Wednesday, December 5, 2012


ஸ்ரீ ருத்ரம்
பகுதி  8
விஜ்யம் தனு: கபர்தினோ விசல்யோ பாணவாஃம் உத:
அநேசந்நஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி
  சடை தரித்த பரமேஸ்வர்ருடைய வில் நாணற்றதாகட்டும் அவரது அம்பராத்துணியும் பாணமற்றதாகட்டும்.அவரது பாணங்கள் துன்புறுத்தும் சக்தியை இழந்துவிடட்டும்.அவரது கத்தியின் உறை விலகாமல் இருக்கட்டும்
யாதே ஹேதிர் மீடுஷ்டும ஹஸ்தே பபூவ தே தனூ:
தயாஸ்மான் விஸ்வ தஸ்த்வ மயக்ஷ்மயா பரிப்புஜ
  பக்தர்களின் இஷ்டங்களை அளிப்போரில் சிறந்தவரே உங்களுடைய கையில் உள்ள நோய் செய்யாத ஆயுதங்களால் எங்களை எங்கும் எப்போதும் என்றும் காத்தருள்வீர்களாக           [1   13]

Monday, December 3, 2012


இதய நோயின் முக்கியமான அறிகுறிகள்

இன்றைய நவீன உலகில் மக்களுக்கு அதிகமான பாதிப்புகளையும் மரணத்தையும் உண்டாக்குகின்ற நோய்களில்
முன்னணியில் இருப்பது இருதய நோயாகும் .இதற்கு முக்கிய காரணம் இருதய நோயின் அறிகுறிகள் பற்றி மக்களின் அறியாமையேயாகும் .பல நேரங்களில் இருதய
நோயின் அறிகுறிகளை அலட்சியப்படுத்துவதனாலேயே மரனம்
ஏற்படுகின்றது. என்வே அனைவரும் இருதய நோயின் அறிகுறிகள் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும்

1 நெஞ்சு வலி
   இருதய நோயின் ப்ரதான அறிகுறி நெஞ்சு வலியாகும் இது மார்பின் நடுப்பகுதியிலோ அல்லது சற்று இடப்புறமாகவோ இருக்கும் .நெஞ்சின்மீது ஒரு பாராங்கல்லைத் தூக்கி வைத்ததுபோல் இருக்கும். சில நேரங்களில் எரிச்சல் போலவும் இருக்கலாம் பலருக்கு நெஞ்சு வலி ஒரு சிறிய நெருடல் (DISCOMFORT) போல இருக்கும்.
   இந்த வலி இடது தோள் இடது கை வயிற்றின் மேல் பகுதி
தாடை சில நேரங்களில் வலப்புற மார்பிலும் உணரப்படும். .பொதுவாக இருதய வலி STRAIN மூலமாகவும் உடல் வருந்த வேல செய்வதாலும் உண்டாகும். ஓய்வெடுத்தால் உடன் வலி நின்றுவிடும்.
   பல நேரங்களில் இந்த வலி வய்ற்றுக் கோளாரினாலோ அல்லது அஜீரணத்தினாலோ உண்டானதென தவறாக எண்ணப்பட்டு உயிரிழப்புக்கு ஆளாக நேரிடுகிறது. என்வே நெஞ்சு வலியை அல்ட்சியப்படுத்தாதீர்கள்

2 மூச்சுத்திணறல்
   இதுவும் ஒரு முக்கியமான அறிகுறியாகும். மூச்சுத்திணறல் சுவாச நோய்கள் காரணமாக வரலாம் அல்லது இருதய நோய் காரணமாகவும் வரலாம்.அவைகளை சரியாக வேறுபடுத்தி அறிந்தால்தான் முறையான் சிக்ச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற முடியும

இருமல்

   இருமல் ஒரு சாதாரண அறிகுறியாகத் தோன்றினாலும் இதுவும் ஒரு முக்கியமான அறிகுறியாகும். பல காரணங்களாலும் நோய்களாலும் இருமல் வரலாம். இருதய நோய் உள்ளவர்களுக்கு  
நுறையீரலில் நீர் கட்டிக்கொள்ளுவதால் இருமலும் மூச்சுத்திணரலும் உண்டாகின்றன

மயக்கம்
   மயக்கம் தலைசுற்றல் போன்றவையும் நினைவிழத்தலும் சாதாரணமாக வரக்கூடும்

சோர்வு FATIGUE
   காரணமில்லாத உடர்சோர்வு உண்டாகும் இது முக்கியமான உருப்புகளுக்கு இரத்த ஓட்டம் தடைபடுவதாலோ குறைவதாலோ உண்டாகின்றது.
வாந்தி பிரட்டல் (NAUSEA/ VOMITTING
)
   வாந்தி அல்லது வயிற்று பிரட்டல் வயிறு உப்பல் போன்றவை நீர் தங்குதலின் காரணமாக உண்டாகும்

