Wednesday, June 22, 2016




                        ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கத்தின்   ஏழாவது ஸ்லோகம்


மஹாம்போதிதீரேமஹாபாபசோரே
முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்யசைலே
குஹாயாம்வஸந்தம் ஸ்வபாஸாலஸந்தம்
ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹும்தம் (7)
.
( ஸ்ரீ ஆதிஸங்கரர் )
கரையாத பாவம் கரையும்
பெரிதான நீலக்கடலோரம் கொடுமையான பாவங்களையும் குறைகளையும் போக்கிட புகழ் மலிந்தசித்தர்கள் உறைகின்ற செந்திலோனின் திருத்தலமதில் ஒளிமிகு வடிவுடைய வேலவன் உயிருள் உயிரான பாலகன் தன் பொன்னிற ஒளிமிகு பாதங்கள் பற்றி உய்வோமே
நீலக்கடலோரம் நலிந்தோர் பாவம் போக்கும் புகழ்மலிந்த                                                                                சீலமிகுத்திருசித்தர்களுறைகந்தகிரிதனில்எல்லையிலா                                                    வேலவன்ஒளிமிகுவடிவுறுஎழிற்கோலன்உயிருள்உயிரான 
\                                                                     பாலகன்தன் கனகஒளித் திருத்தாள் பற்றியுய்வோமே 7

( ஜகன்நாதன் )

Friday, June 10, 2016

சிவா குடும்ப அந்தாதி
ஸ்ரீ சிவகுடும்பம்
திருவிளையாடல்கள் பலகாட்டி திருவருளும் தில்லைநடராஜன்
பெருவழகுடன் பவம்காக்கபரமனுடன்பரிவோடாடும்பரமேஸ்வரி                                      மருவிலா மனதோடு எண்ணுவோர் செயல்காக்கும் மஹாகணபதி  உருவடிவழகுடைபாலன்உருகுவோர்வினைதீர்க்கும்வடிவேலன்                                                    கருத்தினில் கருணைமிகு சிவகுடும்பத்தினை உருவேற்றுவோமே

சிவ குடும்ப அந்தாதி

எண்ணத்தில்  உன்னை முன்வைத்தே நல்வேழமுகப்                       பண்ணமுதனே செய்யும் செயல் யாவும்துவக்குவேன்                        கண்மூன்றுடை கருணாகரன் பெற்ற செல்வனே என்றும்                 மண்ணுலகில் மலமற்று வாழ்ந்திட நின் திருவடியருளுமே

அருளுமே அனைத்து இகபர சுகமும் அளவிலாஉன் கருணை             திரளுமே தூய பக்தர்கூட்டம் தினம் தினம் உன் திருவடிகாண               அரளுமே தீதுற்றோர் தீயக்கூட்டம் உன் திருநாமப்புகழ் கேட்டு                  வரளுமே வற்றாத வறுமையும் தீமையும் செந்திலானைக்கண்டு

கண்டேன் தாயே நின் சலங்கைதிகழ் கமலப்பொற்பாதம்                     கொண்டேன் அளவிலாப் பெருமகிழ்வு என்அம்மா உந்தன்                     கெண்டையம் தடங்கண் மலர் பேரெழில் கண்டு வியந்து             வண்டார் குழலியே ஈசன் என்றும் மகிழ் உமையம்மையே

அம்மை இடப்புறம் எழிலுறக்கொண்ட ஆலவாயா அன்புடன்                எம்மை எந்நாளும் ஏற்றமுறச் செய்யும் எங்கள் ஏகம்பனே            தம்மையே தந்தார்க்கு தாயுமானவனே சிறிதும் தவறாது              இம்மையும் எம்மையும் நிறைவோனே ஜெகன்நாதன் எண்ணம்

எண்ணத்தில் என்றும் ஏகமாய் நிறைந்திட்ட ஏகநாதனே   பண்ணமுதப்பேரெழிலாள் பரமேஸ்வரியுடனும் பார்புகழ்     முன்னவன்முதல்வன்விநாயகனுடன்மறவாதருளும்நம்             சின்னப்பிள்ளை செவ்வேளோடும் நிறைவாயே என் எண்ணம்

ஜகன்நாதன்

Wednesday, June 8, 2016

                                                 ஸ்ரீ முருகப்பெருமான்

   ஷடானனம்சந்தனலிப்தகாத்ரம்                                                         மகோரசம்திவ்யமயூரவாஹனம்                                          ருத்ரத்யசுனும்சூரலோகநாதம்                                                                               ப்ரம்மண்யதேவம் சரணம் ப்ரபத்யே                                
               (சுப்பிரமணிய பஞ்சரெ த்தினம் )                                                                                                            அருளுமே அனைத்து இகபர சுகமும் அளவிலாஉன் கருணை     திரளுமேதூயபக்தர்கூட்டம்தினம்தினம்உன்திருவடிகாண                                      அரளுமேதீதுற்றோர்தீயக்கூட்டம்உன்திருப்புகழ்நாமம்கேட்டு                                   வரளுமே ஜகன்நாதனின் துயரமும் கிலேசமும் உனைக் கண்டு
(ஜகன்நாதன்)
சுப்ரமண்ய பஞ்ச ரெத்தினத்தின் முதல் ஸ்லோகம் மற்றும் அடியேனின் செந்திலாண்டவன் ஸ்துதி 

