Thursday, May 9, 2013


                                                 ஸ்ரீ அகோரமூர்த்தி கவசம்                                                                        வணங்குவோர்க்கு வளமெல்லாம் பெருகிடும்
நினைப்போர்க்கு நெஞ்சமெல்லாம் நிறைந்திடும்
துதிப்போர்க்கு துன்பமெல்லாம் பறந்திடும்
அருள்தரும் அகோரீசன் கவசமிதனை

கரு நிறம் கொண்டவனே கருணை உள்ளவனே
எரி சிகையோனே எங்கள் குலம் காப்பவனே
நாகம் பதிநான்கு மேனியில் அணிபவனே
ஆகம வேதப்பொருள் தானே என்று ஆனவனே
பணிவார் துணையாய் என்றும் உறைபவனே
மணி மாலை என்றும் மகிழ்வாய்ப் புணைபவ்னே          
எண்ணிலாப் படைக்கலன்கள் கைக்கொண்டு
மண்ணில் மருத்துவாசுரனை ஆட்க்கொண்ட அகோரீசா

அகோரசிவன் கவசமிதனை அடாது தினம் சொல்ல
மகோன்னத வாழ்வமையும் மங்கலம் பெருகுமே
கல்வியும் செல்வமும் குறைவிலாது செழித்தோங்கும்
நல்ல மக்களும் அவர்தம் மக்களும் குறைவிலாது வாழ்வர்
உடல் நலம் சிறக்கும் உள்ளச் சலனம் விலகும்
கடல் போல் தானமும் தவமும் தவறாது பெருகும்
ஈசனருட்பார்வை என்றென்றும் கிட்டிடும்
நேசமுடன் அகோரீசனும் அருளைத் தந்திடுவாரே.

அகோர சம்ஹார மூர்த்தியே வருக வருக
ஓகோ என்றுவிளங்கும் ஈசா வருக வருக
மருத்துவனை ஆட்கொணவா மன்னவா வருக வருக
அருள்தரும் அகோரேசா வருக வருக
சூலம் ஏந்திய சுந்தரா வருக வருக
கால காலனே  களிப்புடன் வருக வருக
மணிமாலை பூண்டவா மகிழ்வுடன்  வருக வருக
அணி நாகம் பல அணிந்தவா அன்புடன்  வருக வருக
நடைக்கோலம் கொண்டவா நடமாடி  வருக வருக
படைக்கலம் பல ஏந்தியவா பரிவுடனே  வருக வருக
வானாய் விளங்கும் வல்லபா விரைந்து வருக வருக
மண்ணாய் மலர்ந்த மன்னா வருக வருக
காற்றாய்க் கலந்த கோவே வருக வருக
நீராய் நின்ற நிமலா வருக வருக
அணலாய்த் தகிக்கும் அண்ணலே வருக வருக
பூதங்கள் ஐந்தான ஐயனே வருக வருக
திசைகள் எட்டான தலைவா வருக வருக
பன்னிரு ஜோதியனே பரமா வருக வருக
தலைவா வருக முதல்வா வருக வருக
முன்னவா வருக மூவருமானாய் வருக வருக

வருக வருக அகோரீசா வருக
வருக அருள் தந்திட வருக
வருக வருக வெண்காட்டீசா வருக
வருக வருக் வண்பகை அழித்திட வருக
வருக வருக மருத்துவ சம்ஹாரா வருக
வருக வருக மங்கலங்கள் தந்திடவருக
வருக வருக தென் திசை நோக்கினாய் வருக
வருக வருக துன்பம் துடைத்திட வருக
வருக வருக எரிசிகையோனே வருக
வருக வருக் பரிவுடனே வருக
வருக வருக எண்கரமுடையாய் வருக
வருக வருக எங்கள் குலதெய்வமே வருக
வ்ருக வருக வளை எயிற்றாய் வருக
வருக வருக வளமளிப்பாய் வருக
வருக வருக தீராப்பகை அழித்திட வருக
வருக வருக ஆராநோய்கள் தீர்த்திட வருக
வருக வருக சந்த்தியினைக்காத்திட வருக
வருக வருக வம்சம் தழைத்திட் வருக்
வருக வருக நல் உறவை வளர்த்திட வருக
வருக வருக உற்றார் நலம் பெருக்கிட வருக
வருக வருக நாளும் சிவனருள் தந்திட வருக
வருக வருக அவன் தாள்  நானும் பணிந்திட வருக

