Thursday, June 27, 2024

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 21 

 ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                        

வியாழன்,,ஜூன் 27  2024

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 44 மற்றும்   45 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்

இந்த இரண்டு ஸ்லோகங்களிலும் அம்பாளின் நிர்குண வடிவங்கள் விளக்கப் பட்டுள்ளன அம்பாளின் தனித்துவத்தையும்,இயல்பையும் சில பெயர்களால் மட்டுமே விளக்கிவிட முடியாது .எனினும் இயன்றவரை அவற்றை விளக்க முற்படபட்டுள்ளது

44) னிர்லேபா, னிர்மலா, னித்யா, னிராகாரா, னிராகுலா |
னிர்குணா, னிஷ்களா, ஸாந்தா, னிஷ்காமா, னிருபப்லவா || 44 ||

லேபா--நிர்லேபா

களங்கம்--களங்கமற்றவள்

மல—நிர்மலா

அழுக்கு—தூய்மையானவள்

நித்யா

நிரந்தரமானவள்

நிராகாரா

வெளித்தோற்றமிலாது அரூபமானவள்

நிராகுலா

குழப்பமில்லாது தெளிவானவள்

நிர்குணா

மூன்று குணங்களும் அப்பார்ப் பட்டவள்

நிஷ்கலா

பூரணத்தின் தத்துவமானவள்

ஷாந்தா

சாந்தம் பொருந்தியவள்

நிஷ்காமா

இச்சைகளின் பிடிக்கு அப்பார்ப் பட்டவள்

நிருபப்லவா

அழிவற்ற தன்மையுடையவள்

 

 

அம்பாளின் நிர்குண ஸ்வ்ரூபங்கள் இந்த ஸ்லோகத்தில் அழகாக விளக்கப் பட்டுள்ளன.அம்பாள் களங்கமில்லாத தூய்மையான வளாகவும்,அழிவற்ற நிரந்தரமானவளாகவும்,புறத் தோற்ற மில்லாது அரூபமானவளாகவும்,குழப்பமில்லாத தெளிவான வளாகவும்,சத்வ,ராஜ,தாமஸ குணங்களுக்கு அப்பார்ப் பட்ட வளாகவும்,பூரணத்தின் தத்துவமாகவும்,சாந்தமேயான வடிவினளாகவும், இச்சையின் பிடிகளுக்கு அப்பார்ப் பட்டவளாகவும்,அழிவற்றதன்மையோடு நிரந்தரமான வளாகவும் உள்ளாள்

45)
னித்யமுக்தா, னிர்விகாரா, னிஷ்ப்ரபஞ்சா, னிராஸரயா |
னித்யஸுத்தா, னித்யபுத்தா, னிரவத்யா, னிரந்தரா || 45 ||

நித்ய

என்றென்றும்

முக்தா

நிரந்தரமாக முக்தியில் நிலைத் திருப்பவள்

நிர்விகாரா

பேதமற்றவள் மாறுதலுக் குட்படாதவள்

நிஷ்ப்ரபஞ்சா

ப்ரபஞ்சத்திற்கு அப்பார்ப் பட்டவள்

நிராஷரயா

சார்பின்றி ஸ்வாதீன சுயம்புவானவள்

நித்ய

என்றென்றும்

சுத்தா

அப்பழுக்கற்றவள்

நித்யபுத்தா

என்றென்றும் அறிவாகி ஞானியானவள்

நிர

அற்றவள்

அவத்யா

குறைபாடுகள்

நிரந்தரா

எங்கும் எக்காலமும் நிறைந்திருப்பவள்

அம்பாள் என்றென்றும் நிரந்தரமான முக்தியில் நிலைத்திருப் பவள்,பேதமில்லாது எந்தவித மாறுதலுக்கும் உட்படாதவள் இந்த ப்ரபஞ்சத்திற்கப் பார்ப் பட்டவள்,எந்தவித சார்புமின்றி சுயம்புவானவள்,என்றென்றும் அப்பழுக்கற்ற தூய்மையானவள்,என்றென்றும் அறிவின் உருவாகி ஞானியாகி இருப்பவள்எந்த வித குறை பாடுகளும் அற்றவள் காலமும் இடமும் கடந்து எங்கும் எக்காலமும் நிறைந்திருப்பவள்

