Monday, September 1, 2025

லலிதா நாமம் - 8

 ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி 8

திங்கள்,1, செப்டம்பர் ,2025

அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் அம்பாளின் எட்டாவது திவ்ய நாமத்தைப் பார்ப்போம்.இந்த நாமம் அம்பாளின் இடது மேல் கரத்தில் உள்ள பாஸம் என்ற கயிற்றைப் பற்றிவிளக்குகின்றது

8.ௐம் ராகஸ்வரூப பாஶாட்யா  

ராகஸ்வரூப ===ஆசையின் வடிவம்                                                                                        பாஸாட்யா  === பாஸம் என்னும் கயிற்றினால் இயக்குகிறாள்

ராகம் என்றால் ஆசை என்று பொருள். பாஷா என்பது ஒரு பொருளை இழுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை கயிறு. இந்தக் கயிற்றைப் பயன்படுத்தி அவள் தன் பக்தர்களின் அனைத்து ஆசைகளையும் இழுக்கிறாள். 

ராகமாகிய ஆசைகளே பிறப்பிற்குக் காரணம்.அதனையே கட்டுகின்ற கயிறாக்க் கொண்டு ப்ரபஞ்சத்தை அவரவர் வினைகேற்ப தோற்றுவிக்கிறாள்.

வேறொரு பார்வையில் அன்னை கருணையின் காரணமாக ஆசைகளை வேரறுத்து வீடு பேறு என்னும் முக்திக்கு வழி செய்கிறாள்.

சக்திகள் மூன்று உள்ளன (இந்தச் சூழலில் சக்தி என்பது சக்திதேவியைக் குறிக்கிறது) –                                                                                               

1.இச்சா சக்தி,                                                                                                                              2.கிரியா சக்தி.    மற்றும்                                                                                                                3.ஞானசக்தி,                                                                                                            

இந்த நாமம் இச்சா சக்தி அல்லது ஆசையைப் பற்றிப் பேசுகிறது. அவள் தன் பக்தர்களை ஆசைகளில் மூழ்க விடுவதில்லை. இந்தக் கை அவளுடைய இடது மேல் கை மற்றும் அஸ்வாருதா தேவியால் குறிக்கப்படுகிறது.

இத்துடன் இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன் .நாளை ஒன்பதாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம். இந்தப் பதிவின் விளக்கத்தினை எனது குரல் வடிவிலும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேர்ருட்கருணைக்குப் பாத்திரமாகுங்கள் 



நன்றி. வணக்கம்.                                                                                                                                சிவதாஸன் ஜகன்நாதன்                                                                                                                ஓம் நமசிவாய:                                                                                                                                    திங்கள்,1, செப்டம்பர் ,2025


No comments:

Post a Comment