என்னுயிர்த் தலைவன் எல்லோரையும் காக்க
ஏகாந்தமூர்த்தி எந்நாளும் காக்க
மாமலைவாசன் மக்களைக் காக்க
அணையா ஜோதி எப்போதும் காக்க
மகா தேவன் மகிழ்வுடன் காக்க
சங்கரனார் சந்ததியைக் காக்க
மஹாதேவன் மக்களைக்காக்க
சிவ சங்கரன் சிரசினைக் காக்க
உளகாளும் ஈசன் உச்சியைக் காக்க
நீரிலங்கு நெற்றியை நெற்றிக்கண்ணீசன் காக்க
புருஷர் சீலன் புருவமிரண்டும் காக்க
முக்கண்ணீசன் கண்கள் இரண்டும் காக்க
செவியிரண்டும் தோடுடைய செவியன் காக்க
நாத வேதத்தலைவன் நாசியைக்காக்க
தவசீலன் தாடையைக்காக்க
கன்னமிரண்டும் கரு நிறத்தார் காக்க
கற்பூர ஜோதி பற்களைக் காக்க
நாக நாதன் நாவினைக் காக்க
குலதெய்வம் குரல்வளைக் காக்க
அழ்கிய ஈசன் கழுத்தினைக் காக்க
மணிமாலை மார்பன் மார்பினைக் காக்க
தென்னாடுடைய சிவன் தோளினைக் காக்க
கஜமுகன் தந்தை புஜங்களைக் காக்க
முழுமுதற் கடவுள் முழங்கையைக் காக்க
அன்பிற்கினியன் முன்கைக் காக்க
விரல்கள் பத்தும் வீரசிவன் காக்க
நால்வேதத்தலைவன் நாபியைக் காக்க
எயிற்றழகன் வயிற்றினைக் காக்க
ஆணழகன் ஆண் பெண் குறிகள் காக்க
பரமசிவன் பிடரியினைக் காக்க
முருகன் தந்தை முதுகினைக் காக்க
பரமசிவன் பழு முப்பத்திரண்டும் காக்க
உடுக்கை உடையோன் இடுப்பினைக் காக்க
தடையறுப்போன் தொடைகளிரண்டும் காக்க
முக்கண்ணழகன் முழங்கால் காக்க
கால்கள் இரண்டும் கலியுகவரதன் காக்க
பாபவினாசன் பாதங்கள் காக்க
இமயம் வாழ்வோன் இதயம் காக்க
நாகபூஷன் நரம்புகள் காக்க
பரம்பொருள் இரத்த்த்தினைக் காக்க
அகிலாண்டேசன் அனைத்துருப்பும் காக்க
பிநாகபாணி பிள்ளைகளைக் காக்க
பேரன் பேத்தி கங்காதரன் காக்க
நீலகண்டன் நித்தமும் காக்க
கால காலன் காலையில் காக்க
மஹேஸ்வரன் மதியம் காக்க
மணிமாலை மார்பமன் மாலையில் காக்க
பன்னிரு ஜோதி பகலினில் காக்க
கருநிற ஈசன் இரவினில் காக்க
முக்கண்ணன் முன்னும் பின்னும் காக்க
வலமும் இடமும் வள்ளல் பெருமான் காக்க
மேலும் கீழும் ஆலகாலமுண்டான் காக்க
என்னாளும் எப்போதும் எங்கேயும் அகோரசிவன் காக்க