இன்று இந்த இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

வியாழன்,, ஜூன்,27,, 2024

 

 


Wednesday, June 26, 2024

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 20

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                        

புதன்,,ஜூன் 26  2024

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 42 மற்றும்   43 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்

இந்த ஸ்லோகங்களில் அம்பாளின் பக்தானுக்ரஹங்கள் விளக்கப்படுகின்றன.இறுதியில் அம்பாளின் நிற்குண உபாசனையும் சொல்லப்படுகின்றது

42) பக்திப்ரியா, பக்திகம்யா, பக்திவஸ்யா, பயாபஹா |
ஸாம்பவீ, ஸாரதாராத்யா, ஸர்வாணீ, ஸர்மதாயினீ || 42 ||
 

பக்திப்ரியா

மெய்யான பக்தியால் சந்தோஷிப்பவள்

பக்தி

பரிபூரண பக்தியால்

கம்யா

உணரப் படக்கூடியவள்

பக்தி

களங்கமில்லா தூய பக்தியால்

வஸ்யா

கட்டுப் படுபவள்

பய

பயத்தை

ஆபஹா

களைபவள்

ஷாம்பவீ

ஷம்புவான சிவனின் துணைவியானவள்

ஷாரதா

சரஸ்வதி, இலையுதிர் காலம், நவராத்ரி

ஆராத்யா

ஆராதனைக்கும் பூஜைக்கும் உகந்தவள்

ஷர்வா

சிவனின் ப்ரிதிவி என்னும் பூமி வடிவம்

ஷர்வாணீ

சிவனின் பத்னியானவள்

ஷர்ம

இன்பம்,மகிழ்ச்சி

தாயினி

அளிப்பவள்

லலிதாம்பாள் உண்மையான பக்தியால் மகிழ்ச்சி அடைபவள்.பரிபூரண பக்தியால் உண்ரப்படக் கூடியவள்.அந்த பக்திக்கே கட்டுப்படக் கூடியவள்.பக்தர்களின் பயத்தைப் போக்கிக் களைபவள்.

சம்புவாகிய சிவபெருமானின் துணைவியானவள். சாரதா எனும் கலைமகளால் துதிக்கப் படுபவள்.நவராத்ரியின் ஆராதனைக்கும் பூஜைக்கும் உகந்தவள் சர்வா என்ற பூமி வடிவான சிவனின் பத்தினியானவள்.பக்தர்களுக்கு இன்பமும் ,மகிழ்ச்சியும் அளிப்பவள்


43) ஸாங்கரீ, ஸ்ரீகரீ, ஸாத்வீ, ஸரச்சந்த்ரனிபானனா |
ஸாதோதரீ, ஸாந்திமதீ, னிராதாரா, னிரஞ்ஜனா || 43 ||

ஷாங்கரீ

இறைவனின் சிவரூபமான சங்கரரின் பத்தினி

ஸ்ரீ

தனம்,செல்வம்

கரீ

காரணமானவள்

சாத்வீ

நற்பண்புகளின் லக்ஷணமானவள்

ஷரத்

இலையுதிர்காலம்

சந்திர

சந்திரனின்

நிப

சாயல் ஒத்த

ஆனன

முகம்

ஷதோதரீ

மெல்லிய இடையை உடயவள்

ஷாந்திமதி

சாந்தம்,அன்பையே வடிவமானவள்

நிராதாரா

பற்று மற்றும் பிடிப்பற்றவள்

நிரஞ்சனா

புலங்களின் பேதங்களுக்கு அப்பார்ப்பட்டவள்

 

 

சர்வேஸ்வரரின் ஸ்வரூபமான சங்கரரின் பத்தினி யானவள்.எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமானவள்.நற்பண்புகளின் இலக்கணமானவள்.

ஷரத் எனும் இலை உதிர் கால சந்திரனை ஒத்த முக சோபையும் ஒளியும் பொருந்தியவள்.மெல்லிய இடையை உடையவள்.சாந்தம்,அன்புமே வடிவானவள்,எதிலும் பற்று அல்லது பிடிப்பு அற்றவள்.ஐம்புலங்களுக்கும்,பேதங்களுக்கும் அப்பார்ப் பட்டவள்

இன்று இந்த இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

புதன்,, ஜூன்,26,, 2024