Monday, June 6, 2016

                                               விநாயகர் துதி                                                                                      விநாயகப்பெருமான் முழுமுதற்கடவுளாவார் அவர் துதியோடு இன்றைய பதிவைத் துவங்குவேன்
   எண்ணத்தில் என்றும் உன்னை எண்ணி முன்வைத்தே 
   பண்ணமுதனே  செய்யும் செயல் யாவும் துவக்குவேன் 
   கண் மூன்றுடை ய கருணாகரன் பெற்ற செல்வனே என்றும் 
   மண்ணுலகில் மலமற்று வாழ்ந்திட நின் திருவடியருளுமே 

                               ஜகன்நாதன்

முக்கன்ணீசன் பெற்ற செல்வனான கணநாதனை எண்ணத்தில் முன் நிறுத்தி துவங்கிச் செய்யும்செயல்கள்  யாவும் நலமாகத் துவங்கி நன்றாக முடியும் 
அதோடு இந்த மண்ணுலகில் துன்பமின்றி வாழ்ந்திட அவனருள் துணை செய்யுமே 

Monday, November 16, 2015




சுப்பிரமணிய புஜங்கத்தின் ஆறாவது பாடல் 

கிரௌ மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா
ததா பர்வதே ராஜதே தேதிரூடா
இதீவப்ருவன் கந்தசைலாதி ரூடா
ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து (6)



கந்தநாதனுறைக்குன்றேறுவோர்ஈசனதிருவருளோடு                       அந்தக் கைலாயமேறுவது திண்ணம் என்றுணர்த்தும் நம்     சொந்தப்பிள்ளை கந்தமலையுறைவான் மலர்த் திருவடிகள்          பந்தமாய் என்றும் விடாதுநாம் உய்யப்பற்ற வாழ்கவே

கந்த நாதனுரையும் குன்று ஏறுவோர் அவன் தந்தை ஈசனருளோடு    திருக் கைலாயம் ஏறுவது திண்ணம் என்று உணர்த்தும் நம் சொந்தப் பிள்ளையான திருச்செந்திலோனின் திருவடிகளை என்றும் நாம் விடாது உய்யப் பற்றிட வாழ்கவே 

Saturday, November 14, 2015



சுப்பிரமணிய புஜங்கம் 

சுப்பிரமணிய புஜங்கத்தின் ஐந்தாவது பாடல் 

தீராத துன்பம் தீரும் 

யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா
ததைவாபத ஸந்நிதௌ ஸேவதாம்மே
இதீவோர்மி பங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹுருத் ஸரோஜே குஹம்தம் (5)

  • வந்துவந்து கரையில் மோதும்அலைகள்மறைவாற்போல்         வந்த தீவினையாவும்  நாடிவந்தவர்தம்மைவிட்டு எந்நாளும்         வந்தவழிதெரியாமல் மறையுமென்றுரைப்பார்போன்றுவிளங்கும் செந்திலுறை கந்த நாதனை என் மனத்துள் வைத்துள்ளேன்


விடாது என்னாளும் கடலிலிருந்து எழும் அலைகள் கரையில் வந்து மோதி மறைவது போல தன்னை நாடி வருபர்கள் வினைகள் யாவும் அவர்களை விட்டு மறையும் என்று உறைப்பார்ப் போலல விளங்கும் செந்தில் நாதனை என் மனதுள் வைத்துள்ளேனே 

Thursday, November 12, 2015



சுப்ரமண்ய புஜங்கத்தின் நான்காவது பாடல் 



யதா ஸந்நிதானம் கதாமானவாமே
பவாம் போதிபாரம் கதாஸ்தேததைவ
யதா ஸந்நிதானம் கதாமானவாமே
பவாம் போதிபாரம் கதாஸ்தேததைவ
இதிவ் யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் (4)
  யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் (4)


தன்சன்னிதி நாடியடைந்தோர் யாராயினும் அவர் இப்பெரு

வன் பிறவிக்கடல் நீந்துவாரென்றருளும் வடிவழகு வேலோன்  

மென்மலர் பாதமுடை அன்னை மாதேவி பராசக்தி மனமகிழ்

அன்புக்குமரன் இச்செந்திற்கறையிலுறைவோனை உள்ளுவோம்  4


அன்னை பராசக்தியின் மனம் மகிழ்  அன்புக்குமரன்  திருச்செந்தில் 

கறையில் உறைபவனான வடிவழகுறு வேலவன் தன் சன்னிதி வருபபவர்

 யாராயினும் இப்பிறவிகடல் நீந்திக் கரையேற அருள்பவன் அவன் 

திருவடிகளை மனமுருகி உள்ளுவோம்