அகோரேசன் கவசமோதும் அடியார் கண்டு
மஹோன்னத மன்னனும் அடி பணிவான்
நடைக்கோலன் துணையிருப்போரை
இடர்கள் என்றும் அணுகாது ஓடிடுமே
பாசமோடகோரீசனைப்பணிந்தேத்துவாரை
பாசக்கயிற்றோன் என்னாளும் அணுகான்
எண்னற்றக்கொடு நோய்கள் முக் கண்ணழகன்                அருள் பெற்றோரை நெருங்காதொழியுமே 
பேய்களும் பூதங்களும் நாய்களும் நரிகளும்
எல்லா துஷ்ட விலங்குகளும்
பாம்பு தேள் பூரான் களும் சிங்கம் புலியும்
நல்லவையாய் மாறி விலகி ஓடிடுமே
அகோரீசா மஹாதேவா வாழ்க வாழ்க
சர்வேசா சங்கரா வாழ்க வாழ்க
பரமேசா பாப வினாசா வாழ்க வாழ்க
வெண்காட்டீசா வேதநாயகா வாழ்க வாழ்க
சிவதாசன் உன்னடிமை ஜெகன்நாதன் பாடிய அகோர
சிவன் கவசமிதனை நாளும் விடாது ஓதுவார்மீது
மலை மகள் மகன் மீது கருணை கொண்டருள்வாள்
கலைமகள் கலைகள் அறுபத்து நான்கும் அருள்வாள்
அலை மகள் அன்புடன் செல்வமனைத்தும் அருள்வாள்
வானோரும் விண்ணோரும் மகிழ்ந்து வாழ்த்துவர்
திசை மன்னர் எண்மரும் இசைவுடன் வருவர்
பஞ்ச பூதங்களும் நெஞ்சம் நிறைய வாழ்த்துவர்
மாநிலத்தோரெல்லாம் மகிழ்வுடன் கொண்டாடுவர்
பஞ்சலிங்கங்களும் பரிவுடன் அருள்வர்
பன்னிரு ஜோதியரும் எண்ணிலா நன்மை தருவர்                அஷ்ட லிங்கங்களும் கஷ்டமெல்லாம் போக்கிடுவர்
ஐங்கரன் அன்புடன் நாளும் முன்னிற்பார்
ஆறுமுகன் அன்போடு ஓடிவந்து ஆறுதலளிப்பார்
ஆதி சக்தி அன்னை பாசமுடன் அருள்வாள்
சர்வேஸ்வரன் சகல நன்மைகளும் அருள்வார்
எல்லாதெய்வங்களும் பல்லாயிரம் நலமருள்வர்
அகோரீசன் அனைத்தும் ஆக்கிக்காத்து அருள்வாரே
சரணம் சரணம் அகோரீசா சரணம்
சரனம் சரணம் சர்வேசா சரணம்
சரணம் சரணம் என்னுயிரே சரணம்

ஓம் நமச்சிவாய
திருச்சிற்றம்பலம்







பன்னிரு ஜோதி லிங்கம்



தி முதல்ஜோதியான அண்டம் உருவாக்கிய நம்
பாதிமதி சூடும் பரமேசன் ப்ன்னிரு ஜோதியராய்த்திகழ்வாரே
வேதியர் விரும்பும் சீர்மிகு சௌராஷ்டிரத்தில் சோமநாதராய்
பதி பசுவைக்காக்கும் புகழ் ஸ்ரீ சைலத்தில் மல்லிகார்ஜுனராக
நதி சிரமேற்கொண்ட மஹா காளேஸ்வர்ராய் நல் உஜ்ஜயினிலும்
மதி முடியுடை ஒப்பிலா ஓங்காரேஸ்வர்ராக அமலேஸ்வரத்திலும்
பக்தி மிகு பரலேஸ்வரத்தில் முதல்தலைமை வைத்தியநாதராய்
கதியருளும் கருணாகரன் பீம சங்கர்ராய் டாகின்யத்திலும்
விதியறுக்கும் வல் ராமநாதராய் சேது ராமேஸ்வரத்திலும்
ஜாதிமல்லி மலர் நிறை தாருகாவனத்திலே நல் நாகநாதராயும்
ஆதிசிவன் விஸ்வேஸ்வரராய் வான்புகழ் வாரனாசியிலும்
மதிநிறை கௌதமரிட்த்தில் திருவுடை த்ரயம்பகேஸ்வர்ராயும்
பாதியுடல் உமையுறையீசன் கைலாயதில் கேதார்நாதேஸ்வர்ராயும்
மீதியொரு தல்மதில் கருணதயாள் குஷ்மேஸ்வர்ராக
நதியோடு பாதி மதி ஜடாமுடிசூடி நாடிவரும் அடியார்க்கு நற்
கதியருளும் அருணகிரீசன் பன்னிரு ஜோதியராய்த் திகழ்கின்றாரே
பதியீசனை பக்தியுடன் ஜெகன்னாதன் பணிந்தேத்துவேனே












1.சோமநாதம்

தான் பெற்ற சாபத்தால் ஒளியிழந்த சோம்ன் சந்திரன்             மான்மழுஏந்தும் மஹேசன் அருள்வேண்டி அவரிடம்            தான்பெற்ற சாப்ம் நீங்க மனைவியருடனும்  மங்கை ரோகினி               மான்விழியாளுடன் வேண்டியுய்ந்த தலம் ஸ்ரீ சோமநாதம்

