Monday, September 8, 2025

 

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி 14

                                                                                                                                                         ஓம் நமசிவாய:

ஸிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், 8, செப்டம்பர், 2025

அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் அம்பாளின் பதிநாலாவது திவ்ய நாமத்தைப் பார்ப்போம். இந்த நாமமும் அம்பிகையின் நாலாவது ஸ்லோகத்தில் வருகிறது . இந்த நாமம் அம்பாளின் வடிவழகினை உச்சந்தலையிலிருந்து விவரிக்கத் தொடங்குகிறது.

 இந்த பதிநாலாவது நாமாவளி அம்பாஅளின் தலை முடியை அலங்கரிக்கும் க்ரீடத்தைப் பற்றி விவரிக்கின்றது.

14. குருவிந்தமணி ஶ்ரேணீ கணத் கோடீர மண்டிதா

குருவிந்தமணி === மாணிக்கக் கற்கள்                                                             ஸ்ரேணீ === ஸரமான மாலை                                                                                          கணத் === பளபளத்து ஜ்வலிக்கும்                                                                         கோடீர  ==  உச்சி மகுடம்                                                                                            மண்டிதா === அலங்கரிக்கப் பட்டிருப்பவள்

குருவிந்தா என்பது சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு அரிய வகை மாணிக்கம். இந்த குறிப்பிட்ட வகை மாணிக்கம் விஷ்ணுவின் மீதான அன்பு, செல்வம் மற்றும் பக்தியை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது (விஷ்ணு அவளுடைய சகோதரர்).

இந்த மாணிக்கங்கள் அவளுடைய கிரீடத்தை அலங்கரிக்கின்றன. இந்த சிவப்பு கிரீடத்தால் அவளை தியானிக்கும்போது, ​​ஆன்மீகம் மற்றும் செழிப்பு அதிகரிக்கும்.

 சவுந்தர்ய லஹரி (வசனம் 42) கூறுகிறது,                                                               "உங்கள் தங்க கிரீடத்தைப் போற்றுபவர்,                                                               பன்னிரண்டு சூரியன்கள்.                                                                                 

 (பன்னிரண்டு ஆதித்யர்கள் - துவாதச ஆதித்யர்கள்,                                              ஒவ்வொருஆதித்யமும்சூரிய                                                                       மாதத்தைக் குறிக்கும்)  

நெருக்கமாகப் பதித்து,                                                                                         ரத்தினங்களாக மாற்றப்பட்டதால்,                                                                               (பிறை) சந்திரனின் தோற்றம்,                                                                 பதிக்கப்பட்ட ரத்தினங்களின் பளபளப்பால் வண்ணமயமானது,

ஸ்ரீ சக்தி மஹிம்னா (வசனம் 42)                                                                  அவளுடைய கிரீடத்தையும் விவரிக்கிறது.

இந்த நாமம் இயற்கையில் உள்ள                                                                                 அத்தனை ரத்தின்ங்களுமே                                               

அம்பாளின் அணிகலன் களாக                                                                             விவரிக்கப் படுகின்றன

ஆக ப்ரபஞ்சத்தில் உள்ள                                                                                                   அனைத்து உயர்ந்த பொருள்களுமே                                                                 அம்பாளின் உடமைகளாக வ்ர்ணிக்கப் படுகின்றன

                                                                                                           

இத்துடன் இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன் .நாளை பதினைந்தாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்

                                                                                                                                                        இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

நன்றி. வணக்கம்.                                                                                                   

ஓம் நமசிவாய:

ஸிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், 8, செப்டம்பர், 2025

No comments:

Post a Comment