மற்ற இடங்களில் வலி
   முன்பே சொன்னது போல நடு நெஞ்சிலோ இடப்புற நெஞ்சிலோ மட்டுமல்லாது வலி மார்பின் வலப்புறம் நடு வயிற்றின் மேல் பகுதி இடது தோள் இடது மேற்கை இடதுபுற
முதுகு தாடைகள் ஆகிய இடங்களிலும் வரலாம்

படபடப்பு PALPITATION
   இருதய நோய் உள்ளவர்களுக்கு படபடப்பு இதயம் அதிகமாகவும் வேகமாகவும் துடிப்பதனால் ஏற்படுகின்றது படபடப்
பும் மூச்சிறைப்பும் சேர்ந்து அதிகமான சுக்வீனத்தையும் தளற்சியையும் உண்டாக்குகின்றன

வியர்வை
   அளவுக்கதிகமான வியர்வையும் இதய நோயின் அறிகுறியாகும் குளிர் காலத்தில்கூட அவர்களுகு அதிகமான வியர்வை இருக்கும்.மாரடைப்பு HEART ATTACK வந்தவர்களுக்கு உடம்பு குளித்த்துபோல் வியர்த்திருக்கும்

உடல் தளர்வு WEAKNESS
   இதய நோய் உள்ளவர்களின் உடல்  நளுக்கு நாள் மெலிந்தும் தளர்ந்தும் போய்விடும். முகம் பொலிவிழந்து காணப்படும். வயதான தோற்றத்தைக் கொடுக்கும்

வீக்கம் SWELLING

   பாதம் கணுக்கால் கல்கள் முகம் வயிறு ஆகிய இடங்களில் வீக்கம் ஆணப்படும்.இதன் காரணமாகவே அதிகமான சோர்வு தளர்ச்சி பசியின்மை ஆகியவை உண்டாகின்றன

     நான் மேற்குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் இதய நோய்க்கான அறிகுற்கள் என்றாலும் வேறு பல நிலைகளிலும் நோய்களிலும் இவைகள் தோன்றலாம்
    உதாரணமாக நடு வயிற்றின் மேல் பகுதியில் குடல் புண்
(ULCER) காரணமாக வலி வரலாம்.இதய நோயின் காரணமாகவும் அங்கு வலி வரலாம்.அவ்ற்றுள் உண்மையான காரணத்தை அறிந்து முறையான மருத்துவம் செய்யவேண்டும்
    இங்கே ஒரு முக்கியமான செய்தியை சொல்லவேண்டும்
மேல் வயிற்றிலே வலி வரும்போது இது வாய்வு வலிதான் என்று நினைப்பது தவறாகும் ஏன் எனில் வயிற்று வலியை இதயவலி என்று நினைத்து இதயத்துக்கு மருத்துவம் செய்தால் தவறில்லை.ஆனால் இருதய வலியை வயிற்று வலி என்று எண்ணி இதயத்துக்கு வைத்தியம் செய்யாவிட்டால் உயிரையே இழக்க நேரிடலாம் எனவே
   IT IS BETTER TO ERR ON THE WRONG SIDE
தப்பை தப்பாக செய்தால் தப்பில்லை

இந்த இதய நோயின் குரிகளை மறவாமல் வைதிருங்கள்






ஸ்ரீ ருத்ரம்
பகுதி  7
நமோ அஸ்து நீலக்ரீவாய சஹஸ்ராக்ஷாய மீடுஷே
அதோ யே அஸ்ய சத்வானோஃஹம் தேப்யோஃகரந் நம:
  நீலக் கண்ட்த்தை உடையவரும் ஆயிரம் கண்களைக்கொண்டவரும் வேண்டுவோர்க்கு வேண்டுவதை அளிப்பவருமான பரமேஸ்வரை வணங்குகிறேன்
மேலும் அவரது பிரதம கணங்களான அடியவர்களையும் வணங்குகிறேன்.
ப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ ராத்னியோர் ஜ்யாம்
யாச்ச தே ஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப
  பகவானே உங்களுடைய வில்லின் இரண்டு நுணிகளிலும் பூட்டியுள்ள நாண்களை அவிழ்த்து விடுங்கள் உங்களுடைய கையில் உள்ள  பாணங்களை அம்பாராத்துணியில் வைத்து விடுங்கள்      
அவத்த்ய தனுஷ்வ சஹஸ்ராக்ஷ சதேஷூதே
நீசிர்ய சல்யானாம் முகா சிவோ ந: சுமனா பவ
  கணக்கற்ற கண்களை உடையவரே பல அம்பராத்துணிகளை உடையவரே நீங்கள் தங்கள் வில்லின் நாணைத்தளர்த்திவிட்டு அம்புகளின் முனையை கூர் மழுங்கச்செய்து எங்களுக்கு மங்கள வடிவினராகவும் நல் மனதுடையவராகவும் ஆகவேண்டும்               [1   11]