விஸ்வேசம்


கங்கைத்தலைக் கொண்ட கைலாய வாசன்
எங்கள் குலம் காக்கும் கருணாகரன் நாளும்
மங்கை விசாலாக்ஷியுடநுறையும் மாமன்ன்ன்
பங்கமில்லா வாழ்வு அடியார் வளமுடன் வாழ
ஓங்கி உயர்ந்த கோபுரங்களுடன் உன்னத நதி
கங்கைக்கரையில் அருள்தரும் அன்னபூரணி
தங்க மங்கையாளுடனுடனும் காலபைரவருடனும்
எங்குமுறை விஸ்வேஸ்வர்ராய் வாரனாசியிலருள்வார்

ராமேஸ்வரம்



பத்து சிரம் கொண்டு பரமன் மீது பெரும் அளவிலா
பக்தி கொண்டு வரங்கள் பலபெற்ற ராவணன் தன்
புத்தியிழந்து சீதையை கவர்ந்த்தினால் ராமனின் வில்
வித்தைக்குயிறையானதால் ராமன் பெற்ற பிரம்ம
ஹத்தி தோஷம் நீங்க சேதுக்கடற்கரையில் சீதை
பக்திமிக்க்கொண்டு கடல் மண்னால் பிடித்த லிங்கத்தை
சுத்திய வாலால் அனுமன் அசைக்க இயலாத ராமநாதனை
எத்திசை மக்களும் ராமேஸ்வரத்தில் வணங்கி மகிழ்வாரே






பஞ்சபூத்த்தலைவன்



நலங்கள் நாளும் வளமுடன் அருளும் நம்சர்வேசன்               பலப்பல நாகம்பூண்டு வெண்ணீறு மேனிமுழுதும் பூசி                         மலங்கள் மூன்றுமழித்து என்றும் மங்கலம் பெருக                தலங்கள் ஐந்தனுள் பஞ்சபூதங்களாய் நின்றருள்வாரே

அருநெருப்பாய் விரிவானமாய் பரந்த நல்ல                 பெருமண்ணாய் தண்குளிர்ந்த ந்ந்நீராய் மெல்ல                       வரும் தென்றல் காற்றாய் திகழ் எம்பெருமானை எண்ணி            உருகும் அடியேன் ஜெகன்நாதன் வாழ்வு வளமுற திருவருள்வாரே



தில்லையம்பதியிலே நல் உமையோடிணைந்து மிக                 வல்ல நடமாடி பெருந்திருமுறைகள் காத்து நின்று          எல்லையிலாப் பக்திமிகு திருநாளைப்போவார்க்கு மிக                நல்ல காட்சியருளி பரந்த வானமாய் நிற்பதென்னே

எண்ணமெல்லாம் சிவமே என்றுள்கி உனை எந்நாளும்                   வ்ண்ணமிகு உமையம்மை உருகி உவந்து வழிபட அவர்க்கு             கண்ணதிலே பெருவெள்ளம் அருளுடன் காட்டிவிளையாடிய          பண்ணமுதன் ஏகம்பத்தில் மன்னாய் மலர்ந்ததென்னே


திருமால் அடிதேடி வராகமாகி கீழ்ச்செல்ல அப்போது            பெருவயன் முடி நாடிஎழில் அன்னமதில் மேற்செல்ல தப்பாது        வரும் அடியார் உன்புகழ்பாடி கிரிவலம் செல்ல அவர்க்கு எப்போதும்      அருள்காட்டி திருவண்ணாமலையில் தீயாய் திகழ்வதென்னே

ஒளிமிகு கண்ணில் குருதிபெருகி வழியக்கண்டு உருகி               களிறையும் கலங்கவைக்கும் வலிய வேடன் கண்னப்பன்              மிளிர் கொன்றை ஈசனுக்குக்கண்ணை அப்பிய விடம் அவர்   வளியாய்த்திகழும் வளம் நிறை வான்புகழ் காளத்தியே

அன்னை அகிலாண்டேஸ்வரி வண்ணமிகு பேரெழிலாள்            உன்னை நாள்தோரும் நன்னி நாடி வலம் வந்திட என்னையாட்கொண்டஜம்புகேசப்பெருமானே என்றும்              உன்னை நான் நீராய் திருவானைக்காவிலே காண்பதென்னே

தலங்கள் ஐந்தினிலே தலைவன் தேவதேவனை தப்பாது
வலம்வந்து உள்ளுருகி விடாது வழிபடுவோர் நாளும்
நலங்கள் பலப்பலப் பெற்று பார்புகழ பாங்காய் பலகாலும்
மலமற்று வாழ்ந்திடுவார் இது மாறாத ஈசனருளே