமன் அசைக்க இயலாத ராமநாதனை
எத்திசை மக்களும் ராமேஸ்வரத்தில் வணங்கி
மகிழ்வாரே
No comments:
Post a Comment