தினம் ஒரு திருமுறை   6
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்விலா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வ்ஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவற்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

                        அபிராமி அந்தாதி


இன்றைய ஸ்லோகம்   6
பூத் நாத சதாந்ந்தா சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
ஸ்வாமியே சரணம் ஐயப்பா

     ஸ்ரீ தர்ம சாஸ்தா ஸ்தோத்ரம்

Saturday, December 1, 2012


தினம் ஒரு திருமுறை   5
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒரு கைமுகன் த்ம்பியே
நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கை தொழுவேன் நான்

      திருமுருகாற்றுப்படை  நக்கீர்ர்

தினம் ஒரு ஸ்லோகம்   5

கணாணாம் த்வா கணபத்ஹ்ம் ஹவா மஹே
கவின் கவினா முபவச்ர வஸ்த்ம்ம்
ஜேஷ்ட ராஜாம் ப்ரம்ணாம் ப்ரம்ண்ஸ்பத
ஆன ஸ்ருண்வன்னூதிபி: சீதசாதனம்
மஹா கணபதியே நமஹ


Friday, November 30, 2012


ஸ்ரீ ருத்ரம்
பகுதி   5
யாமிஷும் கிரிஷந்த ஹஸ்தே பிபர்ஷ்ய ஸ்தவே
சிவாம் க்ரித்ரதாம் குருமா ஹிம்ஹ்சீ புருஷஞ்சகத்
  கயிலை மலியிலிருந்துகொண்டு உலகிற்கு இன்பத்தைக் காட்டுபவ்ரே.கயிலைமலையிலிருந்த்கொண்டு சரணடைந்தோரை ரக்ஷிப்பவரே பாபிகள் மேல் பிரயோகிப்பத்ற்காக தங்கள் கையிலுள்ள பாணத்தை சாந்தமாக்குங்கள் அதைக்கொண்டு மக்களையும் உலகத்தையும் துன்புறச்செய்ய வேண்டாம்
சிவேன வசசா த்வா கிரி சாச்சா வதாமசி
யதா ந: சர்வம் இஜ்ஜக தய்க்ஷ்மம் சுமனா அஸத்து
  கயிலை மலையில் உறைபவரே தங்களை அடைவதற்கு மங்களகரமான ஸ்துதி வசனகளால் போற்றுகிறோம்.எங்களைச் சார்ந்த உறவினர்களும் ஆவின்ங்களும் நோயற்றவைகளாகவும் பரஸ்பரம் நேசம் மிகுந்தவைகளாகவும் வாழ அருள் புரிய வேண்டுகிறோம
அத்யவோச த்தி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக்
அஹிம்ச ஸ்ர்வான் ஜம்பயன்த் ஸ்ர்வாச்ச யாது தான்யா:
  அனைத்துலகிற்கும் முதல்வரும் தேவர்களின் தெய்வமும் பிறவிப்பிணிக்கு வைத்தியரும் பக்தர்களின் குறைகளை மறந்து குணத்தைக்கொண்டாடுபவருமான பரமேஸ்வரன் பாம்பு முதலான எல்லா துஷ்ட ஜந்துக்களையும் பேய் பிசாசு போன்ற துஷ்ட அரக்கர்களையும் அழித்து எங்களைக்காக்காட்டும்  [1  .6]
 


தினம் ஒரு திருமுறை   4
சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக்கை தொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்சினும்
நற்றுணையாவது நாதன் நாம்ம் நமசிவாயவே
       நமசிவாயப்பத்து  திருநாவுக்கரசர்

தினம் ஒரு ஸ்லோகம்   4
ஷடான்னம் சந்தன லிப்தகாத்ரம்
மஹோரசம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஸ்ய சுனும் சூரலோக நாதம்
ப்ரம்மண்ய தேவம் சரனம் ப்ரபத்யே
            ஸ்ரீ சுப்ரம்மண்யஸ்வமி ஸ்தோத்ரம்